TA/Prabhupada 0708 – ஒரு மீனின் வாழ்க்கைக்கும் எனது வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம்
Lecture on SB 3.26.32 -- Bombay, January 9, 1975
நான் ஒரு ஆன்மீக ஆத்மா என்பதால், இந்த பௌதிக சூழ்நிலையில் நான் செய்யக்கூடியது எதுவும் இல்லை. அஸங்கோ₃ (அ)யம் புருஷ꞉. ஆன்மீக ஆத்மாவிற்கு செய்வதற்கு எதுவுமில்லை. ஆனால், அவருடைய பௌதிக சங்கத்தின் காரணமாக, வெவ்வேறு முறைகளில், நாம் இந்த ஜட உடலை பெற்று இப்போது.... பந்தப்பட்டிருக்கிறோம். ஒரு மீன் வலையில் சிக்கிக் கொள்வதைப் போல, உயிர்வாழியாகிய நாமும் சிக்குண்டு இருக்கிறோம் இந்த பௌதிக மூலப்பொருட்களினாலான வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். எனவே மிகக் கடினமான நிலை. ஒரு மீன், மீனவனுடைய வலையில் சிக்கிக் கொள்வதைப் போல (மாயையினுடைய), ஜட இயற்கையினால் உருவாக்கப்பட்டிருக்கும் வலையில் நாமும் இப்போது சிக்கிக் கொண்டிருக்கிறோம். ப்ரக்ருதே꞉ க்ரியமாணாநி கு₃ணை꞉ கர்மாணி ஸர்வ...(BG 3.27). ஒரு குறிப்பிட்ட வகையிலான ஜட இயற்கை குணத்தோடு தொடர்பு கொண்டதனால் நாம் இப்போது பந்தபட்டிருக்கிறோம். மீன் வலையில் சிக்கிக் கொண்டுள்ளதை போல நாமும் பந்தப்பட்டுள்ளோம். இந்த ஜட உலகம் ஒரு பெரிய சமுத்திரத்தை போன்றது, ப₄வார்ணவ. அர்ணவ என்றால் கடல், ப₄வ என்றால் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடக்கும் சூழ்நிலை. இதுவே ப₄வார்ணவ எனப்படுகிறது. அநாதி₃ கரம-ப₂லே, பதி₃(அ) ப₄வார்ணவ-ஜலே. அநாதி₃ கர்ம-ப₂லே: "படைப்பிற்கு முன் நான் என்னுடைய செயல்களின் விளைவுகளை கொண்டிருந்தேன், ஏதோ ஒரு காரணத்தால், நான், பிறப்பு இறப்பு என மாறி மாறி வரும் இந்த ப₄வார்ணவ கடலில் இப்போது விழுந்துவிட்டேன்." எப்படி வலையில் சிக்கிய மீன் தன்னுடைய வாழ்வுக்காக போராடுகிறதோ அதுபோல, எப்படி வலையிலிருந்து வெளியேறுவது... அது அமைதியாக இல்லை. நீங்கள் பார்த்திருக்கலாம், வலையில் சிக்கிய உடனேயே, "பட்! பட்! பட்! பட்! பட்!" அது வெளியேற விரும்புகிறது. அதுதான் நமது வாழ்க்கைக்கான போராட்டம், எப்படி வெளியேறுவது. அது நமக்குத் தெரியவில்லை.
ஆகவே, அதிலிருந்து வெளியேறும் வழி, கிருஷ்ணரின் கருணை மட்டுமே. அவரால் அனைத்தையும் செய்ய முடியும். அவரால் உடனேயே நம்மை இந்த பந்தத்திலிருந்து விடுவிக்க முடியும். இல்லையென்றால் அவர் எப்படி எல்லாம் வல்ல கடவுளாக இருக்க முடியும்? என்னால் வெளியேற முடியவில்லை. அந்த மீனால் வெளியேற முடியாது, ஆனால்..., அந்த மீனவன் விரும்பினால், உடனேயே அந்த மீனை தூக்கி தண்ணீரில் எறிய முடியும். உடனேயே அந்த மீன் தன் வாழ்க்கையைத் திரும்பப் பெறுகிறது. அதைப் போலவே, நாம் கிருஷ்ணரிடம் சரணடைந்தால், அவர் நம்மை உடனே வெளியேற்ற முடியும். மேலும் அவர் கூறுகிறார், அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்₄யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷு₂ச꞉ (BG 18.66). நீங்கள் சரணடைய வேண்டியதுதான். அந்த மீனவன், மீன் "பட்! பட்! பட்!" டென்று துடிப்பதை பார்க்கிறான். ஆனால் அந்த மீன் சரணடைந்தால்... அது சரணடைய விரும்புகிறது. ஆனால், அதற்கு மொழி தெரியாது. எனவேதான் அது வலைக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் அந்த மீனவன் விரும்பினால், அதனை வெளியே எடுத்து தண்ணீரில் எறியலாம். அதைப் போலவே நாமும் கிருஷ்ணரிடம் சரணடைந்தோமென்றால்... இந்த மனிதப் பிறவி இந்த சரணடையும் செய்ன்முறைக்காகத் தான் இருக்கிறது. வேறு பிறவிகளில்- ஒரு மீன் இதை செய்ய முடியாது, ஆனால் என்னால் செய்ய முடியும். இதுதான் மீனுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம். அந்த மீன் வலையில் சிக்கிக்கொண்டு, எந்த சக்தியும் இல்லாமல் இருக்கிறது. அது அழிய வேண்டியது தான்.