TA/Prabhupada 0984 - இந்துக்களுக்கு ஒரு கடவுளும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுளும் இருக்கிறார்கள். இல்லை கடவ: Difference between revisions
(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0984 - in all Languages Category:TA...") |
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items) |
||
Line 9: | Line 9: | ||
<!-- END CATEGORY LIST --> | <!-- END CATEGORY LIST --> | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | <!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | ||
{{1080 videos navigation - All Languages| | {{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0983 - பௌதீக தன்மையுடைய மனிதர்களால் தங்கள் புலன்களை கட்டுப்படுத்த முடியாது|0983|TA/Prabhupada 0985 - மெய்ஞானத்தை ஆராய்ந்து அறிவதற்காக தான் மனித வாழ்க்கை உள்ளது|0985}} | ||
<!-- END NAVIGATION BAR --> | <!-- END NAVIGATION BAR --> | ||
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> | <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> |
Latest revision as of 07:32, 16 August 2021
720905 - Lecture SB 01.02.07 - New Vrindaban, USA
இதைத்தான் நாம் நேற்று பேசிக்கொண்டிருந்தோம். இது முதல் தரமான மத அமைப்பு என்றால் என்ன? ஸ வை பும்ஸாம் பரோ தர்ம: யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீ.ப 1.2.7) சோதனை என்னவென்றால் சண்டையிட்டுக் கொள்வதற்கு மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் "என் சமயம் தான் சிறந்தது." "நான் இந்து எனது சமயம் மிகச் சிறந்தது." மற்றவர் சொல்கிறார், "இல்லை நான் கிறிஸ்தவன் எங்கள் மதம் தான் மிகச் சிறந்தது." மற்றவர் முகமதியன் இந்தச் சண்டை தொடர்ந்து கொண்டே போகிறது. ஐரோப்பிய வரலாற்றில் சண்டை இருந்து கொண்டே இருந்திருக்கிறது, இருவேறு மத குழுக்களுக்கு இடையே போர். இந்தியாவிலும் இந்து முஸ்லிம்களுக்கு இடையே சண்டை இருந்திருக்கிறது. இந்த சண்டையின் அர்த்தம் என்ன? உண்மையில் ஒருவர் கடவுளை உணரும் பொழுது கடவுளை அறிந்தவர் ஆகிறார். பின்பு சண்டைக்கு இடம் ஏது? யஸ்ய தேவே பரா... ஒருவர் இருக்க வேண்டும் என்பதால் ஒருவர் கடவுள் உணர்வுடன் இருந்தால், யஸ்யாஸ்தி பக்திர் பகவத்யகிஞ்சனா (ஸ்ரீ.பா 5.18.12) வேத இலக்கியங்கள் சொல்கின்றன ஒருவர் கடவுளின் பக்தனாக இருந்தால்...
கடவுள் ஒருவர்தான் இருவராக இருக்க முடியாது. இந்துக்கள் தங்களுக்கு என்று ஒரு கடவுளும் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு என்று வேறு ஒரு கடவுளும் வைத்திருப்பது அல்ல. இல்லை கடவுள் இருவராக இருக்கமுடியாது. அதனால் கடவுள்களுக்கு இடையே போட்டி இருக்காது. "நான் கடவுள்." என்று சொல்லிக்கொள்வது இப்போது நாகரீகம் ஆகிவிட்டது பல கடவுள்கள் அயோக்கியர்கள் வந்துவிட்டனர் நான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு. ஒவ்வொருவனும் "நான் கடவுள்", "நான் கடவுள்", "நான் கடவுள்" என்றால் எத்தனை கடவுள் இருக்க முடியும்? இல்லை கடவுள் என்பது ஒன்றுதான். ஏகோ ப்ரஹ்ம த்விதீய நாஸ்தி, வேதக் கருத்து. சூரியனைப் போல சூரியன் ஒன்றுதான் அது போல. நம்முடைய நடைமுறை உதாரணத்தில் நாம் இது அமெரிக்க சூரியன் இந்திய சூரியன் என்று சொல்ல முடியாது. அல்லது ஆப்பிரிக்க சூரியன் என்று. சூரியன் ஒன்றுதான். கடவுளின் படைப்பு ஒன்றாக இருந்தால் அது எத்தனை சக்தி உடையதாக இருக்கிறது... சூரியனும் கடவுளுடைய படைப்புதான். ஆயிரம் சூரியன்கள் இருக்கின்றன ஆனால் நாம் ஒன்றை தான் பார்க்க முடியும். கடவுளால் படைக்கப்பட்ட ஒரு சூரியனே இத்தனை வேலைகளைச் செய்யும் பொழுது இத்தனை ஒளியையும் சூட்டையும் யாருக்கும் தர முடியுமானால் அந்த சூரியனை உருவாக்கியவர் எத்தனை சக்தியாக இருக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். இதுவே பொது அறிவு. நமக்கு பகவத் கீதையில் இருந்து செய்தி கிடைக்கிறது (பக்கத்தில்:) ருப்பானுக இங்கே வரலாம்.
- அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ:
- மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
- இதி மத்வா பஜந்தே மாம்
- புதா பாவ-ஸமன்விதா:
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ: நாம் எதையெல்லாம் பார்க்கிறோமோ, எதெல்லாம் இருக்கிறதோ, அத்தனையும் கடவுளால் உருவாக்கப்பட்டது தான். அதுவே வேதாந்த சூத்திரத்தின் முடிவு. எளிதாகச் சொல்ல வேண்டுமானால் கடவுளைப் பார்க்க வேண்டும் என்றால் இரண்டே வார்த்தைகளில் வேதாந்தம் சொல்கிறது கடவுள் அல்லது பரம்பொருள் என்பது அனைத்திற்கும் மூலமாக இருப்பது. ஜன்மாத்யஸ்ய யத: (SB 1.1.1). அனைத்தும் எதிலிருந்து வந்தது அந்த மூலமே கடவுள். மிக எளிமையான விளக்கம். யாரும் புரிந்து கொள்ளலாம். அதைப் புரிந்து கொண்டால்... இதுவே நமது கேள்வி... தத்துவம் என்பது கேட்டறிய பட வேண்டியது. அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா - கேட்டறிதல்