TA/Prabhupada 0709 – பகவான் குறித்த விளக்கம்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0709 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0708 - The Difference Between the Life of the Fish and My Life|0708|Prabhupada 0710 - We Are Making Millions and Trillions of Ideas and Becoming Entangled in Those Ideas|0710}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0708 – ஒரு மீனின் வாழ்க்கைக்கும் எனது வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம்|0708|TA/Prabhupada 0710 – நாம் கோடானுகோடி யோசனைகளைச் செய்து, அந்த யோசனைகளிலேயே சிக்கிக் கொள்கிறோம்|0710}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:27, 28 August 2021



Lecture on BG 7.1 -- Bombay, January 13, 1973

பகவான். பகவான் என்பதற்கு விளக்கம் உண்டு. எந்த அய்யோக்கியன் வேண்டுமானாலும் தன்னை பகவான் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு பகவான் ஆகிவிடலாம் என்பதல்ல. இல்லை. வியாசன் தேவரின் தந்தையான பராசர முனிவர், பகவான் என்பதன் பொருளை நமக்கு அளித்திருக்கிறார். பக என்றால் செல்வம், வான் என்றால் செல்வத்தை உடையவர் என்று அர்த்தம். நமக்கு நடைமுறை அனுபவத்திலுள்ள உதாரணத்தை போல செல்வந்தராக இருக்கும் ஒருவர் கவர்ச்சிகரமாக இருக்கிறார். அவர் கவர்ச்சிகரமானவராக ஆகிறார். பல மனிதர்கள் அவரிடம் உதவி கேட்டு செல்கின்றனர். ஒருவர் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தால், அவர் மிகவும் கவர்ச்சிகரமானவராகிறார். மிகுந்த புகழுடைய ஒருவரும் கவர்ச்சிகரமானவரே. நன்கு படித்த, புத்திசாலியானவரும் கவர்ச்சிகரமானவராகிறார். மிகுந்த புத்திசாலியானவர், கவர்ச்சிகரமானவராக ஆகிறார். மேலும் துறவு வாழ்க்கையில் இருப்பவர்கள்..... துறவு வாழ்க்கை என்றால் எல்லா செல்வங்கள் இருந்தாலும் அவற்றைத் துறப்பது, தன்னுடைய சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தாமல் இருப்பது. ஒரு கொடையாளியைப் போல, அவர் எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு அளிக்கிறார். அவரும் கவர்ச்சிகரமானவரே. இவையே ஆறு வகையான கவர்ச்சிகள். ஆகவே, பகவான் என்பதன் அர்த்தம், யாரொருவர் இந்த எல்லா கவர்ச்சிகரமான விஷயங்களையும் முழுமையாகப் பெற்றிருக்கிறாரோ, அவரே பகவான். தெருவில் போகும் எந்த முட்டாள் வேண்டுமானாலும் பகவான் ஆகலாம் என்பதில்லை. இல்லை. இது தவறான வழிகாட்டுதல். நமக்கு பகவான் என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியாது; எனவே எந்த அய்யோக்கியனையும் பகவான் என்று ஏற்றுக் கொள்கிறோம். ஐஷ்₂வர்யஸ்ய ஸமக்₃ரஸ்ய (விஷ்ணு புராணம் 6.5.47). செல்வங்கள். மும்பை நகரத்தில் பல செல்வந்தர்கள் இருக்கிறார்கள், ஆனாலும் யாரும் கூறமுடியாது "நானே எல்லா செல்வத்தின் அதிபதி. எல்லா வங்கிகளிலுள்ள பணமும் அல்லது மும்பை நகரத்திலுள்ள எல்லா பணமும் என்னுடையது." என்று யாரும் அப்படி கூறமுடியாது. ஆனால் கிருஷ்ணர் அப்படி கூறலாம். ஐஷ்₂வர்யஸ்ய ஸமக்₃ரஸ்ய ஸமக்₃ர செல்வம், அற்பமான, பகுதியளவு செல்வம் அல்ல. ஸமக்₃ர. ஐஷ்₂வர்யஸ்ய ஸமக்₃ரஸ்ய வீர்யஸ்ய. பலம், செல்வாக்கு. வீர்யஸ்ய. யஷ₂ஸ:, மதிப்பு, புகழ். அதாவது கிருஷ்ணர் 5000 வருடங்களுக்கு முன்பு பகவத் கீதையை உபதேசித்தது போன்று, இன்றும் உலகம் முழுக்க புகழப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கிலும். பகவத்கீதை எல்லா நாடுகளிலும், மத வேறுபாடின்றி அறியப்பட்டிருக்கிறது. எல்லோரும், எந்த புத்திசாலியும், எந்த அறிஞனும், எந்த தத்துவவாதியும் பகவத் கீதையைப் படிக்கிறான். அதாவது, கிருஷ்ணர் புகழ் பெற்றவர் என்று அர்த்தம். எல்லோருக்கும் தெரியும். எனவே ஐஷ்₂வர்யஸ்ய. மேலும் அவர் எழுந்தருளியிருந்தபோது தன்னுடைய செல்வங்களைக் காண்பித்தார். நாரதமுனிவர், கிருஷ்ணர் தனது 16,108 மனைவிகளை எவ்வாறு பராமரிக்கிறார் என்பதை பார்க்க விரும்பினார். எனவே நாரதமுனிவர் வந்தபோது, அவர் ஒவ்வொரு அரண்மனைக்கும் சென்று பார்த்தார். அங்கே 16,108 மாளிகைகள், எல்லாம் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பளிங்கு மாளிகைகளாகக் காட்சியளித்தன. அங்கே மின்சாரத்திற்கோ இரவில் வெளிச்சத்திற்கோ எந்த தேவையும் இருக்கவில்லை. எல்லாம் மாளிகைகளும் இரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. மேலும் எல்லா தளவாடங்களும் தந்தத்தினாலும், தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தது. செல்வம். பூங்காக்களில் பாரிஜாத மரங்கள் நிறைந்திருந்தன. அதுமட்டுமில்லாமல், நாரதமுனிவர் கிருஷ்ணரை ஒவ்வொரு மனைவியுடனும் இருப்பதை கண்டதுடன் அவர் பல வகையான செயல்களையும் செய்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் தன் மனைவி, குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார். மற்றோர் இடத்திலோ, தன்னுடைய குழந்தைகளின் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வேறோரிடத்தில்.........இப்படிப் பல வகையான செயல்கள், ஒரேயொரு செயல் அன்று. இதுவே ஐஸ்வரியம், செல்வங்கள் எனப்படுகிறது. சில 'தோலாக்கள்' தங்கத்தை வைத்திருப்பதால், ஒருவர் கடவுளாக முடியாது. இல்லை. போ₄க்தாரம் யஜ்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ்₂வரம் போ4க்தாரம்' யஜ்ஞ-தபஸாம்' ஸர்வ-லோக-மஹேஷ்2வரம் (BG 5.29), ஸுஹ்ருத₃ம்... கிருஷ்ணர் அறிவிக்கிறார், "நானே உன்னத அனுபவிப்பாளன்" என்று. போ4க்தாரம்' யஜ்ஞ-தபஸாம்' ஸர்வ-லோக-மஹேஷ்2வரம். "நானே எல்லா கிரகங்களின் உரிமையாளன்." இதுவே செல்வம். சக்தி, வீரத்தையும் சக்தியையும் பொறுத்தவரை கிருஷ்ணர், அவர் மூன்று மாத குழந்தையாக, தன் தாயின் மடியில் இருந்தபோதே, அவர் பல அசுரர்களை கொன்றிருக்கிறார்.