TA/Prabhupada 0329 - ‌‌நீ மாட்டை கொன்றாலும் சரி, ஒரு காயை கொன்றாலும் சரி, அது பாவச் செயல்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0329 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Con...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in Australia]]
[[Category:TA-Quotes - in Australia]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0328 - Ce mouvement pour la conscience de Krishna englobe tout|0328|FR/Prabhupada 0330 - Chacun doit s’occuper individuellement de lui-même|0330}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0328 - இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அனைத்தையும் உள்ளடக்கிய இயக்கம்|0328|TA/Prabhupada 0330 - ஒவ்வொருவரும் தன்னை தானே கவனித்துக் கொள்ளவேண்டும்|0330}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 17: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|JSK5JiBPE6g|நீ மாட்டை கொன்றாலும் சரி, ஒரு காயை கொன்றாலும் சரி, அது பாவச் செயல் <br />- Prabhupāda 0329}}
{{youtube_right|7r4Gw2loG0w|நீ மாட்டை கொன்றாலும் சரி, ஒரு காயை கொன்றாலும் சரி, அது பாவச் செயல் <br />- Prabhupāda 0329}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 42: Line 42:




''பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி'' ([[Vanisource:BG 9.26|BG 9.26]])
''பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி'' ([[Vanisource:BG 9.26 (1972)|பகவத்-கீதை 9.26]])




Line 54: Line 54:




''பத்ரம் புஷ்பம் பலம் தோயம்'' ([[Vanisource:BG 9.26|BG 9.26]])
''பத்ரம் புஷ்பம் பலம் தோயம்'' ([[Vanisource:BG 9.26 (1972)|பகவத்-கீதை 9.26]])





Latest revision as of 19:16, 29 June 2021



Room Conversation -- April 23, 1976, Melbourne


திரு டிக்சன்: மாமிசம் உண்பதில் இருக்கும் கட்டுப்பாடு இந்த அடிப்படையில் இருக்கிறதா அதாவது மிருகங்களுடைய உயிருக்கு மதிப்பு...


பிரபுபாதர்: கறிகாய்க்கும் உயிர் இருக்கிறது.


திரு டிக்சன்: ஆம். நான் கேட்க விரும்புவது என்னவென்றால் மிருகங்களின் உயிருக்கு காய்களுக்கு மேம்பட்ட மதிப்பு இருப்பதனால் அப்படியா?


பிரபுபாதர்: இது மதிப்பை பற்றிய கேள்வியே அல்ல. எங்கள் தத்துவம் என்னவென்றால் நாம் கடவுளின் சேவகர்கள். ஆக கடவுள் சாப்பிடுவார், பிறகு அவர் மிச்சம் வைத்த உணவை நாம் ஏற்கிறோம். ஆக பகவத்-கீதையில்... இந்த பதத்தை நீங்கள் காணலாம்.


பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி (பகவத்-கீதை 9.26)


உதாரணமாக, நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். ஆக நான் உங்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுக்க விரும்பினால், உங்களை கேட்பது என் கடமை, "டிக்சன் அவர்களே, நீங்கள் எதை சாப்பிட விரும்புவீர்கள்?" அப்போது நீங்கள் ஆணையிடுவீர்கள், "எனக்கு இது ரொம்பவும் பிடிக்கும்." பிறகு, நான் அந்த உணவை உங்களுக்கு அளித்தால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆக நாங்கள் கிருஷ்ணரை இந்தக் கோவிலுக்கு அழைத்திருக்கிறோம், அவர் என்ன சாப்பிட விரும்புவார் ? என நாங்கள் காத்திருக்கிறோம். ஆக அவர் கூறியிருக்கிறார்...


குரு-க்ருபா: "அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஓர் இலையோ, ஓரு பூவோ, ஒரு பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்."


பிரபுபாதர்: பத்ரம் புஷ்பம் ஃபலம். அவர் கேட்பது ரொம்ப சாதாரணமானது, யார் வேண்டுமானாலும் வழங்கக்கூடியது. ஓர் சிறு இலையோ, பத்ரம், ஓரு சிறு பூவோ, புஷ்பம், ஒரு சிறிய பழமோ, மற்றும் துளி நீர் அல்லது பால். ஆகையால் நாங்கள் அதை நைவேத்தியம் செய்கிறோம். நாங்கள் வெவ்வேறு வகையான உணவுகளை இந்த பொருட்களால் தயாரிக்கிறோம்,


பத்ரம் புஷ்பம் பலம் தோயம் (பகவத்-கீதை 9.26)


பிறகு கிருஷ்ணர் சாப்பிட்ட உடன், நாங்கள் ஏற்போம். நாம் சேவகர்கள்; கிருஷ்ணர் சாப்பிட்டு மிச்சத்தை தான் நாங்கள் ஏற்போம். நாங்கள் சைவமோ அசைவமோ உண்பவர்கள் இல்லை. நாங்கள் பிரசாதம் உண்பவர்கள். காயோ, காய் இல்லையோ, எங்களுக்கு வித்தியாசம் இல்லை, ஏனெனில் ‌‌நீ மாட்டை கொன்றாலும் சரி, ஒரு காயை கொன்றாலும் சரி, அது பாவச் செயல். மேலும் இயற்கையின் சட்டப்படி, கூறப்பட்டுவது என்னவென்றால், கைகளற்ற மிருகங்கள், கைகள் உள்ள மிருகங்களின் உணவாவார். நாமும் கைகள் உள்ள மிருகங்கள். நாம் மனிதர்களும் கைகள் உள்ள மிருகங்கள் தான். மற்றும் அவர்களும் மிருகங்கள் - கைகள் கிடையாது ஆனால் நான்கு கால்கள் உண்டு. அதை தவிர்த்து கால்கள் இல்லாத மிருகங்கள் என்றால் காய்கள். அபதானி சதுஷ்-பதாம். இந்த கால்கள் இல்லாத மிருகங்கள், நான்கு கால்கள் இருக்கும் மிருகங்களின் உணவாவார். இந்த ஆடு, மாடு புல்லை சாப்பிடுவது போல். ஆக காயை உண்பதற்கு எந்த மதிப்பும் இல்லை. இல்லையெனில் ஆடு மாடுகளுக்கு மதிப்பு அதிகம் என்றல்லவா அர்த்தம, ஏனென்றால் அவைகள் காய்களைத் தவிர வேறு எதையும் தொடுவதில்லை. ஆக நாங்கள் ஆடு மாடு ஆவதற்கு பிரசாரம் செய்வதில்லை. கிடையாது. கிருஷ்ணரின் சேவகன் ஆகுங்கள் என்பது தான் எங்கள் பிரசாரம். ஆக கிருஷ்ணர் எதை சாப்பிடுகிறாரோ அதை தான் நாங்களும் சாப்பிடுவோம். "எனக்கு மாமிசம் தா, முட்டைகள் தா," என்று கிருஷ்ணர் கூறினால் கிருஷ்ணருக்கு மாமிசம் மற்றும் முட்டைகளை வழங்கி நாங்களும் அதை ஏற்போம். ஆக நாங்கள் அசைவம், சைவம் இவையை பின்பற்றுவதாக நான் கருதுவதில்லை. அப்படி கிடையாது. அது எங்கள் தத்துவம் அல்ல. ஏனென்றால் காய்களை உண்டாலும் சரி அல்லது மாமிசத்தை உண்டாலும் சரி, அது கொலை தான். மேலும் கொல்லாமல் உயிர்வாழ முடியாது. அது இயற்கையின் விதி.


திரு டிக்சன்: ஆம்.


பிரபுபாதர்: ஆக நாங்கள் அந்த விதியை மையமாக பின்பற்றும் வகையில் ஒத்துப் போவதில்லை.


திரு டிக்சன்: சரி, பிறகு எதற்காக நீங்கள் அதன்மீது கட்டுப்பாட்டை...


பிரபுபாதர்: கட்டுப்பாடு என்பது இந்த வகையில், அசைவம் உண்ணக் கூடாது, ஏனென்றால் மாட்டை பாதுகாப்பது அவசியம். நமக்கு பால் தேவை. பாலை அருந்துவதற்குப் பதிலாக நாம் மாட்டை சாப்பிட்டால், பிறகு பால் எங்கே இருக்கும்?


திரு டிக்சன்: ஆக பால் என்பது மிகவும் முக்கியமான.


பிரபுபாதர்: மிக மிக முக்கியமானது.


திரு டிக்சன்: உலக உணவு உற்பத்தியை பொருத்தவரை மிருகங்களை உண்ணாமல் இருந்தால் இந்த உலகம் இதைவிட மிகவும் செழிப்பாகவே இருக்கும். பிரபுபாதர்: இல்லை, பால் தேவை தான். ஒரு கொழுப்பு மற்றும் வைட்டமின் உள்ளடக்கிய உணவும் தேவை. அந்த தேவை பாலால் வழங்கப்படுகிறது. ஆகையால் குறிப்பாக...


திரு டிக்சன்: உங்களுக்கு தேவைப்படும் எல்லா சத்துக்களும் தானியங்களிலிருந்து கிடைக்காதா?


பிரபுபாதர்: தானியங்கள் போதாது. தானியங்கள் மாச்சத்து கொண்டவை. மருத்துவ ரீதியாக நமக்கு நான்கு வகையான சத்துக்கள் தேவை: மாச்சத்து, கார்போஹைட்ரேட், புரதங்கள் மற்றும் கொழுப்புச் சத்து. அது தான் ஆரோக்கியமான இரத்தம். ஆக இதெல்லாம் அரிசி, பருப்பு வகைகள் மற்றும் கோதுமை உண்பதால் உங்களுக்கு கிடைக்கிறது. இவைகளில் இருக்கிறது... பருப்புகள் மற்றும் கோதுமையில் புரதம் கொண்டவை. பாலிலும் புரதம் இருக்கிறது. நமக்கு புரதம் தேவை. பாலிலிருந்து கொழுப்பு கிடைக்கிறது. கொழுப்புச் சத்தும் தேவை. மேலும் காய்களில் கார்போஹைட்ரேட்; மற்றும் தானியங்களில் மாச்சத்து கிடைக்கிறது. இந்த பொருட்களால் நல்ல உணவுகளை சமைத்தால், உங்களுக்கு போதுமானது கிடைக்கிறது. பிறகு அதை கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்தால், அது தூய்மை அடைகிறது. பின்னர் எல்லா பாவச் செயல்களிலிருந்தும் நீங்கள் விடுபடுகிறீர்கள். இல்லாவிட்டால், நீ ஒரு காயை கொன்றாலும், நீ பாவப்பட்டவன் ஆகிறாய் ஏனென்றால் அதற்கும் உயிர் இருக்கிறது. உனக்கு மற்றொரு உயிரை கொல்வதற்கு எந்த உரிமை கிடையாது. ஆனால் நீ வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும். அது தான் உன் நிலைமை. ஆகையால் அதுக்கு தீர்வு, நீ பிரசாதத்தை ஏற்றுக்கொள். காயை அல்லது மாமிசத்தை உண்பதால் பாவம் என்றால், அது உண்பவரை தான் சேரும். நாம் வெறும் மிச்சத்தை ஏற்கிறோம், அவ்வளவு தான்.