TA/Prabhupada 0855 - ஒரு வேளை நான் ஜட வாழ்க்கையின் இன்பங்களைத் துறந்தால், என் இன்ப வாழ்க்கையே முடிந்தது என்: Difference between revisions
(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0855 - in all Languages Category:TA...") |
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items) |
||
Line 9: | Line 9: | ||
<!-- END CATEGORY LIST --> | <!-- END CATEGORY LIST --> | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | <!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | ||
{{1080 videos navigation - All Languages| | {{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0854 - பெரியவற்றை விட மிகப்பெரியவர், சிறியவற்றை விட மிகச்சிறியவர். அவரே பகவான்|0854|TA/Prabhupada 0856 - கடவுள் எப்படியொரு நபராக இருக்கிறாரோ அதே போல் ஆத்மாவும் ஒரு நபர்|0856}} | ||
<!-- END NAVIGATION BAR --> | <!-- END NAVIGATION BAR --> | ||
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> | <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> |
Latest revision as of 07:29, 28 August 2021
750306 - Lecture SB 02.02.06 - New York
எனவே, இந்த ஜட உலகில் நாம் இருக்கும்வரை, நான் இந்திரனாகவோ, பிரம்மாவாகவோ அல்லது அமெரிக்காவின் ஜனாதிபதியாகவோ அல்லது இதுவோ இருக்கலாம் - இந்த நான்கு விஷயங்களை உங்களால் தவிர்க்க முடியாது. இதுவே ஜட வாழ்க்கையின் நிலை. அதுதான் பிரச்சனை. ஆனால் நீங்கள் கவலைகளுக்குத் தீர்வு காண விரும்பினால், அதற்கான வழிமுறை இதுதான்: நிவ்ருத்த. அன்யாபிலாசிதா-சூன்யம். பௌதிக இன்பத்திற்காக ஆசைப்படாதீர்கள். இன்பம் இருக்கிறது. "நான் என் பௌதீக இன்பத்தை நிறுத்தினால், என் இன்ப வாழ்க்கை முடிந்துவிடும்" என்று நினைக்க வேண்டாம். இல்லை. அது முடிவடையவில்லை. நோய்வாய்ப்பட்ட மனிதனைப் போல: அவரும் சாப்பிடுகிறார், அவரும் தூங்குகிறார், அவருக்கு வேறு கடமைகளும் உள்ளன, ஆனால் அது ... அவன் சாப்பிடுவதும், தூங்குவதும், ஆரோக்கியமான மனிதன் சாப்பிடுவதும், உறங்குவதும் ஆகியவை ஒன்றல்ல. அதுபோல, நமது பௌதீக இன்பம் - உண்ணுதல், உறங்குதல், புணர்தல் மற்றும் பாதுகாத்துக்கொள்வது - இவை அனைத்திலும் ஆபத்து இருக்கிறது. எந்த விதமான தடைகளும் இல்லாமல் அதை அனுபவிக்க முடியாது. அனேக தடைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும். எனவே அந்தத் தடையில்லா மகிழ்ச்சியை நாம் விரும்பினால் ... மகிழ்ச்சி இருக்கிறது. நோயுற்ற மனிதனைப் போலவே, அவனும் சாப்படுகிறான், ஆரோக்கியமானவன் அவனும் சாப்பிடுகிறான். ஆனால் நோயுற்றவனுக்கு எல்லாமே கசப்பாக இருக்கிறது. மஞ்சள் காமாலை உள்ளவனிடம் ஒரு மிட்டாயை கொடுத்தால் அவனுக்கு அது கசப்பாக இருக்கும். அதுதான் உண்மை. ஆனால் அதுவே அவன் குணமடைந்தப்பின் கொடுத்தால், தித்திப்பாக இருக்கும். இதேபோல், இந்த ஜட வாழ்க்கையானது எண்ணற்ற துன்பங்களை உடையது. நம்மால் முழுவதுமாகச் சந்தோஷமாக இருக்க முடியாது. அப்படி முழுவதுமாகச் சந்தோஷப் பட வேண்டும் என்றால் நீ ஆன்மீக உலகதிற்கு வர வேண்டும். துக்காலயம் அஷாஷ்வதம் (பகவத் கீதை 8.15). இந்த ஜட உலககத்தை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இது துக்காலயம். இது துன்பங்களின் இடம். ஆனால் நீங்கள் சொல்லலாம், "இல்லை, நான் ஏற்பாடு செய்துள்ளேன். எனக்கு இப்போது நல்ல, நல்ல வங்கி இருப்பு கிடைத்துள்ளது. என் மனைவி மிகவும் நல்லவள், என் குழந்தைகளும் மிகவும் நல்லவர்கள், அதனால் நான் கவலைப்படவில்லை. நான் பௌதீக உலகில் இருப்பேன்," கிருஷ்ணர் சொல்கிறார் அஷாஷ்வதம்: "இல்லை, ஐயா. நீங்கள் இங்கு வாழ முடியாது. நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள்." துக்காலயம் அஷாஷ்வதம். நீங்கள் இந்தத் துன்பகரமான வாழ்க்கையில் இருக்க சம்மதித்தாலும், அதுவும் அனுமதிக்கப்படாது. இங்கேயும் உனக்கு நிரந்தர வாழ்க்கை இல்லை.ததா தேஹாந்தர ப்ராப்திர். அப்படியானால் இந்தப் பிரச்சனைகள்... இந்தப் பிரச்சனைபற்றி விவாதிக்கும் விஞ்ஞானிகள் எங்கே? ஆனால் பிரச்சினைகள் உள்ளன. தனக்குக் கிடைத்த எந்தக் குடும்பத்தையும் விட்டுக்கொடுக்க யார் விரும்புகிறார்கள்? அனைவருக்கும் குடும்பம் உள்ளது, ஆனால் யாரும் தன் குடும்பத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. ஆனால் வலுக்கட்டாயமாக அவன் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் அழுகிறான், "ஓ, நான் இப்போது போகிறேன். நான் இப்போது இறந்து கொண்டிருக்கிறேன். என் மனைவி, என் பிள்ளைகளுக்கு என்ன நடக்கும்?" அவர் கட்டாயப்படுத்தப்படுகிறார். நீ வெளியேற வேண்டும். எனவே இதுதான் பிரச்சனை. எனவே பிரச்சினைக்குத் தீர்வு எங்கே? பிரச்சனைக்குத் தீர்வு இல்லை. நீங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பினால், கிருஷ்ணர் கூறுகிறார்,
- மாம் உபேத்ய கௌந்தேய
- துக்காலயம் அஷாஷ்வதம்
- நாப்னுவந்தி மஹாத்மானஹ
- ஸம்ஸித்திம் பரமாம் கதா:
"யாராவது என்னிடம் வந்தால்," மாம் உபேத்ய, "அவன் மறுபடியும் இந்தக் துன்பங்கள் அடங்கிய ஜட வாழ்க்கைக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை."
ஆதலால் சுகதேவ கோஸ்வாமி கூறுகிறார் நீ ஒரு பக்தனாக வாழ்ந்தால் உன் கவலைகள் எல்லாம் தானாகவே தீர்ந்து விடும்.