TA/Prabhupada 0791 - ஒருவன் தனது அன்பு மற்றும் பக்தி சேவைகளின் மூலமாக கடவுளைத் திருப்திபடுத்தவேண்டும்: Difference between revisions
(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0791 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...") |
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items) |
||
Line 7: | Line 7: | ||
<!-- END CATEGORY LIST --> | <!-- END CATEGORY LIST --> | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | <!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | ||
{{1080 videos navigation - All Languages| | {{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0790 - பிறர் மனைவியோடு எவ்வாறு நட்பு கொள்வது, பிறர் பணத்தை எவ்வாறு தந்திரமாய் எடுத்துக்கொள்|0790|TA/Prabhupada 0792 - கிருஷ்ணர் அனைவரோடும் நட்பு பாராட்டாமலிருந்தால், எவரும் ஒரு நொடிகூட வாழமுடியாது|0792}} | ||
<!-- END NAVIGATION BAR --> | <!-- END NAVIGATION BAR --> | ||
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> | <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> |
Latest revision as of 07:28, 19 July 2021
Lecture on SB 7.9.11 -- Montreal, August 17, 1968
முந்தைய ஸ்லோகத்தில் இது விளக்கப்பட்டுள்ளது அதாவது பௌதிக செல்வமோ, அல்லது தகுதி வாய்ந்த பிராமணரின் உயர்ந்த 12 குணங்களோ, இவற்றை அடைவதால், பகவானை திருப்திப்படுத்த முடியாது. தூய அன்பினாலும், பக்தி தொண்டினாலும் மட்டுமே பகவானைத் திருப்தி படுத்த முடியும். ஏன்? அவர்...... பிறகு ஏன் இவ்வளவு செல்வங்கள் படைக்கப்பட்டு, அழகிய கோயில்களையும் சர்ச்சுகளையும் கட்டுவதிலும் பயன்படுத்தப்படுகிறது? இது பகவானைத் திருப்தி படுத்துவதில்லையா? பிறகு ஏன் அவர்கள் இவ்வளவு அதிகமான செல்வத்தை செலவழிக்கிறார்கள்? நவீன பொருளாதார அறிஞர்கள், இது ஒரு வீணான முதலீடு என்று கூறுகிறார்கள். காரணம் நீங்கள் மிகப் பெரிய கோயிலைக் கட்டினால்.... இந்தியாவில் இதுபோல் பல கோயில்கள் உள்ளன, குறிப்பாக தென்னிந்தியாவில், ஒவ்வொன்றும் கோட்டை போல, மிகப்பெரும் கோட்டை போல உள்ளன. ரங்கநாதத்தில் ஒரு கோவில் உள்ளது. அது சில மைல்கள் பரந்துள்ள கோவில். அதற்கு ஏழு வாயில்கள் உள்ளன. மிகப்பெரும் கோவில். மேலும் பல கோயில்களும் உள்ளன. அதைப் போலவே உங்கள் நாட்டிலும் பல அழகிய சர்ச்சுகள் உள்ளன. நான் அமெரிக்கா எங்கும் பயணம் செய்தபோது, நான் பல பெரிய சர்ச்சுகளை பார்த்திருக்கிறேன். இங்கும் மான்ட்ரியலிலும் பெரிய சர்ச்சுகள் பல உள்ளன. ஆக அவர்கள் ஏன் இவ்வளவு பணத்தை இதில் செலவிடுகிறார்கள் நவீன பொருளாதார நிபுணர்கள், இது லாபமற்ற முதலீடு என்று கூறினாலும் ஏன் இவ்வாறு செலவிடுகிறார்கள்?
ஆக இந்த சர்ச்சுகளை கட்டுவதோ, அல்லது கோவில்களை கட்டுவதோ அல்லது மசூதிகளை கட்டுவதோ இது தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கிறது. மக்கள் தங்களுடைய பணத்தை, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, ஏன்? பயனற்ற? லாபம் தராத வற்றில் செலவிடுகிறார்களா? இல்லை. அவர்கள் அறியவில்லை. இது எவ்வளவு லாபகரமானது என்பதை அவர்கள் அறியவில்லை. எனவேதான் இந்த கடவுள் அற்ற நாகரீகத்தில் அவர்கள் கோயில் கட்டுவதையும் அலங்கரிப்பதையும் நிறுத்திவிட்டார்கள். விருந்தாவனத்தில் ஏழு அடுக்கு மாடி கொண்ட கோவிந்தரின் கோயில் இருந்தது. சில அரசியல் காரணங்களுக்காக அவுரங்கசீப் அதன் நான்கு தளங்களை உடைத்து விட்டான். இன்னமும் மூன்று தளங்கள் உள்ளன. யாராவது அங்கே சென்றால், எவ்வளவு அழகிய வேலைப்பாடுகள் அந்த கோயிலில் உள்ளன என்பதை காணலாம். எனவே அந்த அரசர்களும் பெரும் பணக்காரர்களும், முட்டாள்கள் என்று பொருளா? தற்போதைய காலத்தில் வாழ்பவர்கள் மட்டும் மிகவும் புத்திசாலியா? இல்லை. அப்படி அல்ல அவர்கள் முட்டாள்கள் அல்ல. இது பிரகலாத மகாராஜாவின் பிரார்த்தனைகளில் விளக்கப்பட்டுள்ளது. நைவாத்மன: ப்ரபுர் அயம்' நிஜ-லாப-பூர்ணோ (SB 7.9.11). நீங்கள் அழகிய கோயில் கட்டுவதனால் உன்னதமான பகவானை திருப்திப்படுத்த முடியாது, ஆனாலும் அவர் திருப்தி அடைந்தவராக இருக்கிறார். ஆனாலும் அவர் திருப்தி அடைந்தவர். அவர்நிஜ-லாப-பூர்ணோ. அவருக்கு எந்தத் தேவையும் இல்லாத காரணத்தினால் அவர் தன்னுள்ளே திருப்தி அடைந்து இருக்கிறார். நமக்கு தேவைகள் இருக்கிறது. நான் ஒரு சின்ன குடியிருப்பை வாடகை எடுத்துள்ளேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். யாராவது கூறினால், "சுவாமிஜி, வாருங்கள். நான் உங்களுக்கு மிக அழகிய கோயிலை கட்டித் தருகிறேன். நீங்கள் இங்கே வாருங்கள்." ஓ, நான் மிகவும் கடமைப் பட்டவன் ஆவேன். ஆனால் கிருஷ்ணர், கடவுள், அது போலவா? அவர் மிக அழகிய கிரகங்களை, ஒன்றிரண்டு மட்டும் அல்ல, கோடிக்கணக்கான, அதுவும் நிறைய அழகிய கடல்கள், குன்றுகள், மலைகள், காடுகள் மேலும் உயிர் வாழிகளால் நிறைந்தவை. எனவே அவர் ஏன் நான் கட்டும் கோயிலுக்கு ஆசைப்படுகிறார்? இல்லை. இது உண்மை இல்லை.