TA/Prabhupada 0674 - உடலை திடமாக வைத்திருக்க எவ்வளவு சாப்பிடவேண்டும்...: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0674 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
[[Category:Tamil Pages - Yoga System]]
[[Category:Tamil Pages - Yoga System]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0673 - Un moineau essaye de sécher l'océan. Cela s'appelle la détermination|0673|FR/Prabhupada 0675 - Un dévot est un océan de miséricorde. Il veut distribuer la miséricorde|0675}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0673 – ஒரு குருவி கடல்நீரை வற்றச்செய்ய முயல்கிறதென்றால்-அதுவே மனவுறுதி|0673|TA/Prabhupada 0675 – பக்தர் என்பவர் கருணைக்கடலாவார் – அவர் எங்கெங்கும் கருணையை பரப்பவேண்டும்|0675}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 19: Line 19:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|OfMtyEkCgMQ| உடலை திடமாக வைத்திருக்க எவ்வளவு சாப்பிடவேண்டும்... <br />- Prabhupāda 0674}}
{{youtube_right|0Gmk4N0YpH4| உடலை திடமாக வைத்திருக்க எவ்வளவு சாப்பிடவேண்டும்... <br />- Prabhupāda 0674}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->



Latest revision as of 07:26, 10 July 2021



Lecture on BG 6.16-24 -- Los Angeles, February 17, 1969

பக்தர்: பிரபுபாதரே, நமக்கு எவ்வளவு உறக்கம் போதுமானது மற்றும் எவ்வளவு உணவு போதுமானது என்பதை நாமே தீர்மானிப்பது சரியா? நாம் பரிசோதனை செய்து பார்க்கிறோம், குறைத்துப் பார்க்கிறோம், எதுவரைக்கும் நம்மால்...(மங்கலாக) ஏனென்றால் பல நேரங்களில், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். நாம் நினைக்கிறோம், "ஆம், இவ்வளவு தான் எனக்கு போதுமான உணவு", அல்லது "எனக்கு ஏழிலிருந்து எடட்டு மணி நேரம் உறக்கம் தேவை", ஆனால் வாஸ்தவத்தில் நாம் வெறும் அறிவைப் பயன்படுத்தி தீர்மானிக்கிறோம். (மங்கலாக)


பிரபுபாதர்: உணவை தீர்மானிப்பதா ? இல்லை, உன் கேள்வி என்ன, எனக்கு...?


பக்தர்: நாம் நமது அறிவால் தீர்மானித்ததை நம்பலாமா ? நாம் நம்மையே நம்பலாமா, தீர்மானம் செய்ய, எவ்வளவு...?


பிரபுபாதர்: அது இருக்கவேண்டியது தான். அறிவால் தீர்மானிப்பது இருக்கவேண்டும். ஆனால் அதில் நீ தவறு செய்தால், குறைவாக உணவுக் கொண்டால், அந்த தவறில் கெடுதல் அல்ல. (சிரிப்பு) அதிகமாக சாப்பிடுவதில் தீர்மானமாக இருக்காதே. ஒருவேளை தேவையானதைவிட குறைவாக நீ சாப்பிட்டிருந்தால், அப்போது அந்த தவறில் கெடுதல் அல்ல. ஆனால் மாறாக, நீ அதிகமாக சாப்பிட்டடிருந்தால், அந்த தவறு கெடுதலானது. ஆக அறிவால் தீர்மானித்த செயல்களில் உனக்கு சந்தேகம் இருந்தால், அப்போது எல்லைக்கு குறைவான பக்கத்தில் நீ தவறை செய். எல்லையை மீறி தவரு செய்யாதே. ஆம். அந்த நம்பிக்கை... அறிவால் தீர்மானிப்பது எப்போதுமே இருக்கிறது, ஆனால் தன் உடலை திடமாக வைத்திருக்க எவ்வளவு சாப்பிடவேண்டும் என்பதை அறியும் அளவில் ஒருவருக்கு புத்தி இருக்கவேண்டும். அது எல்லோரிலும் இருக்கிறது. பொதுவாக, அதில் எந்த தவறும் இருப்பதில்லை.