TA/Prabhupada 0057 - ஆத்மாவை தூய்மைப்படுத்தல்: Difference between revisions

No edit summary
 
(No difference)

Latest revision as of 02:46, 27 May 2021



Lecture on SB 6.1.34-39 -- Surat, December 19, 1970

ரேவதிநந்தன: நாம் எப்பொழுதும் ஹரே கிருஷ்ணா ஜபிக்க ஊக்கமளிக்கிறோம், சரிதானே? பிரபுபாதர்: ஆம், இந்த யுகத்தில் அது ஒன்று தான் செயல்முறை. ஹரே கிருஷ்ணா ஜபிப்பதால், ஒருவருடைய, புரிந்துக் கொள்ளுதல் என்னும் தேக்கம் தெளிவு பெறும். அதன்பின் அவர் பெறலாம், அவர் ஆன்மீக ஞானம் பெறலாம். ஆத்மா சுத்தமில்லாமல் ஆன்மீக ஞானத்தை புரிந்துக் கொள்வதும் பெறுவதும் மிகவும் கடினம். இந்த அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகள் - ப்ரமசாரி, க்ரஹஸ்த, வானப்ரஸ்த - அவர்கள் வெறுமனே தூய்மைப்படுத்தும் முறை. அத்துடன் பக்தியும் தூய்மைப்படுத்தும் முறை, வித்‌ஹி-பக்தி. ஆனால் தெய்வ வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்துவதன் மூலம் அவரும் தூய்மைப் படுத்தப்படுகிறார். தத்-பரத்வெ....சர்வொபாதி. அவர் அக ஒளி பெற்று அல்லது புரிந்துணர்வில் முன்னேற்றம் அடைந்து தான் கிருஷ்ணரின் நித்தியமான சேவகன் என்பதை புரிந்துக் கொண்டால், அவர் புனிதமடைகிறார். அவர் புனிதமடைகிறார். சர்வொபாதி என்றால் அவருக்கு தேவையில்லை, அவர் தன்னுடைய உபாதியை அகற்றுகிறார், அவருடைய பட்டப்பெயரை, அதாவது "நான் அமெரிக்கன்," "நான் இந்தியன்," "நான் இது," "நான் அது." ஆகையால் இவ்வழியாக, நீங்கள் முழுமையாக வாழ்க்கையின் உடல் சம்மந்தப்பட்டதை அகற்றினால், பிறகு நிர்மலம். அவர் நிர்மலமாகிறார், தூய்மையக்கிறார். வாழ்க்கையில் இந்த எண்ணம் இருக்கும்வரை அதாவது "நான் இது," "நான் அது." அவர் இன்னும் இந்த ச பக்த: ப்ரக்ர்த: ஸமர்த: (பக்கத்தில்): ஒழுங்காக உட்காருங்கள், அவ்வாறு அல்ல. ச பக்த: ப்ரக்ர்த: ஸமர்த: அர்சாயாம் ஏவ ஹரயெ. இந்த செயல்முறையில் கூட, அவர்கள் இறைவனை வழிபடுவதில் ஈடுபட்டிருக்கும் பொழுது, அர்சாயாம் ஹரயெ யத்-பூஜாம் ஸ்ரத்டாயெதெ, அபாரமான பக்தியுடன் செய்வது, ஆனால் ந தட் பக்தெஸு சான்யெஸு, ஆனால் அவருக்கு மற்றவர்களிடம் இரக்கம் இல்லை அல்லது அவருக்கு ஒரு பக்தரின் நிலைப்பாடு தெரியாது, பிறகு ச பக்த: ப்ரக்ர்த: ஸமர்த: "அவர் ஜட பக்தர், ஜட பக்தர் என்று அழைக்கப்பட்டார்." ஆகையால் நாம் ஜட பக்தி நிலையிலிருந்து நம்மை உயர்த்திக் கொண்டு இரண்டாவது மேடைக்கு ஒரு பக்தர் என்றால் யார் என்பதை புரிந்துக் கொள்ளும் பொழுது பக்தர் அல்லாதவர் என்றால் என்ன, இறைவன் என்பவர் யார், நாத்திகன் என்றால் என்ன. இந்த வித்தியாசங்கள் அங்கே உள்ளது. அத்துடன் பரமஹம்ச நிலையில் இது போன்ற வித்தியாசங்கள் இல்லை. எல்லோரும் இறைவனின் சேவையில் ஈடுபட்டிருப்பதை அவர் காண்கிறார். அவருக்கு யாரிடமும் பொறாமை இல்லை, அவர் எதையும், யாரையும் பார்ப்பதில்லை. ஆனால் அது மற்றொரு நிலை. நாம் அவரைப் போல் செய்யக் கூடாது, முயற்சிக்கக் கூடாது, ஆனால் பரமஹம்சதான் மிகவும் உயர்ந்த பூரணமான நிலை என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு சமயச் சொற்பொழிவாளராக நாம் குறிப்பிட வேண்டும். வெறுமனே நான் இந்த பையனிடம் சொன்னது போல், "நீ இப்படி உட்கார்." ஆனால் ஒரு பரமஹம்சர் சொல்லாமாட்டார். பரமஹம்சர் பார்வைக்கு "அவர் சரியாக இருக்கிறார்." அவர் பார்க்கிறார். ஆனால் நாம் பரமஹம்சரைப் போல் நடக்கக் கூடாது. ஏனென்றால் நாம் சமயச் சொற்பொழிவாளர், நாம் ஆசிரியர்கள், நாம் பரமஹம்சரைப் போல் நடக்கக் கூடாது. நாம் சரியான தகவலை சொல்ல வேண்டும், சரியான பாடக்கோப்பு. ரேவதிநந்தன: நீங்கள் பரமஹம்சரைவிட உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள், பிரபுபாதா. பிரபுபாதர்: நான் உங்களைவிட தாழ்ந்தவர். நான் உங்களைவிட தாழ்ந்தவர். ரேவதிநந்தன: நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள், நீங்கள் பரமஹம்சராக இருந்தும், எங்களுக்கு சமயச் சொற்பொழிவாற்றுகிறிர்கள். பிரபுபாதர்: இல்லை, நான் உங்களைவிட தாழ்ந்தவர். நான் அனைத்து ஜீவராசிகளையும்விட தாழ்ந்தவர். நான் வெறுமனே என் ஆன்மீக குருவின் கட்டளையை செயல்படுத்த முயற்சிக்கிறேன். அவ்வளவுதான். அதுதான் அனைவருடைய தொழிலாக இருக்க வேண்டும். இயன்றவரை முயலுங்கள். மேலிடத்தின் கட்டளையை செயல்படுத்த இயன்றவரை முயலுங்கள். முன்னேற்றத்திற்கு அதுவே பாதுகாப்பான வழி. ஒருவர் தாழ்ந்த நிலையில் இருக்கலாம், ஆனால் அவர் தன்னிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட வேலையை சரியாக செயல்படுத்த முயற்சி செய்தால், அவர் பூரணம் பெறுவார். அவர் தாழ்ந்த நிலையில் இருக்கலாம், ஆனால் அவர் தன்னிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட வேலையை சரியாக செயல்படுத்த முயற்சி செய்கிறார், பிறகு அவர் பூரணம் பெறுவார். அதுதான் முக்கியத்துவம் வாய்ந்தது.