TA/Prabhupada 0099 - கிருஷ்ணரால் எவ்வாறு அங்கீகரிக்கப்படுவது
Lecture on BG 13.4 -- Bombay, September 27, 1973
ஆகையால், பம்பாயிலோ, அல்லது வேறு நகரத்திலோ இருப்பினும் பல வகுப்பைச் சேர்ந்த மனிதர்கள் இருப்பதை நாம் காண்கிறோம், அதேபோல், அனைத்து உயிர் வாழிகளும், ஒரே தரம் வாய்ந்தவை அல்ல. அவற்றுள் சில ஜட வகையின் நற்குணங்களுடன் தொடர்புடையவை, அவற்றுள் சில ஜட வகையின் தீவிர உணர்ச்சியுடன் தொடர்புடையவை, இன்னும் சில ஜட வகையின் அறியாமையுடன் தொடர்புடையதாக உள்ளன. ஆகையால், அறியாமையில் இருப்பவர்கள், அவர்கள் நீரில் விழுந்தவர்களைப் போன்றவர்கள். நீரில் விழுந்த நெருப்பைப் போல் அது முழுமையாக அணைந்துவிடும். மேலும் காய்ந்த புல், ஒரு தீப்பொறி விழுந்தால், காய்ந்த புல்லை சாதகமாக்கிக் கொண்டு, நெருப்பு பற்றிக் கொள்ளும். அது மறுபடியும் நெருப்பாகும். அதேபோல், நற்குணவகையில் இருப்பவர்கள், அவர்களால் கிருஷ்ணர் உணர்வை சுலபமாக விழிப்பூட்ட முடியும். ஏனென்றால் பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளது, யேஷாம் துவந்த-கதம் பாபாம். மக்கள் ஏன் இந்த கோயிலுக்கு வருவதில்லை? ஏனென்றால், அதன் சிரமம் யாதெனில் அவர்களில் சிலர் மொத்த அறியாமையில் இருக்கின்றனர். நமாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: (பா.கீ7.15). அவர்களால் வர இயலாது. வெறுமனே பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களால், இந்த கிருஷ்ணர் உணர்வை பாராட்ட முடியாது. அது சாத்தியமல்ல. ஆனால் இது அனைவருக்கும் வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பு. நாம் முகஸ்துதி செய்கிறோம், "தயவு செய்து இங்கு வாருங்கள். தயவு செய்து." இது கிருஷ்ணரின் சார்பில் நம்முடைய வேலை. கிருஷ்ணர் நேரிலே வந்து பகவத்-கீதையை கற்பித்து மேலும் அனைவரையும் கேட்டது போல், ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (பா.கீ.18.66), அதுவே நம் வேலை. ஆகையினால் கிருஷ்ணர் மிகவும் பாராட்டி, "ஓ இந்த மக்கள் என் சார்பில் செய்கிறார்கள். நான் அங்கு செல்ல வேண்டியதில்லை. அவர்கள் என் வேலையை ஏற்றுக் கொண்டார்கள்." நாம் என்ன வேலை ஏற்றுக் கொண்டோம்? நாம் வெறுமனே மக்களிடம், "தயவுசெய்து கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்." என்று கேட்டுக் கொள்கிறோம். ஆகையினால் நாம் கிருஷ்ணருக்கு பிரியமானவராகிறோம். கிருஷ்ணர் கூறுகிறார், ந ச தஸ்மான்மனுஷ்யேஷூ கஷ்சின்மே ப்ரியக்ருத்தம: (பா.கீ.18.69). நம் வேலை கிருஷ்ணரால் எவ்வாறு அங்கீகரிக்கப்படுவது என்பதாகும். கிருஷ்ணர் உணர்வில் ஒருவர் மதமாறியவரா இல்லையா என்பதைப் பற்றி நாம் சங்கடப்படுத்திக் கொள்ள மாட்டோம். எங்கள் கடமை முகஸ்துதி செய்வது, அவ்வளவுதான். "என் அன்புள்ளவரே, தயவுசெய்து இங்கு வாருங்கள், கிருஷ்ணரின் ஸ்ரீ மூர்த்தியை பாருங்கள், நமஸ்கார செய்யுங்கள், ப்ரசாத எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு வீட்டிற்குச் செல்லுங்கள்." ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால்? இப்பொழுது, இந்த வேலை பாவச் செயல்கள் நிறைந்த ஒருவரால் ஏற்றுக்கொள்ளபடக் கூடாது. ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், யேஷாம் துவந்த-கதம் பாபாம். தன்னுடைய பாவச் செயல்கள் அனைத்தையும் முடித்துவிட்ட ஒருவர். யேஷாம் துவந்த-கதம் பாபாம் ஜனானாம் புன்ய-கர்மணாம். யாரால் பாவச் செயல்களிலிருந்து விடுதலை பெற முடியும்? எப்பொழுதும் பக்தி செயல்களில் ஈடுபட்டிருக்கும் ஒருவரால் முடியும். நீங்கள் எப்பொழுதும் பக்தி செயல்களில் ஈடுபட்டிருக்கும் பொழுது, பாவச் செயல்கள் புரியும் வாய்ப்பு எவ்வாறு ஏற்படும்? ஆகையினால் மிகவும் பக்தி நிறைந்த செயல் மஹா மந்திரத்தை ஜெபித்தலாகும். நீங்கள் எப்பொழுதும் ஈடுபாடுடன், ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண, கிருஷ்ண என்று, உங்கள் மனம் எப்பொழுதும் கிருஷ்ணர் உணர்வில் ஈடுபட்டிருந்தால், பிறகு வேறு எந்த சிந்தனைக்கும் உங்கள் மனத்தில் இடம் இருக்காது. இதுதான் கிருஷ்ணர் உணர்வின் செயல்முறை. நாம் கிருஷ்ணரை மறந்தவுடனேயே, மாயா அங்கிருக்கிறது, உடனடியாக கைப்பற்றிக்கொள்ளும்.