TA/Prabhupada 1045 - நான் என்ன சொல்வது? ஒவ்வொரு அறிவற்றதும் ஏதாவது அறிவற்றதை உளறும். நான் எப்படி அதை கட்டுப: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
[[Category:Tamil Language]]
[[Category:Tamil Language]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|French|FR/Prabhupada 1044 - Dans mon enfance, je ne voudrais pas prendre du médicament|1044|FR/Prabhupada 1046 - Décidez si vous souhaitez obtenir un corps qui sera capable de danser, parler et jouer avec Krishna|1046}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1044 - நான் சிறுவனாக இருந்த போது மருந்துகளை சாப்பிடமாட்டேன்|1044|TA/Prabhupada 1046 - கிருஷ்ணருடன் பேசி, விளையாடி, ஆடக்கூடிய ஒரு உடலைப் பெறுவதா என்று முடிவு செய்யுங்கள்|1046}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 19: Line 19:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|snduVquNmv4|Title to be added<br/>- Prabhupāda 1045}}
{{youtube_right|snduVquNmv4|நான் என்ன சொல்வது? ஒவ்வொரு அறிவற்றதும் ஏதாவது அறிவற்றதை உளறும். நான் எப்படி அதை கட்டுப்படுத்த முடியும்?<br/>- Prabhupāda 1045}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->



Latest revision as of 08:32, 19 August 2021



751002 - Interview - Mauritius

நான் என்ன சொல்வது? ஒவ்வொரு அறிவற்றதும் ஏதாவது அறிவற்றதை உளறும். நான் எப்படி அதை கட்டுப்படுத்த முடியும்? பேட்டியாளர் (4) : வெளிச்சம், பல தீபங்களிலிருந்து வரும் என்பதை தான் இந்திய தத்துவம் கற்ப்பித்திருக்கிறது. ஆனால் நீங்கள் பிரசாரம் செய்வது... பிரபுபாதர்: என்ன ? பிரம்மானந்தன்: இந்திய கலாச்சாரம், வெளிச்சம், பல தீபங்களிலிருந்து வரும் என்பதை தான் எப்பொழுதும் கற்ப்பித்திருக்கிறது என்கிறான்.. பேட்டியாளர் (4): உங்கள் பிரசாரம் வெறும் கீதையிலிருந்து மட்டுமே உள்ளது. பிரபுபாதர்: ஆம். அது மீஉயர்ந்த வெளிச்சம். வெளிச்சம் வெவ்வேறு அளவில் உள்ளது. சூரிய வெளிச்சம் இருக்கிறது மற்றும் இந்த வெளிச்சம் இருக்கிறது. இந்த வெளிச்சத்தை சூரிய வெளிச்சத்துடன் ஒப்பிட முடியாது. (சிரிப்பு) வெளிச்சம் எல்லாவற்றிலிருந்தும் வருகிறது, ஆனால் அதற்கு சூரிய வெளிச்சமும் இந்த வெளிச்சமும் ஒன்று என்று அர்த்தம் இல்லை. பேட்டியாளர் (4): இல்லை, நான் என்ன... பிரபுபாதர்: முதலில் நீ இதை புரிந்துகொள். நீ வெளிச்சத்தை பற்றி விசாரித்தாய். வெளிச்சம் வெவ்வேறு அளவில் உள்ளது என்பதை முதலில் நீ புரிந்துகொள். சூரிய வெளிச்சமும் இந்த வெளிச்சமும் ஒன்று என்று உன்னால் சொல்லமுடியாது. பேட்டியாளர் (4): அப்படி என்றால், வேறு வெளிச்சத்தை சார்ந்தோர் அதாவது குரான் அல்லது பைபிளிலிருந்து வரும் கற்பித்தல், குறைந்த வெளிச்சமானது என்கிறீர்கள்... பிரபுபாகர்: அது உங்கள்... ஆராய்வது உங்கள் வேலை. ஆனால் வேளிச்சம் எல்லாவற்றிலிருந்தும் வருகிறது என்ற யோசனையை நாங்கள் உனக்கு கொடுத்துள்ளோம். இது ஒரு மின்மினிப் பூச்சி. அந்த வெளிச்சமும் வெளிச்சம் தான் மற்றும் சூரிய வெளிச்சமும் வெளிச்சம் தான். மின்மினிப் பூச்சியின் வெளிச்சமும் சூரிய வெளிச்சம்மும் சமானம் படுத்த முடியாது. எது மின்மினிப் பூச்சி வெளிச்சம், எது சூரிய வெளிச்சம் என்பதை புரிந்துகொள்வது உங்கள் வேலை. அது உங்கள் வேலை. பேட்டியாளர் (6) (இந்தியன்): குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் என்ன விமர்சிக்கப்படுகிறது என்றால், உங்கள் இயக்கம் சில ஏகாதிபத்தியம் கொண்ட நாடுகளின் ஆதரவில் இருக்கிறது. நீங்கள்...? பிரம்மானந்தன்: நம் இயக்கத்திற்கு, சில ஏகாதிபத்தியம் கொண்ட நாடுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஏதோ குற்றச்சாட்டு உள்ளது என்கிறான். பிரபுபாதர்: அவர்கள் என்ன வேணும்னாலும் உளரட்டும். நான் என்ன சொல்வது? ஒவ்வொரு அறிவற்றதும் ஏதாவது அறிவற்றதை உளறும். நான் எப்படி அதை கட்டுப்படுத்த முடியும்? அறிவற்றவை பலர் உள்ளன; ஆகையால் நாங்கள் அவையை எல்லாம் மனிதர்கள் ஆக்க முயற்சி செய்கிறோம். அது தான் எங்கள் திட்டம். முட்டாள்தனமாக இருக்கும்வரை அவர் உளரிக்கொண்டு தான் இருப்பார். அதற்கு நான் என்ன செய்வது? பேட்டியாளர் (4): ஸ்வாமிஜி, எனக்கு ஒரு விஷயம் தெரிந்துகொள்ள விருப்பம். இந்த ஸ்லோகத்தை எவ்விடத்திலிருந்து குறித்தீர்கள், இந்த ஸ்லோகம், லாவண்யம் கேச-தாரணம்? இந்த ஸ்லோகம், லாவண்யம் கேச-தாரணம். பிரபுபாதர்: ஆம். இது ஸ்ரீமத் பாகவதத்தின் பன்னிரண்டாம் காண்டத்தின் மூன்றாம் அத்தியாயத்தில் இருக்கிறது. (ஒருவர்:) உங்களிடம் முழு பாகவதமும் இருக்கிறதா, பன்னிரண்டாம் காண்டம்? புஷ்த கிருஷ்ணன்: எங்களிடம் இல்லை. பிரபுபாதர்: இதை குறித்துக் கொள்.