TA/Prabhupada 0658 – ஸ்ரீமத் பாகவதம் உன்னத பக்தியோகமும், ஞானயோகமும் இணைந்த கலவையாகும்
Lecture on BG 6.13-15 -- Los Angeles, February 16, 1969
பக்தர்கள்: எல்லாப் புகழும் ஸ்ரீல பிரபுபாதர் அவர்களுக்கே.
பிரபுபாதர்: ஹரே கிருஷ்ணா. சாங்கிய யோகமே அஷ்டாங்க யோகம். சரியான முறையில் அமர்ந்து தியானம் செய்வதே சாங்கிய யோகம் எனப்படும். ஞான யோகம் என்பது தத்துவ வழிமுறை. பிரம்மன் என்பது எது பிரம்மன் அல்லாதது எது என்று ஆராய்ந்து அறிவதே ஞான யோகம். நேத்தி நேத்தி. வேதாந்த சூத்திரத்தை போன்றது, ஞான யோகம். வேதாந்த சூத்திரத்தை படித்தால் ஜன்மாத்யஸ்ய யத: (ஸ்ரீ.பா. 1.1.1). பரப்பிரம்மம் என்ன என்பதை அது கோடிட்டுக் காட்டுகிறது, பிரம்ம ஞானத்தில் இருந்து தான் அனைத்தும் வெளிப்படுகிறது. இப்போது நாம் அது என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். ஸ்ரீமத் பாகவதத்தில் அது விளக்கப்பட்டுள்ளது. பிரம்ம ஞானத்தின் தன்மை என்ன. ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது: பிரம்ம ஞானம், ஜன்மாத்யஸ்ய யதோ 'ந்வயாத் இதரதஷ் சார்தேஷ்வபிஜ்ஞ: ஸ்வராட் (ஸ்ரீ.பா. 1.1.1). பிரம்மஞானமே அனைத்து சிருஷ்டிக்கும் பிரதான காரணம் என்றால் அதன் அறிகுறிகள் என்ன? பாகவதம் அவன் அனைத்தும் அறிந்தவனாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. உயிரற்றவனல்ல. அனைத்தும் அறிந்தவனாக இருக்க வேண்டும். எந்த மாதிரியான அறிதல்? அன்வயாத் இதரதஷ் சார்தேஷு. நானும் அறிந்திருக்கிறேன் நீயும் அறிந்திருக்கிறாய். ஆனால் என்னையே எனக்குத் தெரியாது, என் உடலில் எத்தனை மயிர் கூறுகள் இருக்கிறது என்று எனக்கு தெரியாது. நான் இது என்னுடைய தலை என்று கூறுகிறேன். ஆனால், "உங்கள் தலையில் எத்தனை மயிர் கூறுகள் இருக்கின்றன?" என்று ஒருவரைக் கேட்டால்?" அந்த அறிவுக்கு பெயர் அறிவல்ல. உத்தம புருஷர் அனைத்தையும் நேரடியாகவும் வேறு விதமாகவும் அறிவார் என்று பாகவதம் கூறுகிறது. நான் உண்கிறேன் என்பது எனக்கு தெரியும், ஆனால் எனது உணவு முறை எனது ரத்த ஓட்டத்திற்கு எப்படி உதவியாக இருக்கிறது என்று எனக்கு தெரியாது, அது எவ்வாறு மாற்றமடைகிறது, எப்படி வேலை செய்கிறது, நரம்புகளுக்குள் எப்படி செல்கிறது. எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் கடவுளுக்கு அத்தனையும் தெரியும்- இந்த படைப்பில் ஒவ்வொரு மூலையிலும் என்ன நடக்கின்றது என்பது அவனுக்குத் தெரியும். எனவே பாகவதம் சொல்கிறது, எல்லாம் எதிலிருந்து உருவானதோ அந்த முழுமுதல் உண்மையானது, அவர் முதன்மையாக அறிந்தவர். அனைத்தும் அறிந்தவர்.
"இத்தனை வலிமை வாய்ந்தவராகவும், புத்திசாலியாகவும், அறிந்தவராகவும் இருப்பாரானால் அவர் அவரைப்போன்ற ஒருவரிடமிருந்து இதனை கற்றிருக்க வேண்டும்..." என்று நீ கேட்கலாம். இல்லை. வேறு ஒருவரிடம் இருந்து அந்த அறிவை அவர் கற்கிறார் என்றால் அவர் கடவுளாக முடியாது. சுவராட் தன்னிச்சையாக. அவர் சுதந்திரமானவர். அதுவே ஞான யோகம். அதன் தன்மையை விளக்கும் கல்வி... அனைத்தும் எதிலிருந்து உருவானதோ அந்த பரம்பொருளின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று ஆராய்ந்து பார்த்தல். அதுவே ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்ரீமத் பாகவதம் உயர்ந்த ஞான யோகம் மற்றும் பக்தி யோகத்தின் கலவை. ஆமாம். பரம்பொருளைத் தேடுவதற்கும் அதன் தன்மையை புரிந்து கொள்வதற்கும் தத்துவ வழிமுறையைப் பின்பற்றுவதே, ஞான யோகம் எனப்படும். நம்முடையது பக்தியோகம். பக்தி யோகம் என்பது, வழிமுறை அதுதான், குறிக்கோளும் அதுதான். ஒருவர் இறுதி குறிக்கோளான பரம்பொருளை அடைய தத்துவ வழியில் முயற்சி செய்கிறார், மற்றொருவர் பரம்பொருள் மேல் தன் மனதை ஒருநிலைப் படுத்த முயற்சி செய்கிறார், மற்றவர் அதாவது பக்தர்கள், அவர் தன்னை வெளிக்காட்டும் வண்ணம் பரம புருஷ பகவானுக்கு தொண்டு செய்வதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஒரு வழிமுறை ஏறுமுகமாக புரிந்து கொள்வது. மற்றொன்று இறங்குமுகமானது. இருளில் சூரியனை அறிய எண்ணி ஏறுமுகம வழியை பின்பற்றினால், வானவூர்தியை பயன்படுத்தி மேலே பறந்து செல்வோமானால், விண்ணை சுற்றிப் பார்க்க முற்பட்டால் பார்க்க முடியாது. ஆனால் இறங்குமுக வழியில், சூரியன் எழும் பொழுது, அதனை உடனே அறிய முடியும். ஏறுமுக வழி - அதாவது எனது முயற்சி, தூண்டும் வழிமுறை. தூண்டும் வழிமுறை. மனிதனுக்கு மரணம் உண்டு என்று என் தந்தை சொல்வதை ஏற்றுக் கொள்வது போல. மனிதனுக்கு மரணம் உண்டு என்பதை கற்றறிய வேண்டுமானால் கற்றுக்கொள், நீ பல ஆயிரக்கணக்கான மக்களை பார்க்கிறாய், அவர்களுக்கு மரணம் உண்டா இல்லையா. அதனை அறிய பல காலம் பிடிக்கும். ஆனால் அந்த அறிவினை நீ உயர் அதிகாரியிடம் இருந்து, மனிதனுக்கு மரணம் உண்டு என்று அறிய நினைத்தால் உனது அறிவு முழுமை பெறும்.
எனவே அதாபி தே தேவ பதாம்புஜ-த்வய-ப்ரஸாத-லேஷானுக்ருஹீத ஏவ ஹி ஜாநாதி தத்த்வம் பகவன்-மஹிம்னோ ந சான்ய ஏகோ 'பி சிரம் விசின்வன் (ஸ்ரீ.பா. 10.14.29) "எம்பெருமானே, உன்னிடமிருந்து சிறு உதவியை பெற்றவனும், உன்னை வெகு விரைவில் புரிந்து கொள்ள முடியும். உன்னை ஏறுமுக முறையில் அறிந்து கொள்ள முற்படும் மற்றவர்களால், எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது." அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். விரக்தியும் குழப்பமே அடைவார்கள். "கடவுள் ஒரு பூஜ்யம்," அத்துடன் அனைத்தும் முடிந்துவிடும். கடவுள் பூஜ்யம் என்றால் எத்தனை பூஜ்ஜியங்கள் அதிலிருந்து வெளியாகும்? கடவுள் பூஜ்யம் அல்ல. பாகவதம் சொல்கிறது வேதாந்தம் சொல்கிறது ஜன்மாதி அஸ்ய யாதோ (ஸ்ரீ.பா 1.1.1). அனைத்தும் பரம்பொருளில் இருந்துதான் உத்பவம் ஆகிறது. அது எப்படி உருவாகிறது என்பதை தான் நாம் கற்க வேண்டும். அதுவும் விளக்கப்பட்டிருக்கிறது எந்த முறையில், எப்படி அறிந்து கொள்வது என்பதெல்லாம். அதுவே வேதாந்த சூத்திரம். வேதாந்தம் என்றால் அறிவின் உச்சம். வேதம் என்றால் அறிவு, அந்தம் என்றால் முடிவு. எனவே வேதாந்தம் என்றால் இறுதியான அறிவு. இறுதியான அறிவு முழுமுதற் கடவுளே.