TA/Prabhupada 0263 - நீங்கள் இந்த சூத்திரத்தை நன்றாக எடுத்துகொண்டுவிட்டால், பிறகு தொடர்ந்து பிரச்சாரம்
Lecture -- Seattle, September 27, 1968
பிரபுபாதர்: ஆம். மதுத்விசன் : பிரபுபாதரே, சைதன்ய மகாபிரபு, கலியுகத்தில் நிகழப்போகும் பொற்காலத்தை பற்றிய முன்னுரைத்தலில் குறிப்பாக கூறியது என்ன, (மங்கிய ஒலி) மக்கள் எப்பொழுது ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பார்கள் ? பிரபுபாதர் : ஆம் . மக்கள்... எப்படி என்றால், நாம் இன்ப்போது ஹரே கிருஷ்ண திருநாமத்தை பிரச்சாரம் செய்து வருகிறோம். உங்கள் நாட்டில் அப்படி ஒரு பிரச்சாரமும் இருக்கவில்லை. ஆக நாம் நம்முடைய மாணவர்களை ஐரோப்பா , ஜெர்மனி, லண்டன் போன்ற நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறோம் - நீங்களும் இதை பர்ரபுகிரீர்கள். இவ்வாறு, நாம் மற்றுமே, 1966 யிலிருந்து இவ்வாறு வாஸ்தவத்தில் செயல்பட்டு வருகிறோம். நாம் 1966 இல் இந்த சங்கத்தை பதிவு செய்துள்ளோம். இப்போழுது 1968 ஆகிவிட்டது. ஆக நாம் படிப்படியாக பிரபலம் ஆகி வருகிறோம். நான் வயதானவன். ஒரு நாள் என் காலம் கடந்துவிடும். நீங்கள் இந்த சூத்திரத்தை நன்றாக கற்றுக்கொண்டிருந்தால், பிறகு நீங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்வீர்கள், மற்றும் இது உலகம் முழுவதும் பரவக்கூடும். மிகவும் எளிதான விஷயம். ஒருவருக்கு கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவை. அவ்வளவு தான். ஆக எந்த ஒரு புத்தியுள்ள மனிதனும் இதை பாராட்டுவான். ஆனால், ஒருவன் முழு சம்மதத்துடன் ஏமாற விரும்பினால், பிறகு அவனை எப்படி காப்பாற்றுவது ? அவனை நம்பவைப்பது மிகவும் கஷ்டம். ஆனால், திறந்த மனம் படைத்தவர்கள் , இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆம். ஜெய-கோபாலன்: தாழ்ந்த சக்தியை, நமக்குள் இருக்கும் சக்தியை, கிருஷ்ணரின் சேவையில் பயன்படுத்தும்பொழுது அது ஆண்மீகத்தன்மையை அடைகிறது அல்லவா? பிரபுபாதர் : நீ உன் சக்தியை செலுத்தியவுடன், அது பௌதிகத்துடன் சேர்த்தியே இல்லை; அது ஆண்மீகத்தன்மையை அடைகிறது. உதாரணத்திற்கு, செப்பு கம்பி மின்சாரத்தின் தொடர்பில் வந்தவுடன், அது அதே செப்பாக இருப்பதில்லை; அது மின்சாரத்தன்மையை அடைகிறது. ஆக நாம் நம்மை கிருஷ்ணறது திருப்பணியில் பரிபூரணமாக ஈடுபடுத்திக்கொண்டால், அப்பொழுது நமக்கும் கிருஷ்ணருக்கும் வித்தியாசம் இருப்பதில்லை. இது பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. மாம் ச (அ)வ்யாபீசாறேண பக்தி-யோகன யஹ் சேவதே. குறிப்பாக சேவதே என்ற வார்த்தை. ஸ குணான் சமதீத்யான் ப்ரஹ்ம-பூயாய கல்பதே (பகவத் கீதை 14.26). "யார் ஒருவன் தன்னை என் சேவையில் பரிபூரணமாக அர்ப்பணித்துக் கொள்கிறானோ, அவன் உடனேயே பௌதிகத் தன்மைகளை கடந்து, ப்ரஹ்மன் நிலையை அடைகிறான்." ப்ரஹ்ம-பூயாய கல்பதே. ஆக கிருஷ்ணரின் திருப்பணியில் நாம் நமது சக்தியை ஈடுபடுத்தினால், அதை ஜட சக்தி என்று நினைக்கக் கூடாது. இல்லை. இந்த பழங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவன் நினைக்கலாம், "இவை வெறும் பழங்கள் தான். அது என்ன பிரசாதம்? இந்த பழம் கடையில் வாங்கப்பட்டிருக்கிறது, நாமும் தான் வீட்டில் பழம் சாப்பிடுகிறோம், ஆனால் இந்த பழம் மட்டும் பிரசாதமா?" அப்படி கிடையாது. கிருஷ்ணருக்கு படைத்த பிறகு அது ஜட இயற்கையைச் செர்ந்ததாகாது. இதன் விளைவு? கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிட்டுப் பாருங்கள். கிருஷ்ண உணர்வில் நீங்கள் முன்னேறுவதை நீங்களே உணர்வீர்கள். மருத்துவர் உங்களுக்கு மாத்திரை கொடுத்து அதனால் நீங்கள் குணமடைந்தால், அது மாத்திரையின் ஆற்றல். ஜட விஷயங்கள் எப்படி ஆன்மீகத்தன்மையை அடைகின்றன என்பதற்கு இன்னொரு உதாரணம் இருக்கிறது. ஒரு ரொம்ப நல்ல உதாரணம். நீங்கள் அளவுக்கதிகமாக பாலை குடித்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. மருத்துவரிடம் செல்கிறீர்கள். குறைந்தபட்சம் வேத மருத்துவத்தில்... அவர்கள் உங்களுக்கு தயிரை சாப்பிட சொல்வார்கள். அது பாலிலிருந்து தயாரிக்கப்பட்டது. தயிருடன் சிறிதளவு மருந்து கொடுத்தால் சரி ஆகிவிடும். உங்கள் வயிற்று வலியின் காரணமும் பால் தான், அதை குணப்படுத்தியதும் பால் தான். ஏன்? அது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது. அதேபோலவே தான் எல்லாமே... மேம்பட்ட உணர்வில், எதுவும் ஜட இயற்கையைச் சேர்ந்ததல்ல; அது வெறும் மாயை. இன்று காலை நான், சூரியன் மற்றும் மூடுபனியின் உதாரணத்தை கொடுத்திருந்தேன். அப்படித்தான். மூடுபனி இருந்தது; அதனால் சூரியன் தென்படவில்லை. ஒரு முட்டாள் கூறுவான், "சூரியனே கிடையாது. மூடுபனி மட்டுமே உள்ளது." ஆனால் அறிவுள்ள ஒருவன் கூறுவான், "சூரியன் இருக்கிறது, ஆனால் மூடுபனி நம் கண்களை மறைக்கிறது. நம்மால் சூரியனை பார்க்க முடியவில்லை." அதுபோலவே, உண்மையில், அனைத்துமே கிருஷ்ணரின் சக்திகள் என்பதால், எதுவுமே பௌதிக சக்தி அல்ல. நமது அதிகாரம் செலுத்தும் மனப்பான்மை, அதுதான் பொய்யானது, மாயை. அதுதான் கிருஷ்ணருடனான நமது உறவை மறைக்கிறது. நீங்கள் அதை படிப்படியாக புரிந்துகொள்வீர்கள். செவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரதி அதஹ (பக்தி ரசாம்ருத சிந்து 1.2.234). தொண்டாற்றும் மனப்பான்மையில் நீங்கள் வளர்ச்சி அடைய அடைய, எல்லாமே தெளிவாகிவிடும், அதாவது எப்படி உங்கள் சக்தி ஆண்மீகத்தன்மையை அடைகிறது, எல்லாம்.