TA/Prabhupada 0680 – நாம் தரையின்மேல் அமர்ந்திருப்பதாய் நினைக்கிறோம் –உண்மையில் கிருஷ்ணரின்மேல் அமர்ந்: Difference between revisions
(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0680 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...") |
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items) |
||
Line 9: | Line 9: | ||
<!-- END CATEGORY LIST --> | <!-- END CATEGORY LIST --> | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | <!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | ||
{{1080 videos navigation - All Languages| | {{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0679 – தெரிந்தோ தெரியாமலோ கிருஷ்ணப் பிரக்ஞையில் எதைச் செய்தாலும், அதற்கு பயனுண்டு|0679|TA/Prabhupada 0681 – நீங்கள் கிருஷ்ணரின்மேல் அன்புசெலுத்தினால், பின்னர் உமது உலக அன்பு கணக்கிடப்படும்|0681}} | ||
<!-- END NAVIGATION BAR --> | <!-- END NAVIGATION BAR --> | ||
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> | <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> |
Latest revision as of 07:55, 25 June 2021
Lecture on BG 6.25-29 -- Los Angeles, February 18, 1969
எனவே ," உண்மை யோகி, என்னை எல்லா உயிர்களிலும் காண்கிறான். என்னில் எல்லா உயிர்களையும் காண்கிறான். எப்படி "என்னில்" ? எப்படியென்றால், நீங்கள் எதையெல்லாம் பார்கிறீர்களோ அதெல்லாம் க்ருஷ்ணரே. நீங்கள் இந்த தரையில் அமர்ந்து இருக்கிறீர்கள், எனவே நீங்கள் கிருஷ்ணர் மீது அமர்ந்து இருக்கிறீர்கள். நீங்கள் இந்த விரிப்பின் மீது அமர்ந்து இருக்கிறீர்கள் எனில் நீங்கள் கிருஷ்ணர் மீது அமர்ந்து இருக்கிறீர்கள். இதை நீங்கள் அறிய வேண்டும். இந்த விரிப்பு எப்படி கிருஷ்ணர் ஆகும்? எப்படி என்றால் , இந்த விரிப்பு ,கிருஷ்ணரின் சக்தியால் செய்யப்பட்டிருக்கிறது.
இரண்டு வகையான சக்திகள் உண்டு. பராஸ்ய ஷ2க்திர் விவிதை4வ ஷ்2ரூயதே (சை.சரி . மத்ய 13.65, பொருளுரை) பகவானுக்கு பல்வேறு சக்திகள் உண்டு. பல்வேறு சக்திகள் இருந்தாலும், அடிப்படையில் மூன்று பிரிவுகள் உள்ளன. பௌதிக சக்தி, ஆன்மிக சக்தி, நடுனிலை சக்தி. உயிர்வாழிகளான நாம், நடுனிலை சக்தி ஆவோம். இந்த முழு ஜட உலகமுமே, பௌதிக சக்தி தான். மேலும் ஆன்மிக சக்தி ஒன்று இருக்கிறது. ஆன்மிக உலகம். நாம் நடு நிலை ஆவோம். எனவே நாம் பௌதிக சக்தியிலோ அல்லது ........ நடு நிலை என்றால் இந்தப் பக்கமோ அல்லது அந்தப் பக்கமோ. நீங்கள் ஆன்மீகமாகவோ அல்லது பௌதீகமாகவோ ஆகமுடியும். இதில் மூன்றாவதாக எதுவும் இல்லை. நீங்கள் பௌதிகவாதியாக வேண்டும், அல்லது ஆன்மிகவாதியாக வேண்டும். எனவே, நீங்கள் பௌதிக உலகத்தில் இருக்கும் வரை, நீங்கள் பௌதிக சக்தியின் மேல் அமர்ந்திருக்கிறீர்கள்.அதனால் நீங்கள் க்ருஷ்ணரின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். ஏனென்றால் , சக்தி க்ருஷ்ணரிடமிருந்து பிரியவில்லை. இந்த விளக்கைப் போல, இதில் வெப்பமும் இருக்கிறது, வெளிச்சமும் இருக்கிறது. வெப்பம் நெருப்பிலிலிருந்து பிரியவில்லை, வெளிச்சமும் நெருப்பிலிருந்து பிரியவில்லை. எனவே ஒருவகையில், வெப்பம் நெருப்பே ஆகும், வெளிச்சமும் நெருப்பே ஆகும். அதைப் போலவே, இந்த பௌதிக சக்தியும் க்ருஷ்ணரே. உண்மையில், நாம் தரையின் மீது அமர்ந்திருப்பதாக நினைத்தாலும், நாம் க்ருஷ்ணரில் தான் அமர்ந்திருக்கிறோம். இதுவே தத்துவம்.
மேலும், " என்னில் எல்லாவற்றையும் காண்கிறான்" உண்மையில், தன்னுணர்வு உடையவன் பரம புருஷரான என்னையே எங்கும் காண்கிறான். இதுவே எல்லாவற்றிலும் காண்பதாகும். எல்லா இடத்திலும் க்ருஷ்ணரைக் காண்பது என்றால், எல்லா உயிர்வாழிகளையும், எல்லாப் பொருட்களையும் க்ருஷ்ணருடன் தொடர்பு படுத்தி பார்ப்பது தான். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல, ரஸோ 'ஹம் அப்ஸு கௌந்தேய (ப,கீ 7.8) " நானே நீரின் சுவை. " ஏன் எல்லா உய்ர்வாழிகளாலும் நீர் அருந்தப் படுகிறது? விலங்குகள், பறவைகள், மனிதர்கள், எல்லோருமே தண்ணீரைக் குடிக்கிறார்கள். எனவே தான் தண்ணீர் அந்த அளவுக்கு தேவையாக இருக்கிறது. க்ருஷ்ணரும் , நமக்கு , அந்த அளவுக்கு தண்ணீரை அளித்திருக்கிறார். பார்த்தீர்களா?தண்ணீர் நிறையத் தேவைப்படுகிறது. விவசாயத்திற்கு, துவைப்பதற்கு, குடிப்பதற்கு. சரியான சமயத்தில் ஒரு குவளை நீர் கிடைக்கவில்லை என்றால், ஒருவன் இறந்து போவான். போர்க்களத்தின் அனுபவம் உள்ளவர்களுக்கு, எந்த அளவிற்கு தண்ணீர் முக்கியம் என்று தெரியும். சண்டையின் போது , தாகம் ஏற்பட்டு, தண்ணீர் இல்லாமல் போனால், அவர்கள் இறந்து போவார்கள். ஏன் தண்ணீர் அவ்வளவு மதிப்புடையதாக இருக்கிறது?, ஏனென்றால் அது சுவையுடையதாக இருக்கிறது. நீங்கள் மிகவும் தாகமாக இருக்கும் போது, சிறிது நீர் அருந்தினால், " ஒ, கடவுளே, நன்றி" எனவே தான் க்ருஷ்ணர் கூறுகிறார் " நானே அந்த சுவை, உயிரை மீட்கும் அந்த சுவை, நானே " என்று க்ருஷ்ணர் கூறுகிறார். எனவே, இந்த கொள்கையை நீங்கள் கற்றுக்கொண்டீர்களானால், நீங்கள் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம், க்ருஷ்ணரை காணலாம். மேலும் ,எப்போது நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியும்? இதுவே க்ருஷ்ண உணர்வு என்பதாகும். ரஸோ 'ஹம் அப்ஸு கௌந்தேய ப்ரபா4ஸ்மி ஷ2ஷி2-ஸூர்யயோ:. "நானே சூரிய சந்திரர்களின் ஒளி" எனவே இரவோ அல்லது பகலோ, நீங்கள் சூரிய ஒளியையோ சந்திர ஒளியையோ பார்த்தே ஆக வேண்டும். என்றால் , நீங்கள் எப்படி கிருஷ்ணரை மறக்க முடியும்? நீங்கள் நீர் அருந்தினாலும் , சூரிய ஒளியை பார்த்தாலும், சந்திர ஒளியை பார்த்தாலும் , சில சப்தங்களை கேட்டாலும் ஷ2ப்3தோ3 ‘ஹம் (ஸ்ரீமத் . பா 11.16.34) இவ்வாறு பல விஷயங்கள் உள்ளது. எப்படி க்ருஷ்ணர் எங்கும் நிறைந்தவராக இருக்கிறார் என்று நீங்கள் நான்காம் அத்தியாயத்தில் படித்துள்ளீர்கள். எனவே , இந்த வகையில் ஒருவன் கிருஷ்ணரைக் காண வேண்டும். அதன்பிறகு நீங்கள் யோகத்தின் பூரணத்துவத்தை அடையலாம் "உண்மை யோகி, என்னை எல்லா உயிர்களிலும், என்னில் எல்லா உயிர்களையும் காண்கிறான்." உண்மையில், தன்னுணர்வு உடையவன் பரம புருஷரான என்னையே எங்கும் காண்கிறான் " என்று இங்கே கூறப்பட்டிருக்கிறது.