TA/Prabhupada 0659 – நீங்கள் உண்மையாகவும், அடக்கமாகவும் கேட்டால் போதும் – கிருஷ்ணரைப் புரிந்துக்கொள்வீர: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0659 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0658 - Srimad-Bhagavatam Is The Supreme Jnana-yoga and Bhakti-yoga Combined|0658|Prabhupada 0660 - If You Simply Restrain Your Sex Life, You Become A Very Powerful Man|0660}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0658 – ஸ்ரீமத் பாகவதம் உன்னத பக்தியோகமும், ஞானயோகமும் இணைந்த கலவையாகும்|0658|TA/Prabhupada 0660 – நீங்கள் பாலியல் விவகாரங்களைக் கட்டுபடுத்தினால், மிகவும் சக்திவாய்ந்தவராய் ஆகலாம்|0660}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:26, 28 August 2021



Lecture on BG 6.13-15 -- Los Angeles, February 16, 1969

பிரபுபாதர்: ஆம்.

பக்தர்: பிரபுபாத கிருஷ்ணருக்கு நாம் புரிந்துகொள்ளும் வகையில் கைகள் இல்லை, கண்கள் இல்லை, உருவம் இல்லை. பின்னர் விக்ரகங்களும் படங்களிலும் கொடுக்கப்பட்டுள்ள கிருஷ்ணரின் உருவத்தை எப்படி புரிந்து கொள்வது?

பிரபுபாதர்: ஆமாம், அதையும் நான் விளக்கியிருக்கிறேன். அவருக்கு சேவை செய்வதன் மூலம் அவரே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். உன்னுடைய ஏறுமுக வழியினால் அவரைப் புரிந்துகொள்ள முடியாது. கிருஷ்ணருக்கு தொண்டு புரிய வேண்டும் அவர் உனக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். இது பகவத்கீதையின் பத்தாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேஷாம் ஏவானுகம்பார்தம்
அஹம் அஜ்ஞான-ஜம் தம:
நாஷயாம்யாத்ம-பாவ-ஸ்தோ
ஜ்ஞான-தீபேன பாஸ்வதா
(ப.கீ. 10.11)

"என்னுடைய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அபிமானம் காட்டுவதற்காக," தேஷாம் ஏவானுகம்பார்தம், அஹம் அஜ்ஞான-ஜம் தம: நாஷயாமி. "நான் அனைத்து விதமான அறியாமை என்னும் இருளையும் அறிவு என்னும் வெளிச்சத்தினால் போக்குகிறேன்." கிருஷ்ணர் உனக்குள்ளேயே இருக்கிறார். நீயும் உண்மையாக கிருஷ்ணரை தேடும்போது பக்தித் தொண்டின் மூலம், பகவத்கீதையில் பதினெட்டாவது அத்தியாயத்தில் பக்த்யா மாம் அபிஜாநாதி (ப.கீ. 18.55) என்று கூறியுள்ளது போல. "என்னை இந்த பக்தித் தொண்டினால் மட்டுமே அறிய முடியும்." பக்தியா. பக்தி என்றால் என்ன? பக்தி என்பது ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ (ஸ்ரீ.பா. 7.5.23). விஷ்ணுவைப் பற்றி கேட்டாலும் ஜபித்தாலும் மட்டுமே. இதுவே பக்தியின் தொடக்கம்.

நீ உண்மையாகவும் பணிவாகவும் கிருஷ்ணரைப் பற்றி கேட்டாலே அவரை புரிந்துகொள்ள முடியும். கிருஷ்ணரே உன்னிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாத சேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம், இதுவே ஒன்பது விதமான வழிகள். வந்தனம் வழிபடுதல் அதுவும் பக்திதான். சிரவணம் கேட்டல். கிருஷ்ணரைப் பற்றி பகவத் கீதையின் மூலம் கேட்பது போல். அவருடைய புகழை ஜபித்தல் ஹரே கிருஷ்ணா. இதுவே தொடக்கம். ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ (ஸ்ரீ.பா. 7.5.23). விஷ்ணு என்றால், இதுதான்... அனைத்துமே விஷ்ணு. தியானம் என்பது விஷ்ணு. பக்தி என்பதும் விஷ்ணு. விஷ்ணு இல்லாமல் இல்லை. கிருஷ்ணரே விஷ்ணுவின் முழு முதல் தோற்றம். கிருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம். (ஸ்ரீ.பா. 1.3.28). கிருஷ்ணரே முழுமுதற்கடவுள். நாம் இந்த வழிமுறையை பின்பற்றினால் அவரை சந்தேகமின்றுப் புரிந்து கொள்ளலாம்.