TA/Prabhupada 0990 - நேசம் என்பது நான் என்னையே நேசிக்கிறேன் என்பதோ நேசத்தின் மேல் தியானம் செய்கிறேன் என்ப

Revision as of 07:33, 16 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


740724 - Lecture SB 01.02.20 - New York

பகவத் பக்தி யோகம் என்பது ஒரு வகையான யோகம் அதுவே உண்மையான யோகம். மிகச் சிறந்த யோக முறை என்பது பகவத் பக்தி மேலும் பகவத் பக்தி யோகம் தொடங்குவது, ஆதௌ குர்வாஷ்ரய:. முதலில் குருவிடம் சரணடை.

தத் வித்தி ப்ரணிபாதேன
பரிப்ரஷ்நேன ஸேவயா
(ப.கீ 4.34)

குருவிடம் முழுமையாக சரணடையாமல் நாம் தீட்சை எடுத்துக் கொள்வதற்கு அர்த்தமில்லை. தீட்சை என்ற பேச்சுக்கே இடமில்லை. திவ்ய ஜ்ஞான ஹ்ருதே ப்ரோகாஷிதோ. திவ்ய-ஜ்ஞான என்றால் ஆன்மீகமான ஞானம் என்று பொருள். குருவிடம் தந்திரங்கள் செய்து ஏமாற்றி நடந்து கொள்வது இந்த அயோக்கியத் தனம் பகவத் பக்தி யோகத்திற்கு உதவாது. உனக்கு மற்றவை கிடைக்கும் மற்ற பௌதீக பலன்கள் கிடைக்கலாம் ஆனால் ஆன்மீக வாழ்வு கெட்டுவிடும்.

ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் ஆன்மீக விழிப்புணர்வுக்கு பணம் பெறுவதற்கு பணம் எப்படி ஈட்டுவது என்பதற்கு அல்ல. அது அல்ல கிருஷ்ணபக்தி. சைதன்ய மகாபிரபு அறிவுறுத்துகிறார்,

ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம்
கவிதாம் வா ஜகத்-ஈஷ காமயே
(சை.ச அந்த்ய 20.29).

ந தனம். பௌதிக வாதிகள் என்ன வேண்டுகின்றனர்? அவர்களுக்கு பணம் வேண்டும். அவர்களைச் சுற்றி பல சிஷ்யர்களும் அடங்கிய அவர்களும் வேண்டும் அல்லது அழகான மனைவி வேண்டும். அதுவே பௌதிகம். ஆனால் சைதன்ய மகாபிரபு அதனை மறுக்கிறார். ந தனம்: "வேண்டாம் வேண்டாம் எனக்கு பணம் வேண்டாம்." அதுவே அவருடைய அறிவுறுத்தல். ந-தனம் ந-ஜனம் "எனக்கு ஒருவரையும் அடக்கியாள வேண்டாம்" ந… ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம்; அழகிய மனைவியை பற்றிய கற்பனை கவிதையும் வேண்டாம். "இந்தப் பொருட்கள் எனக்கு வேண்டாம்." பின்பு பகவத் பக்தி யோகம் என்பது என்ன? ந… ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம்;

மம ஜன்மனி ஜன்மனீஷ்வரே பவதாத்
பக்திர் அஹைதுகீ த்வயி
(சை.ச அந்த்ய 20.29)

இந்த பகவத் பக்தனுக்கு முக்தி கூட வேண்டாம். சைதன்ய மஹாபிரபு ஒவ்வொரு பிறப்பிலும் ஜன்மனி ஜன்மனி என்று ஏன் கூறுகிறார்? முக்தி அடைந்த அவர் இந்த பௌதிக உலகில் மறுபடி வந்து பிறப்பதில்லை. அருவ வாதிகள் கிருஷ்ணரின் உடலிலிருந்து வரும் கிரணங்களான பிரம்ம ஜோதியில் கலந்து விடுகின்றனர், மேலும் பக்தராக இருப்பவர் வைகுண்டம் அல்லது கோலோக பிருந்தாவனத்தில் நுழைவதற்கு அனுமதி பெறுகின்றனர். (பக்கத்தில்) சத்த படுத்தாதீர்கள்.

எப்போதும் ஆனந்தமயமாக இருக்கவேண்டும் ஆனால் அதுவே ஆன்மீக வாழ்க்கை. எப்போதும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் ஏதாவது திட்டம் தீட்டிக் கொண்டே இருக்காமல் இருத்தலே ஆன்மீக வாழ்க்கை. பௌதிக வாழ்வில் இருக்கும் மனிதர் மிகவும் ஆனந்தமாக இருப்பதைப் பார்க்க முடியாது. அவன் வருத்தம் தோய்ந்த முகத்துடன் எப்போதும் யோசித்துக்கொண்டே புகை பிடித்துக் கொண்டு குடித்துக் கொண்டிருக்கிறான் ஏதோ பெரிய பெரிய திட்டம் தீட்டிக் கொண்டு. அதுவே பவுதிக வாதி. பகவத் பக்தி யோக தக பிரசன்ன மனசோ பகவத்கீதையில்

ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா
ந ஷோசதி ந காங்க்ஷதி
(ப.கீ 18.54)

ப்ரஸன்நாத்மா அதுவே ஆன்மீக வாழ்க்கை. ஆன்மீக வாழ்க்கைக்கு வந்தவுடன் நீ அத்வைதி கொள்கையில் இருந்தாலும் த்வைதிக் கொள்கையில் இருந்தாலும், இருவருமே ஆன்மீகவாதிகள் தான். வேறுபாடு என்னவெனில் அத்வைதி நினைக்கிறான். "நான் ஆன்மா கடவுளும் ஆன்மா எனவே நாம் இருவரும் ஒன்று நாம் அதனுடன் ஒருங்கிணைவோம்." ஸாயுஜ்ய-முக்தி. கிருஷ்ணர் அவர்களுக்கு ஸாயுஜ்ய-முக்தி. கொடுக்கிறார். ஆனால் இது சிறந்ததல்ல ஏனெனில் ஆனந்தமயோ 'ப்யாஸாத் (வேதாந்த-ஸூத்ர 1.1.12). ஆனந்தம் உண்மையான ஆனந்தம் தனக்குள் காண முடியாதது. அதற்கு இருவர் வேண்டும். நேசம் என்பது நான் என்னையே நேசிக்கிறேன் அதனை நான் தியானம் செய்கிறேன் என்று சொல்வதல்ல. நம்மை நேசிப்பதற்கு மற்றொருவர் இருக்க வேண்டும் நம் காதலர். எனவே த்வைத வாதம்.. பக்திக்கு வந்தவுடன் த்வைத வாதம் வந்து விடும். இரண்டு - கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணரின் பக்தர். கிருஷ்ணருக்கும் கிருஷ்ணரின் சேவகனும் இடையில் நடக்கும் பரிமாற்றமே பக்தி எனப்படும். அந்தப் பரிமாற்றங்கள் பக்தி எனப்படும் அதனால்தான் அதற்கு பகவத் பக்தி யோகம் என்று பெயர். ஒருமைத் தன்மை இல்லை. எப்போதும் பக்தன் இருக்கிறான் பக்தன் கிருஷ்ணனை திருப்திப்படுத்த முயல்கிறான்.