TA/Prabhupada 1014 - ஒரு போலி கடவுள் தன் சீடனை போதிக்கும் போழுது, சீடன் மின்னதிர்ச்சிகளை உணர்ந்திருந்தான்: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
[[Category:Tamil Language]]
[[Category:Tamil Language]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|French|FR/Prabhupada 1013 - Nous devrions essayer vite avant que la prochaine mort vienne|1013|FR/Prabhupada 1015 - Sauf s'il y a une force vivante derrière la matière, rien ne peut être crée|1015}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1013 - அடுத்த மரணம் வருவதற்கு முன்பு நாம் மிக வேகமாக முயற்சி செய்ய வேண்டும்|1013|TA/Prabhupada 1015 - ஜடப்பொருளின் பின்னால் உயிர்சக்தி இல்லாவிட்டால் எதையும் உருவாக்க முடியாது|1015}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 20: Line 20:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|Z1Hc-3sHs28|Title to be added<br/>- Prabhupāda 1014}}
{{youtube_right|Z1Hc-3sHs28|TA/Prabhupada 1014 - ஒரு போலி கடவுள் தன் சீடனை போதிக்கும் போழுது, சீடன் மின்னதிர்ச்சிகளை உணர்ந்திருந்தான் ஆக<br/>- Prabhupāda 1014}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->



Latest revision as of 08:28, 19 August 2021



750626 - Lecture SB 06.01.13-14 - Los Angeles

ஒரு போலி கடவுள் தன் சீடனை போதிக்கும் போழுது, சீடன் மின்னதிர்ச்சிகளை உணர்ந்திருந்தான் ஆக உன்னிடம் இருபது லட்சம் டாலர் இருக்கலாம்; என்னிடம் பத்து டாலர் இருக்கலாம்; அவனிடம் நூறு டாலர் இருக்கலாம். எல்லோரிடமும் எதாவது செல்வம் இருக்கும். அது தெரிந்த விஷயம் தான். ஆனால் யாரும் "என்னிடம் அனைத்து செல்வங்களும் இருக்கின்றன." என்று சொல்லமுடியாது. அது சாத்தியம் அல்ல. யாராவது, "என்னிடம் அனைத்து செல்வங்களும் இருக்கின்றன" என்று சொல்லக்கூடியவர் என்றால் அவர் கடவுள் மட்டுமே. அது கிருஷ்ணரால் கூறப்பட்டிருக்கிறது. உலக வரலாற்றில் யாரும் இவ்வாறு கூறவில்லை. கிருஷ்ணர் கூறினார், "போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ்வரம்" (பகவத்-கீதை 5.29) "நானே அனைத்தையும் அனுபவிப்பவன் மற்றும் நானை அனைத்து பிரபஞ்சத்தின் அதிபதி." யாரால் அப்படி சொல்லமுடியும்? அது தான் கடவுள். ஐஷ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய. ஸமக்ர என்றால் அனைத்து. அரைகுறையாக அல்ல, அதாவது "என்னிடம் அவ்வளவு இருந்தது. அனைத்தையும் நான் செலவழித்து விட்டேன்." அப்படி அல்ல. நான் பெயரை சொல்ல விரும்பவில்லை - ஒரு போலி கடவுள், அவன் தன் சீடனை போதிக்கும் போழுது, சீடன் மின்சார அதிர்ச்சிகளை உணர்ந்திருந்தான். ஆக துரதிருஷ்டவசமாக, என்னால் உங்களுக்கு மின்சார அதிர்ச்சி எல்லாம் தர முடியாது. (சிரிப்பு) புரிகிறதா? மின்சார அதிர்ச்சிகள், பிறகு அவன் மின்சார அதிர்ச்சியால் மயங்கி விட்டான். மேலும் இவை எல்லாம் வெளிப்படையாக எழுதப்பட்டிருக்கின்றன, மூடர்களும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியர் எதற்காக மின்சார அதிர்ச்சியை அளிக்கவேண்டும்? சாத்திரத்தில் அப்படி எங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது? (சிரிப்பு) ஆனால் இந்த மாதிரி மோசடியானதெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன. மின்சார அதிர்ச்சி. அவன் மயங்கியப் பிறகு அந்த கடவுள் அங்கு உக்கார்ந்திருந்தார். பிறகு மயக்கம் தெளிந்ததும், சீடன் கடவுளிடம் கேட்டானாம், "சார், நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" "இத்துடன் நான் எல்லாத்தையும் முடித்துவிட்டேன். நான் உனக்கு எல்லாத்தையும் கொடுத்துவிட்டேன்." இதை பாருங்கள். தன் சீடனுக்கு கற்றுத் தந்த பிறகு, ஒரு ஆசிரியர், எனக்கு தெரிந்தது இவ்வளவு தான் என்பாரா என்ன? ஆக கிருஷ்ணர் அப்படிப்பட்ட கடவுள் அல்ல, அதாவது "எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்." பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவாவஷிஷ்யதே (ஈஷோபனிஷத் தொடக்க வழிபாடு). இது தான் கடவுளின் பொருள் வரையறை. கடவுளிடமிருந்து எல்லா செல்வங்களையும் எடுத்துக் கொண்ட பிறகும் அவர் நிறைந்திருப்பார். கடவுள் அவ்வளவு முழுமையானவர். அது தான் கடவுள். "என்னிடம் இவ்வளவு தான் இருந்தது." அப்படி கிடையாது. ஆக புத்திசாலி, வேத ஞானத்திலிருந்து, கடவுள் என்றால் என்னவென்று கற்க வேண்டும். கடவுளை உற்பத்தி செய்யாதீர்கள். அது எப்படி நம்மால் கடவுளை உற்பத்தி செய்ய முடியும்? அது சாத்தியம் அல்ல. அதை மனோ-தர்ம என்பார்கள். கற்பனையால், ஊகத்தினால், கடவுளை நாம் உருவாக்க முடியாது. 'ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம் யத் கின்சித் ஜகத்யாம் ஜகத் (ஈஷோபனிஷத் 1) ' , இதோ கடவுளின் பொருள் வரையறை இங்கே இருக்கிறது. இதம் ஸர்வம். ஸர்வம் என்றால் நீ காண்பது அனைத்தும். நீ பார்க்கும் பசிபிக் பெருங்கடல், கடவுளால் படைக்கப்பட்டது. அவர் ஒரு பசிபிக் பெருங்கடலை படைத்ததால் அவரிடம் இருக்கும் எல்லா வேதியப் பொருள்களும், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. பிரம்மாண்டத்தில் பல லட்சக்கணக்கான பசிபிக் பெருங்கடல்கள் மிதந்துக் கொண்டிருக்கின்றன. அது தான் கடவுளின் படைப்பு. பிரம்மாண்டத்தில் பல லட்சக்கணக்கான கிரகங்கள் மிதந்துக் கொண்டிருக்கின்றன, மற்றும் பல லட்சக்கணக்கான உயிர்வாழீகள், கடல்கள், மலைகள் எல்லாம் இருக்கின்றன, ஆனால் என்த குறைவும் ஏற்படுவதில்லை. இந்த பிரம்மாண்டம் மற்றும் அல்ல; பல கோடிக்கணக்கான பிரம்மாண்டங்கள் உள்ளன. இந்த தகவல் நமக்கு கிடைப்பது வேத... யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி கோடிஷு அஷேஷ-வஸுதாதி விபூதி-பின்னம் தத் ப்ரம்ம நிஷ்கலம் அனந்தம் அஷேஷ-பூதம் கோவின்தம் ஆதி-புருஷம் தம் அஹம் (பிரம்ம ஸம்ஹிதா 5.40)... கடவுளின் வைபவத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.