TA/Prabhupada 0792 - கிருஷ்ணர் அனைவரோடும் நட்பு பாராட்டாமலிருந்தால், எவரும் ஒரு நொடிகூட வாழமுடியாது
Lecture on SB 1.2.17 -- Los Angeles, August 20, 1972
பிரத்யும்னா : மொழிபெயர்ப்பு : "எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும் , உண்மையான பக்தர்களை ஆதரிப்பவரும், பரம புருஷராகிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர், முறையாக கேட்பதாலும், பாடுவதாலுமே புண்ணியம் தரக் கூடியவையான அவரது செய்திகளை கேட்பதிலும், பாடுவதிலும் உள்ள ஆவலை வளர்த்துக் கொண்டுள்ள பக்தனின் இதயத்திலிருந்து ஜட இன்பங்களுக்கான ஆசைகளை இதயத்திலிருந்து அகற்றி விடுகிறார்."
பிரபுபாதர்: ஆக, கிருஷ்ணர் மிகவும் சுயநலம் மிக்கவர். அவர் கூறுகிறார்.... இங்கு கூறப்பட்டுள்ளது: ஸ்வ-கதா: க்ரு'ஷ்ண:. கிருஷ்ணரது கதைகளைக் கேட்பதில் ஈடுபட்டுள்ள எவரும், கதா என்றால் வார்த்தைகள், செய்திகள். எனவே பகவத்கீதையிலும் கிருஷ்ணர் கூறுகிறார், மாம் ஏகம்: "என்னிடம் மட்டும்." ஏகம். இதுதான் தேவைப்படுகிறது. எல்லாமே கிருஷ்ணராக இருக்கலாம், ஆனால், பல கடவுள்கள் என்ற தத்துவத்தின்படி நம்மால் எல்லாவற்றையும் வணங்க முடியாது. எல்லாமே கிருஷ்ணர் தான், இது உண்மைதான், ஆனால் அதற்காக நாம் எல்லாவற்றையும் வணங்க வேண்டும் என்று பொருள் அல்ல. நாம் கிருஷ்ணரை வணங்க வேண்டும். மாயாவாத தத்துவவாதிகள், " எல்லாமே கிருஷ்ணராக இருப்பதால், நான் எதை வழிபட்டாலும், கிருஷ்ணரை தான் வழிபடுகிறேன்" என்று கூறுவார்கள். இல்லை, அது தவறு.
அதே உதாரணத்தை இங்கும் கூறலாம், இந்த உடலில்- நான் இந்த உடல்- எல்லாமே "நான்" அல்லது "எனது", ஆனால் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதனை ஆசன வாயிலிருந்து உள்ளே தள்ள முடியாது, வாய் வழியாகத்தான் செலுத்த முடியும். இது மட்டும்தான் வழி, "இந்த உடலுக்கு ஒன்பது துவாரங்கள் உள்ளன: இரு கண்கள், இரு மூக்குத் துவாரங்கள், இரு காதுகள், ஒரு வாய், ஒரு ஆசனவாய், மற்றுமொரு பிறப்புறுப்பு -ஒன்பது துவாரங்கள். எனவே எந்தத் துவாரத்தில் வேண்டுமானாலும் உணவை உள்ளே தள்ளினால் என்ன? என்று நீங்கள் கூற முடியாது. இது மாயாவாத தத்துவம். அவர்கள், "எப்படி இருந்தாலும் உணவை உடலுக்கு அளிக்க வேண்டியது தான், உணவை உள்ளே செலுத்த வேண்டியது தான். எனவே நான் எந்தத் துவாரத்தில் வேண்டுமானாலும் உணவை செலுத்தலாம். பல துவாரங்கள் இருக்கின்றன." என்று கூறுகிறார்கள். சிலசமயம் மருத்துவத்துறையில், வாய் வழியாக உணவை உட் செலுத்த முடியாத நிலையில், ஆசனவாய் வழியாக செலுத்துவார்கள். அது செயற்கையானது. ஆனால் அவசரத்திற்காக சிலசமயம் அவ்வாறு செய்வார்கள். ஆனால் அது வழி அல்ல. உண்மையான வழி, உடலுக்கு உணவை செலுத்த வேண்டியது தேவைதான், ஆனால் அது வாய் வழியாகத்தான், வேறு எந்தத் துவாரத்திலும் அல்ல.
அதைப்போலவே, நாம் உண்மையில் பூரண உண்மையுடன் தொடர்பு கொள்ள விரும்பினோம் என்றால், பிறகு நாம் கிருஷ்ணரின் மூலமாகத்தான் செல்ல வேண்டும். கிருஷ்ணருக்கு பல வடிவங்கள் உண்டு. அத்வைதம் அச்யுதம் அநாதிம் அனந்த-ரூபம் (பி.சம் 5.33). அனந்த-ரூபம். ஆக... கிருஷ்ணரைத் தவிர வேறு எதுவும் இல்லாத காரணத்தினால் எல்லாமே கிருஷ்ணருடைய சக்தி தான். எனவே வழிமுறை என்னவெனில்...... பூரண உண்மையினை கிருஷ்ணரின் மூலமாக தொடர்பு கொள்வது தான். எனவேதான் கிருஷ்ணர் இங்கே கூறுகிறார்... கிருஷ்ணர் அல்ல, வியாச தேவர், சூத கோஸ்வாமியின் மூலமாக கூறுகிறார், அதாவது "கிருஷ்ணர் மிகவும் கருணை வாய்ந்தவர், ஸுஹ்ரு'த் ஸதாம்ன் மிகுந்த நலன் விரும்பி" ஸதாம். ஸதாம் என்றால் பக்தர்கள். அவர் பக்தர்களின் உண்மையான நலன் விரும்பி. கிருஷ்ணருடைய மற்றொரு குணம் பக்தவத்சலர். இங்கும் குறிப்பிடப்பட்டுள்ளது, ஸுஹ்ரு'த் ஸதாம். சதாம் என்றால் பக்தர்கள். அவர் எல்லோருக்கும் நண்பர். ஸுஹ்ரு'தம்' ஸர்வ-பூதானாம் (ப.கீ 5.29). கிருஷ்ணர் நண்பராக இல்லாமல், ஒருவர் கூட, ஒரு நொடி கூட உயிர் வாழ முடியாது. நீங்களும்.... கிருஷ்ணர் எல்லோரையும் பாதுகாத்து, எல்லோருக்கும் உணவளிக்கிறார்.