TA/Prabhupada 1041 - வெறும் அறிகுறிகளின் அடிப்படையில் வைத்தியம் செய்வதால் மனிதனை ஆரோக்கியமானவன் ஆக்க முட: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
[[Category:Tamil Language]]
[[Category:Tamil Language]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|French|FR/Prabhupada 1040 - Notre mission de la vie humaine est un échec partout dans le monde|1040|FR/Prabhupada 1042 - Je vois dans votre île Maurice, vous avez assez de terres pour produire des grains alimentaires|1042}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1040 - நமது மனித வாழ்வின் குறிக்கோள், உலகெங்கிலும் தோற்றுக் கொண்டிருக்கிறது|1040|TA/Prabhupada 1042 - உங்கள் மொரிஷியஸ் நாட்டில் தானியங்கள் விளைக்க நிறைய நிலம் இருக்கிறது இந்த|1042}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 19: Line 19:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|9hnSDTM2T9c|Title to be added<br/>- Prabhupāda 1041}}
{{youtube_right|9hnSDTM2T9c|வெறும் அறிகுறிகளின் அடிப்படையில் வைத்தியம் செய்வதால் மனிதனை ஆரோக்கியமானவன் ஆக்க முடியாது<br/>- Prabhupāda 1041}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->



Latest revision as of 08:31, 19 August 2021



751001 - Lecture Arrival - Mauritius

வெறும் அறிகுறிகளின் அடிப்படையில் வைத்தியம் செய்வதால் மனிதனை ஆரோக்கியமானவன் ஆக்க முடியாது. உலகம் முழுவதும் இந்த உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்வின் உணர்வின் கீழே இருக்கிறது, பெரிய பெரிய நாடுகளை உட்பட. உங்கள் பிரதமரும் ஐக்கிய நாடுகளுக்கு சென்றுள்ளார். ஐக்கிய நாடுகளில் பல பெரிய பெரிய நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவார்கள், கடந்த முப்பது வருடங்களாகப் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் அமைந்துள்ளது, ஆனால் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காண முடியவில்லை, ஏனென்றால் அடிப்படை கொள்கையை உணர தவரிவிடுகிறார்கள், அவர்கள் அறிவதில்லை. அவர்களில் ஒவ்வொருவரும் உடலின் அடிப்படையிலேயே யோசிக்கிறார்கள். "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் ஜெர்மன்," "நான் ஆங்கிலேயன்," அப்படி. ஆகையால் எந்த தீர்வும் கிடைப்பதில்லை, ஏனென்றால் அடிப்படை கருத்திலேயே பிழை இருக்கிறது. உடலில் செயல்படும் அடிப்படை கொள்கையில் என்ன பிழை என்பதை அறியாமல், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. உதாரணமாக நோயின் மூல காரணத்தை ஆராயாமல், வெறும் அறிகுறிகளின் அடிப்படையில் வைத்தியம் செய்வதால் மனிதனை ஆரோக்கியமானவன் ஆக்க முடியாது. அது சாத்தியம் இல்லை. ஆக நம் கிருஷ்ண பக்தி இயக்கம் உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்வின் கருத்தை சார்ந்தது கிடையாது. இந்த இயக்கம் ஆன்மாவை அடிப்படையாகக் கொண்டது. ஆன்மா என்பது என்ன, ஆன்மாவின் தேவைகள் என்ன, ஆன்மா எவ்வாறு நிம்மதி, மகிழ்ச்சி அடையும். பிறகு எல்லாம் சரியாக இருக்கும்.