TA/Prabhupada 0985 - மெய்ஞானத்தை ஆராய்ந்து அறிவதற்காக தான் மனித வாழ்க்கை உள்ளது
720905 - Lecture SB 01.02.07 - New Vrindaban, USA
இந்த வாழ்க்கை, மனித வாழ்க்கை, மெய்ஞானத்தை கேட்டு அறிவதற்காகவே உள்ளது. மிருக வாழ்க்கையில் இது சாத்தியமில்லை. பெரிய பெரிய மிருகங்கள் இருக்கின்றன புலிகள் சிங்கங்கள் யானைகள் பெரிய பெரிய மரங்களும் இருக்கின்றன. அவையும் உயிர் வாழிகள் தான். கடலுக்குள் இருக்கும் பிரம்மாண்டமான பெரிய பெரிய சுறா மீன்கள் மாபெரும் மலைகள் அவற்றிற்கும் உயிர் இருக்கின்றது. ஆனால் அவை கடவுளைப் பற்றி அறிய முடியாது. கடவுளைப் பற்றி இந்த மனித வாழ்க்கையில் மட்டும்தான் கேட்டு அறிய முடியும். எனவே நாகரீக சமுதாயத்தில் கடவுளைப் பற்றிய இதற்குப் பெயர்தான் சமயம். இதில் சிறுசிறு வேறுபாடுகள் இருக்கலாம். இந்தியாவிலும் இதைப்போன்ற கேட்டறியும் தன்மை உள்ளது. இப்பொழுது இல்லை. அதனை விட்டுவிட்டனர். ஆனால் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடவுளைப் பற்றி அறியும் ஆர்வம் இந்தியாவில் மிகுதியாக இருந்தது. ஒரு சீனர் எழுதிய தத்துவ நூலில் கூட பரிந்துரைக்கப்பட்டது... புத்தகத்தின் பெயர் எனக்கு மறந்துவிட்டது - நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சமய வகுப்புகளில் அது படிக்கப் படுகிறது. அந்தப் புத்தகத்தில் அவர் சொல்கிறார் உங்களுக்கு கடவுளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் சமயத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால் இந்தியாவிற்கு செல்லுங்கள் என்று. ஆமாம் அது உண்மை. ஏனெனில் வேறு எந்த நாட்டிலும் இத்தனை பெரிய ஞானிகளும் யோகிகளும் கடவுளைப் புரிந்துகொள்ள தங்களை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. அதனால் தான் வேதாந்த சூத்திரம் இருக்கிறது.
கடவுள் ஒன்று என்று நாம் அறிய வேண்டும். கடவுள் வேறுபட்டவர் அல்ல. கடவுளுக்கு எந்தப் போட்டியும் இல்லை. மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய (ப.கீ 7.7) கடவுளை மீறிய உயரிய உண்மை வேறு இல்லை. எனவே கடவுள் உயர்ந்தவர் என்றும் பூரணம் ஆனவர் என்றும் சொல்லப்படுகிறார். எனவே சமயம் என்பது உயர்தரமான சமயம் என்பது அதனை கடைப்பிடிப்பவர்கள் கடவுளை எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொருத்தது. அதுவே முதல் தரமான சமயம். எத்தனை மிருகங்களை பலி கொடுக்கலாம் எத்தனை முறை கொடுக்கலாம் என்பதல்ல அது... ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு சடங்குகளும் பல்வேறு விஷயங்களும் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த சோதனையின் முடிவை அறிய வேண்டும், பலேன பரிசீயதே. அனைத்தையும்.... எப்படி அனைத்தையும் படித்திருக்கிறோமோ ஒரு அறிவியலாளருக்கு, அதற்கு ஒரு தேர்வு உண்டு. தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அவர் நன்கு படித்தவராக அறியப் படுவார். அதுவே நமது பொதுஅறிவு. பள்ளிகள் கல்லூரிகள் அனைத்திலும். தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் தன்னைப் பற்றியே "நான் இதைப் படித்திருக்கிறேன் அதை படித்திருக்கிறேன்," என்று சொல்லிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒரு மனிதன் தொழில் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம் தொழில் செய்வதனால் அவன் பணம் ஈட்டி இருந்தால், அவன் பணக்காரன் ஆவான் அதனால் அவன் ஒரு வெற்றிகரமான வியாபாரி என்று அறியலாம். ஆனால் அவன் ஏழையாக இருந்து கொண்டு "நான் இதைச் செய்தேன் அதைச் செய்தேன்," என்று சொன்னால், நீ பேசலாம் ஆனால் அதன் பயனை நாம் பார்க்க வேண்டும் என்று சொல்வோம். ப²லேன பரிசீயதே. அது சமஸ்கிருதத்தில் கூறப்பட்டுள்ளது, பலனைக் கொண்டு தான் நாம் புரிந்து கொள்ள முடியும். உன் பரிட்சை தாளின் மதிப்பு, நீ வாங்கும் மதிப்பெண்ணில் தான் உள்ளது. நம்மை நாம் பெரும் மதவாதிகள் என்று சொல்லிக் கொள்ளலாம் மாபெரும் மதத்தை கடை பிடிப்பவராக இருக்கலாம் ஆனால் அது என்ன இது என்ன? கடவுள் உணர்வை எவ்வளவு வளர்த்துக் கொண்டு இருக்கின்றோம் கடவுளிடம் அன்பு செலுத்த எவ்வளவு அறிந்திருக்கின்றோம்