TA/Prabhupada 0808 - நாம் கிருஷ்ணரை எமாற்ற முடியாது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0808 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0807 - Brahmastra is Made of Mantra. That is the Subtle Way|0807|Prabhupada 0809 - Shortcut of 'Demon-Cracy' is 'Democracy'|0809}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0807 - பிரம்மாஸ்திரம் மந்திரத்தால் செய்யப்பட்டது - அது சூட்சுமமான முறை|0807|TA/Prabhupada 0809 - அரக்கரின் பைத்தியக்காரத்தன குறுக்குவழியே ஜனநாயகம்|0809}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:25, 4 August 2021



730926 - Lecture BG 13.03 - Bombay

நம்முடைய உணர்வு, கிருஷ்ண உணர்வான உடனேயே, கிருஷ்ணர் புரிந்து கொள்வார். கிருஷ்ணர் உங்கள் இதயத்திலும் வீற்றிருக்கிறார். ஈஷ்₂வர꞉ ஸர்வ-பூ₄தானாம்ʼ ஹ்ருʼத்₃-தே₃ஷே₂ (அ)ர்ஜுன திஷ்ட₂தி (பகவத் கீதை 18.61).

எனவே கிருஷ்ணரால் உங்கள் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். நாம் கிருஷ்ணரை ஏமாற்ற முடியாது. கிருஷ்ணரை புரிந்து கொள்வதிலோ, அல்லது அவரை அணுகுவதிலோ அல்லது இறைவனின் திருநாட்டிற்கு திரும்புவதிலோ, நீங்கள் எந்த அளவுக்குத் தீவிரமாகவும், நேர்மையாகவும் இருக்கிறீர்கள் என்று கிருஷ்ணர் உடனடியாகப் புரிந்து கொள்வார். அதனைக் கிருஷ்ணர் புரிந்து கொள்வார். அவர் "இதோ ஒர் ஆத்மா, அவன் மிகவும் தீவிரமாக இருக்கிறான்" என்று புரிந்து கொண்ட உடனேயே, அவர் உங்களைக் குறிப்பாகக் கவனித்துக்கொள்கிறார். ஸமோ 'ஹம்' ஸர்வ-பூ4தேஷு. பரம புருஷ பகவானான கிருஷ்ணர், அவர் எல்லோரிடமும் சமமாக இருக்கிறார். ஸமோ (அ)ஹம்ʼ ஸர்வ-பூ₄தேஷு. ந மே த்₃வேஷ்யோ (அ)ஸ்தி ந ப்ரிய (BG 9.29)꞉ யாரும் பிரியமானவரோ அல்லது வெறுப்புக்குரியவரோ அல்லது பொறாமைக்கு உரியவரோ அல்ல. கிருஷ்ணர் பொறாமைப் படுவதில்லை, எல்லோரிடமும் விசேஷ கருணையை காட்டுவதும் இல்லை. உண்மையில், கடவுளின் நிலை சமமானது. எல்லோருக்குமே... அவர் எல்லோரையும் விரும்புகிறார். ஸுஹ்ருʼத₃ம்ʼ ஸர்வ-பூ₄தானாம்ʼ ஜ்ஞாத்வா மாம்ʼ ஷா₂ந்திம் ருʼச்ச₂தி (பகவத் கீதை 5.29). இது பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது. அவர் எல்லோருடைய நண்பர்.

நாம் நம்முடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, பலரிடம் நட்பு கொள்கிறோம். ஆனால் நாம் கிருஷ்ணரை, கிருஷ்ணர் ஏற்கனவே தயாராக இருப்பதை நாம் அறிந்து கொண்டால்... உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், இரண்டு பறவைகள் உடலாகிய ஒரே மரத்தில், நண்பர்களாக அமர்ந்திருக்கின்றன. எனவே "கிருஷ்ணர் என்னுடைய சிறந்த நண்பர்..." என்று நாம் புரிந்து கொண்டால் கிருஷ்ணர் கூறுகிறார், ஸுஹ்ரு'தம்' ஸர்வ-பூதானாம். அவர் என்னுடைய நண்பர் மட்டுமல்ல, உங்களுடைய நண்பரும் கூட. மேலும் அவர் எல்லோருடைய நண்பரும் ஆவார். எனவே அந்த நட்பு சமமாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருவர் சிறந்த பக்தர் ஆகும்போது, யே து பஜந்தி மாம்' ப்ரீத்யா, அன்புடனும், பிரியத்துடனும் ஒருவர் பகவானுடைய சேவையில் ஈடுபடும்போது, அவர் குறிப்பாக அவர்களிடத்தில் அதிக பிரியத்துடன் உள்ளார். இது அந்தப் பக்தருக்கான, கிருஷ்ணரின் கருணை. கிருஷ்ணர் எல்லோருக்கும் சமமானவர், ஆனால் அவர்அன்புடனும் நம்பிக்கையுடனும் அவருடைய சேவையில் ஈடுபட்டுள்ள பக்தர்களிடம் விசேஷப் பிரியம் உடையவர்.

தேஷாம்ʼ ஸதத-யுக்தானாம்ʼ
ப₄ஜதாம்ʼ ப்ரீதி-பூர்வகம்
த₃தா₃மி பு₃த்₃தி₄-யோக₃ம்ʼ தம்ʼ
யேன மாம் உபயாந்தி தே
(பகவத் கீதை 10.10).

அவர்களுக்குக் கிருஷ்ணார் அளிக்கிறார்... ஏனெனில் அவர் பக்தர்களிடம் விசேஷ கவனம் கொள்கிறார்...

அவர் எல்லோருடைய இதயத்திலும் வீற்றிருக்கிறார். க்ஷேத்ர-ஜ்ஞம்ʼ சாபி மாம்ʼ வித்₃தி₄ ஸர்வ-க்ஷேத்ரேஷு பா₄ரத (BG 13.3). ஆனால், பக்தருக்கு விசேஷ கவனம் எடுத்துக்கொண்டு, அவருக்கு வழிகாட்டி, அவருக்குப் புத்தியை வழங்குகிறார். எந்த வகையான புத்தி? யேன மாம் உபயாந்தி தே. எப்படி ஒருவன் கடவுளின் திருநாட்டிற்கு திரும்பிச் செல்லலாம் என்ற அறிவினை அளிக்கிறார். கிருஷ்ணர், ஒருவன் எப்படி பௌதிக முன்னேற்றத்தைப் பெறலாம் என்பதற்கான புத்தியை கொடுப்பதில்லை. அந்தப் பொறுப்பு மாயையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது- தைவி மாயா அல்லது துர்கா தேவி.

எனவேதான், கிருஷ்ணரை வழிபடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதில்லை. பொதுவாக, அவர்கள் துர்கா தேவியையும் சிவபெருமானையும் வழிபடுவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். சிவபெருமானையும், துர்கா தேவியையும் வழிபடும் காரணத்தினால், அவர்கள் பௌதீக செல்வ வளத்தைப் பெறுகிறார்கள். எனவே தேவர்களை வழிபடுவது என்பது நூறு சதவீதம் பௌதிகமே. ஆன்மீக வாழ்க்கையை பற்றிய கேள்வியே இல்லை. எனவேதான் கிருஷ்ணர் கூறுகிறார்... அது என்ன ஸ்லோகம்? நஷ்ட-பு₃த்₃த₄ய꞉. காமைஸ் தைஸ் தைர் ஹ்ருʼத-ஜ்ஞானா꞉ யஜந்தி (அ)ன்ய-தே₃வதா꞉ (பகவத் கீதை 7.20). தேவர்களை வழிபடுவதில் யார் ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடைய புத்தி பறிக்கப்படுகிறது, ஹ்ருத-ஜ்ஞானா: காமைஸ் தைஸ் தைர், மாயயாபஹ்ரு'த-ஜ்ஞான. இந்த வார்த்தைகள் இருக்கின்றன. மாயை இரண்டு வகையில் செயல்படுகிறது : ப்ரக்ஷேபாத்மிகா-ஷ₂க்தி, ஆவரணாத்மிகா-ஷ₂க்தி. ஆவரணாத்மிகா-ஷ2க்தி என்றால் அவள் மறைக்கிறாள் என்று பொருள். ஆவரணாத்மிகா-ஷ2க்தி. மறைக்கும் சக்தி. உண்மையான விஷயம் மாயையினால் மறைக்கப்படுகிறது.