TA/Prabhupada 0805 - கிருஷ்ண உணர்வில் இருப்போர், அடிமைத்தனம் எது விடுதலை எது என்பதை கற்றிருக்கிறார்கள்
Lecture on SB 5.5.2 -- London, September 17, 1969
பிரபுபாதர்:
- மஹாத்மானஸ் தே... மஹாந்தஸ் தே ஸம - சித்தா: ப்ரஷாந்தா
- விமன்யவ: ஸுஹ்ருத: ஸாதவோ யே
கடைசி கூட்டத்தில் மோட்சத்திற்கான வழியைப் பற்றி கலந்துரையாடினோம். அங்கே இரண்டு வழி உள்ளது. ஒன்று மோட்சத்திற்கானது. மோட்சம் என்றால் இந்த பௌதிக பந்தத்திலிருந்து விடுதலை பெறுதல். பௌதிக பந்தம் என்றால் என்னவென்று மக்களுக்கு புரியவில்லை. ஆனால் கிருஷ்ண உணர்வில் இருப்பவர்களுக்கு, பந்தம் மற்றும் விடுதலை என்றால் என்னவென்று கற்பிக்கப்படுகிறது.
ஒரு ஆன்மீக ஆன்மா, முழுமுதற் கடவுளின் அங்க உறுப்புகளாக இருப்பதால், அவர்கள் இயற்கையில் சக்தி நிறைந்தவர்களாக உள்ளனர். நமக்கு எவ்வளவு ஆன்மீக சக்தி இருக்கிறது என்று நமக்கே தெரியாது, ஆனால் அது பௌதிக திரையால் அடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நெருப்பை போல். இந்த நெருப்பு, அதில் அதிகமான சாம்பல் இருந்தால், நெருப்பின் வெப்பத்தை சரியாக உணர முடியாது. ஆனால் நீங்கள் சாம்பலை அகற்றிவிட்டு அதை விசிறினால், மேலும் சுவாலை ஏற்படும் போது, பிறகு நீங்கள் சரியான வெப்பத்தை பெறுவீர்கள் மேலும் நீங்கள் பல காரியங்களுக்கு அதை பயன்படுத்தலாம். அதேபோல், நாம், ஆன்மீக ஆன்மாவாக, நமக்கு அளவற்ற சக்தி உள்ளது. மேலும் பகவான் நித்தியமான ஆன்மீக ஆன்மா, ஆகையால் பகவானுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று நம்மால் கற்பனை செய்ய முடியாது. ஆனால் நாம், வெறும் மிகச்சிறிய துணுக்கு .... ஒப்பிட்டால் வெறும் நெருப்பும் தீப்பொறியும் போல். நெருப்பும் தீப்பொறியும், அவை இரண்டுமே நெருப்பு. தீப்பொறி கூட, எங்கெல்லாம் அது விழுகிறதோ, உடனடியாக அது பற்றிக் கொள்ளும். அதேபோல், நமக்கும் பகவானுடை அனைத்து தன்மைகளும் சிறிய அளவில் இருக்கிறது. பகவானுக்கு படைக்கும் சக்தி இருக்கிறது; ஆகையினால் நாமும் பல பொருள்களை படைக்கிறோம். விஞ்ஞானிகள் பல அற்புதமான பொருள்களை உருவாக்குகிறார்கள். நம்மைப் போன்றவர்களுக்கு அது அற்புதமானதாகும், ஏனென்றால் நமக்கு ஒருவர் எவ்வளவு அற்புதமாக உருவாக்க முடியும் என்று தெரியாது. அது நமக்கு தெரியாது.