TA/Prabhupada 0221 - அரைகுறையான அடித்தளத்தில் உங்ளுடைய உயர்ந்த கட்டிடத்தை உயர்த்திக் கொண்டே செல்லுதல்

Revision as of 17:27, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0221 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Janmastami Lord Sri Krsna's Appearance Day -- Bhagavad-gita 7.5 Lecture -- Vrndavana, August 11, 1974

கிருஷ்ணர், அர்ஜூனன் இவ்வாறு கேட்ட போது - "பகவத் கீதையின் இந்தத் தத்துவம் சூரிய தேவனுக்கு உங்களால் கற்பிக்கப்பட்டது என்று சொல்கிறீர்கள். அதை நான் எப்படி நம்புவது?" – அதற்குப் பதில் "விஷயம் என்னவென்றால், நாம் இருவருமே, அங்கு இருந்தோம், ஆனால் நீ மறந்துவிட்டாய். நான் மறக்கவில்லை" என்று வந்தது. அது தான் கிருஷ்ணருக்கும் மற்ற சாதாரண உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு… அவர் முழுமையானவர். நாம் முழுமை பெறவில்லை; நாம் கிருஷ்ணரின் முழுமை பெறாத, துகள்களே. ஆக நாம் கிருஷ்ணரால் கட்டுப்படுத்தப்படுவதாக இருக்க வேண்டும். கிருஷ்ணரால் கட்டுப்படுத்த படுவதில் நமக்கு உடன்பாடு இல்லை என்றால், பொருள் ஆற்றலால் கட்டுப்படுத்தப்படுவோம், இந்த bhūmir āpo 'nalo vāyuḥ (BG 7.4). உண்மையில், நாமும் ஆன்மீக சக்தி தான். நாம் தானாகவே கிருஷ்ணர் மூலம் கட்டுப்படுத்தப்படுவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். அது தான் பக்தி சேவை. அது தான் பக்தி சேவை. நாம் ஆன்மீக சக்தி, கிருஷ்ணரோ உயரிய ஆன்மா. எனவே நாம் கிருஷ்ணரால் கட்டுப்படுத்தப்பட ஒப்புக்கொண்டால், நாம் ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்படுவோம். நாம் ஏற்றுக் கொண்டோமானால். கிருஷ்ணர் உங்களிடமுள்ள சிறிதளவு சுதந்திரத்தில் தலையிட மாட்டார். Yathecchasi tatha kuru (BG 18.63). கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார், "நீங்கள் விரும்பியதைச் செய்யலாம்" என்று. அந்தச் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. எனவே அந்தச் சுதந்திரத்தில் நாம் இந்தப் பௌதிக உலகிற்கு வந்துள்ளோம், தாராளமாக அனுபவிப்பதற்காக. ஆக, கிருஷ்ணர் நமக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார், "நீங்கள் தாராளமாக அனுபவிக்கலாம்” என்று. நாமும் அதைச் செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் இதன் விளைவாக, நாம் சிக்கிக்கொண்டு விடுகிறோம். நமக்கு இந்தப் பௌதிக உலகில் செயல்படுவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. அனைவரும் இந்தப் பௌதிக உலகின் எஜமானாக முயற்சி செய்கின்றனர். யாரும் சேவகனாக முயற்சிப்பதில்லை. வைஷ்ணவர்களான நாம் மட்டுமே, சேவர்களாக முயற்சிக்கிறோம். கர்மிகளுக்கும் ஞானிகளுக்கும், சேவர்கள் ஆவதற்குப் பிடிப்பதில்லை. அவர்கள் நம்மை " வைஷ்ணவர்களான நீங்களோ, அடிமை மனப்பான்மை கொண்டவர்கள்" என்று விமர்சிக்கின்றனர். ஆம், நமக்கு அடிமை... சைதன்ய மஹாபிரபு கற்று கொடுத்துள்ளார், gopī-bhartuḥ pada-kamalayor dāsa-dāsānudāsaḥ (CC Madhya 13.80) என்று. அது தான் நம் நிலை. செயற்கையாக “நான் தான் எஜமான் என்று”? பறைசாற்றுவதில் என்ன பயன்? நான் எஜமானாக இருப்பின், ரசிகர்கள் தேவையா? நான் இந்தக் கோடைக்காலத் தாக்கத்திற்கு அடியவன். இதேபோல், அதிகமாகக் குளிர் அடிக்கும் குளிர்காலத்திலும் நான் அடியவன் தான். ஆக நாம் எப்போதும் அடியவர் தான். எனவே சைதன்ய மஹாபிரபு சொல்கிறார், “ jīvera svarūpa haya nitya-kṛṣṇa-dāsa (CC Madhya 20.108-109), என்று. உண்மையில், நமது அமைப்பின் நிலை என்றென்றும் கிருஷ்ணரின் அடியவராக இருப்பதே. கிருஷ்ணர் தான் உச்ச நிலை கட்டுப்பாட்டாளர். இந்தக் கிருஷ்ணர் பக்தி இயக்கம் இந்த நோக்கத்திற்கென உருவாக்கப்பட்தே. அதை இந்த முட்டாள்கள், இந்த அயோக்கியர்கள், mūḍhāḥ ... நான் இந்த “முட்டாள்கள் “, “அயோக்கியர்கள்” போன்ற வார்த்தைகளை உருவாக்கவில்லை. அதைக் கிருஷ்ணரே கூறியிருக்கிறார். Na māṁ duṣkṛtino mūḍhāḥ prapadyante narādhamāḥ (BG 7.15). அவர் அப்படிப் பேசியிருக்கிறார். உங்களுக்குத் தெரியவரும். Duṣkṛtinaḥ, எப்போதும் பாவகரமான செயல்களில் ஈடுபட்டு, மேலும் mūḍhāḥ, அயோக்கியர்கள், முட்டாள்கள். Narādhamāḥ, மனித குலத்தின் ஈனப்பிறவிகள். "அப்பொழுது, நீங்கள் ...? கிருஷ்ணா, இந்தச் சடவாத விஞ்ஞானிகளைப் பற்றி இவ்வளவு மோசமாகப் பேசுகிறீர்களே? இவர்களில் பலர் தத்துவ ஞானிகள். அவர்கள் எல்லாரும் கூட narādhamāḥ தானா?" "ஆமாம், அவர்களும் narādhamāḥ தான்." "ஆனால் அவர்கள் படித்தவர்கள்." "ஆமாம், அதுவும் ..." ஆனால் எம்மாதிரியான கல்வி அது? Māyayā apahṛta-jñānāḥ: "அவர்களுடைய கல்வியின் விளைவாக – மாயையினால் அவர்தம் அறிவே எடுத்துச் செல்லப்படுகிறது." ஒருவர் எந்த அளவு கற்கிறாரோ அந்த அளவு நாத்திகர் ஆகிவிடுகிறார். இக்காலத்தில்... நிச்சயமாக, கல்வி என்பது இது அல்ல ... கல்வி என்பது புரிந்து கொள்ளுதலைக் குறிக்கிறது. Jñānī. கற்பித்தல், படித்தவன் என்றால் புத்தியுள்ளவன், அறிஞன், jñānī. உண்மையான jñānī என்பவர் māṁ prapadyate. Bahūnāṁ janmanām ante jñānavān māṁ prapadyate (BG 7.19). அது தான் கல்வி. கல்வி என்பது நாத்திகன் ஆவதற்காக அல்ல, "கடவுளே இல்லை. நான் தான் கடவுள், நீ தான் கடவுள். அனைவரும் கடவுள்." இது கல்வி அல்ல. இது அஞ்ஞானம். மாயாவாதிகள், தாம் இறைவனோடு ஐக்கியம் ஆகிவிட்டதாக நினைக்கிறார்கள். அது கல்வி அல்ல.