TA/Prabhupada 0675 – பக்தர் என்பவர் கருணைக்கடலாவார் – அவர் எங்கெங்கும் கருணையை பரப்பவேண்டும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0675 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0674 - Be Intelligent Enough To Know How Much You Require To Eat To Keep Your Body Fit|0674|Prabhupada 0676 - To Become Controlled By The Mind Means To Be Controlled By The Senses|0676}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0674 - உடலை திடமாக வைத்திருக்க எவ்வளவு சாப்பிடவேண்டும்...|0674|TA/Prabhupada 0676 – மனதால் கட்டுப்படுத்தப் படுதல் என்பது புலன்களால் கட்டுப்படுத்தப்படுவதாகும்|0676}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:20, 19 July 2021



Lecture on BG 6.25-29 -- Los Angeles, February 18, 1969

பிரபுபாதா : பக்கம் நூற்றி ஐம்பத்தி ஆறு.

விஷ்ணுஜன: "வலுவான நம்பிக்கையுடன் கூடிய புத்தியின் மூலம், படிப்படியாக ஸமாதியில் நிலை பெற வேண்டும். இவ்வாறு மனம் தன்னில் மட்டுமே நிலைப்படுத்தப்பட்டு வேறெதையும் சிந்திக்காமல் இருக்க வேண்டும்." (பகவத் கீதை 6.25)

பிரபுபாதா: ஆம். ஆத்மாவில்... மனம் ஆத்மாவில் நிலைத்திருக்க வேண்டும். நாம் ஆத்மா, மேலும் கிருஷ்ணரும் ஆத்மா. அதாவது, நாம் சூரியனைப் பார்க்கிறோம் என்றால், அப்போது, நாம் சூரியனையும் பார்க்க முடியும், நம்மையும் பார்க்க முடியும். சில சமயம் ஆழ்ந்த இருளில், நம்மால் நம்மையே பார்க்க முடியாது. நீங்களே இதை உணர்ந்திருப்பீர்கள். எனவே, ஆழ்ந்த இருளில், நான் என் உடலைப் பார்க்க முடியாது. இந்த உடல் என்னுடன் இருந்தாலும், நான் இந்த உடலாக இருந்தாலும் அல்லது நான் வேறெதுவாக இருந்தாலும், என்னால் என்னையே பார்த்துக் கொள்ள முடியாது. உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. எனவே, நீங்கள் சூரிய ஒளியில் இருக்கும்போது, உங்களையும் பார்க்கிறீர்கள், சூரியனையும் பார்க்கிறீர்கள் இல்லையா? எனவேதான், தன்னை உணர்தல் என்றால், முதலில் பரமாத்மாவை உணர்தல். கிருஷ்ணரே பரமாத்மா. வேதங்களில், கட உபநிஷத்தில், நித்யோ நித்யானாம்ʼ சேதனஶ் சேதனானாம் (கட² உபநிஷத்³ 2.2.13) என்று கூறப்பட்டுள்ளது. நித்யமானவர்களுள் பரமாத்மாவே பிரதானமான நித்யமானவர் ஆவார். அவர் எல்ல உயிர்வாழிகளுள் பிரதானமான உயிர்வாழியாவார். எனவே, இந்தக் கிருஷ்ண உணர்வென்பது, ஆத்மாவில் நிலைபெறுவது... அதே உதாரணம் தான். உங்கள் மனம் கிருஷ்ணரில் நிலைக்கும்போது, எல்லாவற்றிலும் நிலைக்கும். மீண்டும் அதே உதாரணம் தான், நீங்கள் உங்கள் வயிற்றைக் கவனிக்கும்போது, உடலின் எல்லா அங்கங்களையுமே கவனிக்கிறீர்கள். உங்கள் வயிற்றிற்கு சத்தான உணவளித்தீர்களானால், உங்கள் வயிறு தொந்தரவுகளற்று இருந்தால், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீகள். எனவே, நீங்கள் வேருக்கு நீரூற்றும்போது, கிளைகளும், இலைகளும், பூக்களும், எல்லாமே, தானாகவே கவனிக்கப் படுகிறது.

எனவே நீங்கள் கிருஷ்ணரை கவனித்துக் கொள்ளும்போது, அனைவருக்குமே சிறந்த சேவையைச் செய்துவிடுகிறீர்கள். இது தானாகவே நடக்கிறது. இந்தப் பையன்கள், இவர்கள், கீர்த்தனை குழுவினருடன் செல்கிறார்கள். அவர்கள், கிருஷ்ண உணர்வுடன் இருப்பதால், கோவிலில் சோம்பேறியாக உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் வெளியே சென்று, மற்றவர்களின் நன்மைக்காக, இந்தத் தத்துவத்தைப் பிரசாரம் செய்கிறார்கள். எனவே, கிருஷ்ண உணர்வுள்ளவன், சோம்பேறியாகச் சும்மாயிருப்பதில்லை. இந்த மிக நல்ல தத்துவத்தை ஏன் அனைவருக்கும் அளிக்கக் கூடாது என்று அவன் நினைக்கிறான். அதுவே அவன் குறிக்கோள். ஒரு யோகி வேண்டுமானால், தன் உயர்வுடன் திருப்தி கொள்ளலாம். தனிமையில் அமர்ந்து, யோகம் பயின்று, உன்னத வாழ்விற்கு தன்னை உயர்த்திக் கொள்ளலாம். அது அவனுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், பக்தன் தன் உயர்வினால் மட்டும் திருப்தியடைவதில்லை. நாம் வைஷ்ணவர்களை வணங்கும்போது,

வாஞ்சா²-கல்பதருப்⁴யஶ் ச
க்ருʼபா-ஸிந்து⁴ப்⁴ய ஏவ ச
பதிதானாம்ʼ பாவனேப்⁴யோ
வைஷ்ணவேப்⁴யோ நமோ நம꞉

என்கிறோம். ஒரு வைஷ்ணவர், ஒரு பக்தர், யாரென்றால், பந்தப்பட்ட ஆத்மாக்களிடம் மிகவும் கருணையுடன் இருப்பவர். க்ருபாஸின்துப்யோ, க்ருப என்றால் கிருபை, சிந்து என்றால் கடல். ஒரு பக்தர் கருணைக் கடல். அந்தக் கருணையை வழங்க விரும்புகிறார்.

ஏசு கிறுஸ்துவைப் போல. அவர் கடவுள் உணர்வுடன், கிருஷ்ண உணர்வுடன் இருந்தார். ஆனால் அவர் தன்னளவில் திருப்தி கொள்ளவில்லை. அவர் தன் இறையுணர்வுடன் திருப்தி அடைந்திருந்தார் என்றால், அவர் சிலுவையில் அறையப்பட்டிருக்கமாட்டார். ஆனால், அப்படி செய்யவில்லை. அவர் பிறரைப் பற்றியும் எண்ணினார். மற்றவர்களும் இறையுணர்வு அடைய வேண்டும். மற்றவர்களும் கிருஷ்ண உணர்வை அடைய வேண்டும். அதைச் செய்யக் கூடாது என்று அரசனால் தடுக்கப்பட்டார். தனது உயிரைப் பணயம் வைத்து, அவர் அதைச் செய்தார். இதுவே பக்தர்களின் இயல்பு. எனவே பிரச்சாரம் செய்யும் பக்தர், பகவானுக்கு மிகவும் பிடித்தமான பக்தராகிறார். இது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் வெளியே சென்று பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் எதிர்ப்புகளையும் சந்திக்கிறார்கள். சிலசமயம் தோல்வியடைகிறார்கள், சிலசமயம் அவநம்பிக்கை அடைகிறார்கள். சிலசமயங்களில் ஏற்றுக்கொள்ள வைக்கிறார்கள். மனிதர்களுள் பலவகையுண்டு. எனவே, எல்லா பக்தர்களுக்கும் எல்லா திறமைகளும் உண்டு என்று சொல்வதற்கில்லை. பக்தர்களிலும் மூன்றுவகை உண்டு. ஆனால், "நான் சென்று கிருஷ்ண உணர்வைப் பரப்புவேன்" என்ற முயற்சியே பகவானுக்குச் செய்யப்படும் மிகச்சிறந்த சேவையாகும். ஏனெனில், அவர்கள் பல எதிர்ப்புகளுக்கிடையிலும், மக்களைத் தன்னுணர்வின் உயர்ந்த நிலைக்கு உயர்த்த முயறசிக்கிறார்கள்.

எனவே, தன்னையறிந்த, தன்னுணர்வின் உன்னத நிலையில் இருப்பவனால் ஒன்றும் செய்யாது இருக்க முடியாது. அவன் வெளியே வந்தே ஆக வேண்டும். ராமானுஜ ஆச்சாரியரைப் போல. அவர் மந்திரத்தை வெளிப்படையாக அறிவித்தார். அவருடைய குரு, அந்த மந்திரத்தை... உங்கள் நாட்டிற்கு வந்த அந்த மகரிஷியைப் போல. அவர் சில தனிப்பட்ட மந்திரங்களைக் கொடுக்க விரும்பினார். மந்திரத்திற்கு சக்தி உண்டென்றால், அது ஏன் தனிப்பட்டதாக இருக்க வேண்டும்? அந்த மந்திரத்திற்கு சக்தி உண்டு என்பது உண்மயானால், அதை வெளிப்படையாகச் சொன்னால், எல்லோருமே நன்மையடைவார்களே? இது ஏமாற்று வேலை என்பது தான் உண்மை. பார்த்தீர்களா? எனவே இங்கு எந்த ஏமாற்றுவேலையும் இல்லை. நாம் இந்த மகாமந்திரம் உங்களைக் காக்கும் என்று சொல்கிறோம், இதை வெளிப்படையாக அறிவிக்கிறோம். (தெளிவாகயில்லை) இலவசமாகவே அளிக்கிறோம், எந்தக் கட்டணமுமில்லை. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் முட்டாளாக உள்ளனர். அவர்கள் அந்த மந்திரத்தின் பின்னும், அந்த மகரிஷியின் பின்னும் அலைகின்றனர். முப்பத்தியைந்து டாலர் பணம் செலுத்தி, தனிப்பட்ட மந்திரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். பார்த்தீர்களா? எனவே மக்கள் ஏமாற்றப்பட விரும்புகிறார்கள். ஆனால் இங்கோ, எந்தக் கட்டணமும் இல்லாமல், இவர்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை, தெருவிலும், பூங்காக்களிலும், எல்லாயிடத்திலும் அறிவிக்கிறார்கள், "வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்", ஆனால், "ஓ, இது நன்றாக இல்லை." இது தான் மாயை. இதுவே மாயை எனப்படுகிறது. இது மாயையின் தாக்கமே ஆகும். ஆனால் நீங்கள் ஏதாவது பணம் வாங்கினால், எதையாவது உளறினால், நீங்கள் ஏமாற்றினால், ஒ, அப்போது மக்கள் பின்பற்றுவார்கள்.

ஸச² போ³லே தோமரே லத ஜுத ஜக³த் ஹரை, த⁴ன கலி-யுக³ து³க² லல்கே³ ஹஸ்பை (?) இது ஒரு பக்தரின் ஹிந்தி பதம், அதாவது, இந்தக் கலியுகத்தில், நீ உண்மை பேசினால், மக்கள் உன்னை அடிக்கத் தடியுடன் வருவார்கள். ஆனால் அவர்களை ஏமாற்றினாலோ, குழப்பினாலோ, அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். "நான் கடவுள்" என்று சொன்னால், அவர்கள் "ஒ, ஸ்வாமிஜி கடவுள்" என்று சொல்வார்கள். "நீங்கள் எப்படி கடவுளானீர்கள்?" என்று ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். கடவுளின் அறிகுறி என்ன? அவையெல்லாம் உங்களிடம் இருக்கிறதா? யாருமே ஆரய்வதில்லை. எனவே, ஒருவன் ஆத்மாவில் நிலைபெறாதவரை, உண்மையில் தான் யார்? பரமாத்மா யார்?என்று ஒருவன் புரிந்துகொள்ளாதவரைக்கும், இது நடக்கும். எனவே, யோகம் என்றால், தன்னையுணரும் விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளுதலே ஆகும்.