TA/Prabhupada 0347 - முதலில் கிருஷ்ணர் தற்போது எங்கு இருக்கிறாரோ அங்கு நீ பிறக்கவேண்டியிருக்கும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0347 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in Mexico]]
[[Category:TA-Quotes - in Mexico]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0346 - Sans prêcher, sans comprendre la philosophie, vous deviendrez faibles|0346|FR/Prabhupada 0348 - Si quelqu’un chante simplement Hare Krishna pendant cinquante ans, il est sûr de devenir parfait|0348}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0346 - பிரசாரம் இல்லாமல், தத்துவங்களை புரிந்துகொள்ளாமல், பலவீனமாகி விடுவீர்கள|0346|TA/Prabhupada 0348 - ஐம்பது வருடங்களுக்கு ஹரே கிருஷ்ண என ஜெபம் செய்தால், உன்னத நிலையை அடைவது நிச்சயம்|0348}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 17: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|j_303G1U8-Q|முதலில் கிருஷ்ணர் தற்போது எங்கு இருக்கிறாரோ அங்கு நீ பிறக்கவேண்டியிருக்கும் <br/>- Prabhupāda 0347}}
{{youtube_right|rSzbpMmrgQ0|முதலில் கிருஷ்ணர் தற்போது எங்கு இருக்கிறாரோ அங்கு நீ பிறக்கவேண்டியிருக்கும் <br/>- Prabhupāda 0347}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 56: Line 56:




''பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத: ததோ மாம் தத்த்வதோ க்ஞாத்வா விஷதே தத்-அனந்தரம்'' ([[Vanisource:BG 18.55|BG 18.55]])  
''பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத: ததோ மாம் தத்த்வதோ க்ஞாத்வா விஷதே தத்-அனந்தரம்'' ([[Vanisource:BG 18.55 (1972)|பகவத்-கீதை 18.55]])  





Latest revision as of 19:22, 29 June 2021



Lecture on BG 2.14 -- Mexico, February 14, 1975

ஹ்ருதயாநந்தன்: தன்னை தூய்மைப்படுத்தி நம்மால் பரம புருஷரான முழுமுதற் கடவுளுடன் நம்முடைய உறவை உணரமுடியுமா?


பிரபுபாதர்: ஆம். அது தான் தூய்மை அடைவதின் மையம்.


ஹ்ருதயாநந்தன்: (ஸ்பானிஷ் மொழியில்) ஹனுமான்:


பிரபுபாதரே, ஆன்மீக உலகில் பிறப்பு கிடையாதா என நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஆன்மீக உலகத்திற்கு எப்படி திரும்பிச் செல்வது?


பிரபுபாதர்: என்ன? முதலில் கிருஷ்ணர் தற்போது எங்கு இருக்கிறாரோ அங்கு நீ பிறக்கவேண்டியிருக்கும். கிருஷ்ணர் எதாவது ஒரு பிரம்மாண்டத்தில் இருப்பார். பல பிரம்மாண்டங்கள் உள்ளன. ஆக அடுத்த பிரம்மாண்டத்தில் அதாவது எங்கு கிருஷ்ணர் இருக்கிறாரோ அங்கு பிறவி எடுத்தாக வேண்டும். பிறகு உனக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஏற்றப் பிறகு நீ வைகுண்டத்துக்கு செல்வாய். பிறப்பு கிடையாதா? என்ன?


ஹ்ருதயாநந்தன்: மேலும் கேள்விகள் எதாவது?


பிரபுபாதர்: நீங்கள் விரும்பினால், நான் தொடர்ந்து பதிலளிக்க தயார்.


ஹ்ருதயாநந்தன்: கடவுளிடம் செல்வதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா?


பிரபுபாதர்: இல்லை. (சிரிப்பு) ஏனென்றால் பகவத்-கீதையில் கூறப்பட்டிருக்கிறது,


பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத: ததோ மாம் தத்த்வதோ க்ஞாத்வா விஷதே தத்-அனந்தரம் (பகவத்-கீதை 18.55)


இதை கண்டுபிடி, பக்த்யா மாம் அபிஜானாதி.


ஹ்ருதயாநந்தன்: பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத: ததோ மாம் தத்த்வதோ க்ஞாத்வா விஷதே தத்-அனந்தரம்


பிரபுபாதர்: பக்தனாகாமல் கடவுளின் சாம்ராஜ்யத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது. மேலும் பக்தன் ஆவதில் எந்த கஷ்டமும் இல்லை. ஏனென்றால்... பக்தன் என்றால் நான்கு கொள்கைகள். ஒன்றாவது, எப்பொழுதும் கிருஷ்ணரை நினைத்திருக்க வேண்டும். மன்-மனா பவ மத்-பக்த:. அது தான் பக்தன். வெறும் கிருஷ்ணரை நினைப்பதால். அது தான் ஹரே கிருஷ்ண. ஹரே கிருஷ்ண ஜெபிக்கும் பொழுது, நீ கிருஷ்ணரை நினைக்கிறாய். உடனடியாக நீ பக்தன் ஆகிறாய். மன்-மனா பவ என்பதற்கு பிறகு, மத்-யாஜீ: "என்னை வழிபடுவாய்," மற்றும் மாம் நமஸ்குரு, "உனது வணக்கங்களைச் சமர்ப்பிப்பாயாக." இது மிக எளிதானது. கிருஷ்ணரை நினைத்து, சற்று வணங்கி அவரை வழிபட்டால், இந்த மூன்று விஷயங்கள் உன்னை பக்தன் ஆக்கிவிடும். பிறகு நீ முழுமுதற் கடவுளிடம் திரும்பிச் செல்வாய். நாங்கள் இதைதான் போதிக்கின்றோம்: ஹரே கிருஷ்ண ஜெபியுங்கள், அர்ச்சை விக்ரஹத்திற்கு வணக்கங்களை சமர்ப்பித்து வழிபடுங்கள். எல்லா பௌதீக ஆசைகளுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள்.


ஹ்ருதயாநந்தன்: (ஸ்பானிஷ் மொழியில்)


பிரபுபாதர்: அப்படி என்றால் எதற்காக நாம் க்ஞான யோகத்தின் பாதையில் செல்லவேண்டும்? அதற்கு எவ்வளவு அறிவு, எவ்வளவு இலக்கணம், எவ்வளவு மூக்கு பிடித்தல், மற்றும் பல விஷயங்கள் தேவை. இதை எல்லாம் தவிர்க்கலாம். வெறும் இந்த மூன்று விஷயங்களை செய்தாலே பக்தன் ஆகலாம். எல்லாத்தைவிட எளிதான முறையை ஏற்று முழுமுதற் கடவுளின் திருவீட்டிற்கு திரும்பி செல்லலாமே. மிக நன்றி.