TA/Prabhupada 0909 - நான் என்னுடைய குரு மகாராஜாவின் ஆணையை நிறைவேற்றுவதற்காக இந்த நிலைக்கு வரும்படி கட்டாய: Difference between revisions
(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0909 - in all Languages Category:TA...") |
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items) |
||
Line 9: | Line 9: | ||
<!-- END CATEGORY LIST --> | <!-- END CATEGORY LIST --> | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | <!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | ||
{{1080 videos navigation - All Languages| | {{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0908 - நான் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யலாம், ஆனால் கிருஷ்ணர் அனுமதிக்கவில்லை என்றால்,|0908|TA/Prabhupada 0910 - நாம் எப்போதும் கிருஷ்ணரால் ஆதிக்கம் செலுத்தப் படுவதற்கு முயற்சிக்கிறோம். அதுவே வெற்ற|0910}} | ||
<!-- END NAVIGATION BAR --> | <!-- END NAVIGATION BAR --> | ||
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> | <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> |
Latest revision as of 07:25, 16 August 2021
Lecture on SB 1.8.27 -- Los Angeles, April 19, 1973
பிரபுபாதா : கிருஷ்ணர் கூறுகிறார் : "யாரொருவர் என்னை அடைய முயற்சிக்கிறாரோ, கிருஷ்ண உணர்வை அடைவதற்கு முயற்சிக்கும் அதே சமயத்தில், பௌதீக ரீதியாக மகிழ்ச்சி அடைய விரும்பினால், அவன் நல்ல புத்திசாலி அல்ல." அதாவது அவன் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறான். நம்முடைய முக்கியமான வேலை, எப்படி கிருஷ்ண உணர்வை அடைவது என்பதுதான். இதுதான் மனித வாழ்க்கையின் முக்கியமான வேலை. ஆனால் நாம் பௌதிக முன்னேற்றத்திற்காக நம்முடைய நேரத்தை வீணடித்து, ஜபம் செய்ய மறந்து விட்டால், பிறகு அது இழப்பாகும். மிகப் பெரும் இழப்பாகும். எனவே இத்தகைய மனநிலை, கிருஷ்ணர் கூறுகிறார் : ஆமி விஜ்ஞ தரே கேனோ விஷய தி3ப3. "இந்த அயோக்கியன் பக்தி சேவையை செய்துவிட்டு, என்னிடம் சில பௌதீக முன்னேற்றத்தை கேட்கிறான். நான் ஏன் அவனுக்கு பௌதிக முன்னேற்றத்தை கொடுக்க வேண்டும்? மாறாக அவனிடம் என்ன இருக்கிறதோ, அதையும் நான் எடுத்து விடுவேன்." (சிரிப்பு) ஆம். இது வேடிக்கை அல்ல. நம்மிடம் இருப்பவை எடுக்கப்படும் போது, வருத்தப்படுகிறோம். ஆனால் அது தான் பரிசோதனை. இது, யுதிஷ்டிரா மகாராஜாவிடம் கிருஷ்ணராலேயே கூறப்பட்டது : யஸ்யாஹம் அனுக்3ரு'ஹ்ணாமி ஹரிஷ்யே தத்3 த4னம்' ஷ2னை: (ஸ்ரீமத்.பா 10.88.8).
யுதிஷ்டிர மகாராஜா, கிருஷ்ணரிடம் மறைமுகமாக கேள்வி கேட்டார்: "நாங்கள் முழுவதும் உங்களையே நம்பி இருக்கின்றோம், இருந்தும் நாங்கள் மிகுந்த துன்பத்தை அனுபவிக்கிறோம், எங்களுடைய ராஜ்யம் பறிக்கப்பட்டு விட்டது, எங்கள் மனைவி அவமானப்படுத்தப்பட்டார். மேலும எங்களை வீட்டோடு எரித்துக் கொல்ல முயற்சி செய்தனர்." எனவே கிருஷ்ணர் கூறினார் : "இது தான் என்னுடைய முதல் வேலையே." யஸ்யாஹம் அனுக்3ரு'ஹ்ணாமி ஹரிஷ்யே தத்3 த4னம்' ஷ2னை:. "நான் யாரிடமாவது விசேஷ கருணையை காட்டினால், பிறகு அவர்களுடைய வருமானத்தின் எல்லா மூலங்களையும் எடுத்து விடுவேன்." மிகவும் ஆபத்தானது. ஆம். இது சம்பந்தமாக, என்னுடைய சொந்த அனுபவமும் இருக்கிறது. ஆம். இது கிருஷ்ணருடைய விசேஷ கருணை. இதை நான் சொல்ல விரும்பவில்லை, ஆனால் இது உண்மைதான். (சிரிப்பு) இதுதான் உண்மை. எனக்கு இருபத்தி ஐந்து வயதாக இருக்கும்போது என்னுடைய குரு மகாராஜா எனக்கு கட்டளையிட்டார்: "நீ சென்று பிரச்சாரம் செய்." ஆனால் நான் நினைத்தேன் "முதலில் நான் ஒரு செல்வந்தன் ஆகி, பிறகு அந்தப் பணத்தை பிரச்சார வேலைக்காக பயன்படுத்துவேன்."
அது ஒரு பெரும் கதை. நான் வியாபாரத்தில் பெரும் செல்வந்தன் ஆவதற்கு நல்ல வாய்ப்புகளை பெற்றேன். மேலும் என்னிடம் ஒரு ஜோதிடர் கூறினார் : "நீ பிர்லாவை போல ஆகியிருக்க வேண்டும்." ஆக சில வாய்ப்புகள் நல்ல வாய்ப்புகள் இருந்தது. நான் ஒரு பெரும் கெமிக்கல் தொழிற்சாலையின் மேலாளராக இருந்தேன். என் சொந்த தொழிற்சாலையை ஆரம்பித்து, அந்த வியாபாரம் மிகவும் வெற்றிகரமாக இயங்கியது. ஆனால் எல்லாம் உருக் குலைந்தது. என் குரு மகாராஜாவின் ஆணையை நிறைவேற்றுவதற்காக இந்த நிலைக்கு வரும்படி நான் கட்டாயப்படுத்த பட்டேன்.
பக்தர்கள் : ஜெய, ஹரி போல்... ™.
பிரபுபாதா : அகிஞ்சன-வித்தாய. எல்லாமே முடிந்த பிறகு, நான் கிருஷ்ணரை எடுத்துக்கொண்டேன் "நீங்கள்தான் ஒரே...." எனவேதான் கிருஷ்ணர் அகிஞ்சன-வித்த . ஒருவன் தன்னுடைய எல்லா செல்வங்களும் தீர்ந்த பிறகு.... மேலும் இப்போது நான் உணர்கிறேன், நான் இழக்கவில்லை, நான் லாபம் அடைந்திருக்கிறேன். நான் லாபம் அடைந்திருக்கிறேன். அதுவே உண்மை. எனவே கிருஷ்ணருகாக பௌதிக செல்வங்களை இழப்பது, நஷ்டம் அல்ல, இது மிகப் பெரும் லாபம் தான். எனவேதான் கூறப்பட்டிருக்கிறது அகிஞ்சன-வித்த . ஒருவர் அகிஞ்சன ஆகும்போது, எதுவுமே இல்லாத போது, எல்லாம் தீர்ந்த பிறகு, அப்படிப்பட்டவனின் ஒரே செல்வமாக கிருஷ்ணர் ஆகிறார். காரணம் அவர் ஒரு பக்தர். நரோத்தம தாச தாக்கூர் கூறுவதைப் போல :
- ஹா ஹா ப்ரபு4 நந்த3-ஸுத, வ்ரு'ஷபா4னு-ஸுதா-ஜுத
- கருணா கரஹ ஏஇ-பா3ர
- நரோத்தம-தா3ஸ கோய், நா டே2லிஹ ராங்கா3 பாய்
- தோமா பி3னே கே ஆசே2 ஆமார.
இந்த நிலை, அதாவது "கிருஷ்ணா, உங்களைத் தவிர உரிமை கோருவதற்கு என்னிடம் எதுவுமில்லை. என்னிடம் எதுவும் இல்லை. என்னை நிராகரித்து விடாதீர்கள் ஏனெனில், என்னுடைய ஒரே ஒரு உடைமை நீங்கள் மட்டும்தான். இந்த நிலை மிகவும் நல்லது. நாம் பௌதிகமான எதையும் நம்பி இருக்கவில்லை என்றால், கிருஷ்ணரை மட்டுமே நம்பி இருப்போம். இது கிருஷ்ண உணர்வின் முதல்தரமான நிலையாகும். எனவே தான் கிருஷ்ணர் அகிஞ்சன-வித்தாய என்று அழைக்கப்படுகிறார். "ஒருவரின் பௌதீக செல்வங்கள் எல்லாம் தீர்ந்த பிறகு, நீங்கள் மட்டுமே ஒரே செல்வம்." அகிஞ்சன-வித்தாய. நம: அகிஞ்சன-வித்த, நிவ்ரு'த்த-கு3ண-வ்ரு'த்தயே. "விளைவு என்னவென்றால், ஒருவர் உங்களை மட்டுமே தன்னுடைய ஒரே செல்வமாக கொண்டால், உடனே அவர் பௌதீக செயல்களிலிருந்து விடுதலை அடைவார்." அதன் பொருள், உடனேயே அவர் பூரணத்தின் உன்னதத் தளத்தில் வைக்கப்படுவார். அகிஞ்சன-வித்தாய நிவ்ரு'த்த-கு3ண-வ்ரு'த்தயே, ஆத்மாராமாய (ஸ்ரீமத் பா 1.8.27). "அப்போது, அவர் உங்களிடம் மகிழ்ச்சி அடைவார், ஏனெனில் கிருஷ்ணா, நீங்கள் உங்களிடத்தில் மகிழ்ந்து இருப்பவர்...."