TA/Prabhupada 0250 - கிருஷ்ணருக்காகச் செயல்புரியுங்கள், பகவானுக்காக செயல்புரியுங்கள், உங்கள் தனிப்பட்ட ஆ

Revision as of 06:55, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0250 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.6 -- London, August 6, 1973

எனவே சண்டையிடும் இந்தப் பிரச்சனை ... இந்தச் சண்டை உணர்வு நம் அனைவரிடமும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களால் அதைக் தடுக்க முடியாது, அதை நிறுத்த முடியாது. அதை நிறுத்துங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. மாயாவாதத் தத்துவவாதிகள் "இதை நிறுத்துங்கள்” என்று சொல்கிறார்கள். ஆனால் அது சாத்தியமில்லை. ஆனால் அது சாத்தியமில்லை. உங்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், நீங்கள் ஒரு உயிருள்ள ஜீவன். உங்களுக்கு இந்த அனைத்து மனப்பான்மைகளும் இருக்கும். நீங்கள் அதை எப்படி நிறுத்த முடியும்? ஆனால் அதை ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டும். அவ்வளவுதான். உங்களிடம் போராட்ட உணர்வு இருக்கிறது. அதை எப்படி உபயோகப் படுத்திக் கொள்ள முடியும்? ஆம். Narottama dāsa Ṭhākura, krodha bhakta-dveṣī-jane: "கடவுளிடமோ கடவுளின் பக்தரிடமோ பொறாமைப்படுபவர்களின் மேல் உங்கள் கோபத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று பரிந்துரைக்கிறார். நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களால் கோபத்தை விட்டுவிட முடியாது. நம் வேலை அதை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதே. அது தான் கிருஷ்ண பக்தி உணர்வு. எல்லாம் பயன்படுத்தப்பட வேண்டும். நாங்கள், "இதை நிறுத்திவிடுங்கள். அதை நிறுத்திவிடுங்கள்” என்று சொல்லவில்லை. இல்லை. நீங்கள் ... கிருஷ்ணர் கூறுகிறார், yat karoṣi, yaj juhosi, yad aśnāsi, yat tapasyasi kuruśva tad mad-arpanam (BG 9.27). Yat karoṣi. கிருஷ்ணர் "நீங்கள் இதைச் செய்யுங்கள். அதைச் செய்யுங்கள்" என்று சொல்லவில்லை. அவர் "நீங்கள் எதைச் செய்தாலும், அதன் பலன் என்னை வந்து சேர வேண்டும்" என்கிறார். எனவே இங்குள்ள நிலையோ அர்ஜூனன் தனக்காகப் போரிடப் போவதில்லை, ஆனால் அவர் தன்னை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர் te avasthitaḥ pramukhe dhārtarāṣṭrāḥ, yān eva hatvā na jijīviṣāmas: (BG 2.6) என்கிறார். "அவர்கள் என் சகோதரர்களும் உறவினர்களும் ஆவர். அவர்கள் இறந்துவிட்டால்... நாங்கள் அவர்கள் இறப்பதை விரும்பவில்லை. இப்போது அவர்கள் என் முன்னால் இருக்கின்றனர். நான் அவர்களை வதம் செய்ய வேண்டுமா?" எனவே அவர் இன்னும் தனது சொந்த திருப்தியின் அடிப்படையில் தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர் பின்னணியைத் தயார் செய்கிறார்- எப்படி பௌதிகவாதிகள், தம் தனிப்பட்ட திருப்தியின் கோணத்திலேயே சிந்திக்கிறார்கள் என்று. எனவே அதைக் கைவிட வேண்டும். தனிப்பட்ட மனநிறைவு அல்ல, கிருஷ்ணரின் மனநிறைவு. அது தான் கிருஷ்ண பக்தி உணர்வு. நீங்கள் என்ன செய்தாலும், அது ஒரு பொருட்டாகாது. நீங்கள் அவற்றைக் கிருஷ்ணருக்காகச் செய்கிறீர்களா என்று சோதிக்க வேண்டும். அது தான் உங்கள் பூர்ணத்துவம் ஆகும். பூர்ணத்துவம் மட்டுமில்லை, உங்கள் இந்த மனித வாழ்க்கைப் பணியின் பூர்ணத்துவம் ஆகும். இந்த மனித வாழ்க்கையின் நோக்கமே அது தான். மனித வாழ்விற்கும் குறைந்த நிலையில் இருக்கும், விலங்குகளின் வாழ்விலும், அவை உணர்வுகளின் நிறைவின் பூர்ணத்துவம், தனிப்பட்ட திருப்தி போன்றவற்றின் பயிற்சியைப் பெற்றுள்ளன. அவற்றிடம் "மற்ற விலங்குகளுக்கும் கூட ..." என்ற உணர்வு இருக்காது. ஏதேனும் ஒரு உணவுப் பண்டம் இருந்தால், ஒரு நாய் "நான் அதை எப்படிப் பெற முடியும்?" என்று யோசிக்கும். அது ஒருபோதும் மற்ற நாய்கள் அதை எப்படிப் பெற முடியும் என்று யோசிப்பதில்லை. அது விலங்கின் தன்மை இல்லை. விலங்குகளின் இயல்பு என்றாலே தங்கள் சொந்த திருப்தியைப் பற்றி மட்டும் தான் இருக்கும். "என் நண்பர், என் குடும்பத்தினர்கள்" என்ற கேள்விக்கே இடமில்லை. ஏன், அவை தம் சொந்தக் குட்டிகளோடு கூடப் பகிர்ந்து கொள்வதில்லை. நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு உணவுப் பண்டத்தைப் பெற, ஒரு நாயும் அதன் குட்டிகளுமே தத்தம் பக்கம் எடுத்துக் கொள்ள முயற்சி செய்யும். அது தான் விலங்கினம். தத்தம் பக்கம் எடுத்துக் கொள்ள முயற்சி செய்யும். அது தான் விலங்கினம். விலங்கின வாழ்க்கையோடு இருக்கும் வேறுபாடு அது தான். அதனால் அது மிகவும் கடினமானது கூட. எனவே பகவத் கீதையில் முழுப் பயிற்சியும் இருக்கிறது, எப்படி மக்களுக்கு எப்படிக் கற்பிப்பது என்று, , "கிருஷ்ணருக்காகச் செயல்புரியுங்கள், இறைவனுக்காகச் செயல்புரியுங்கள், உங்கள் தனிப்பட்ட ஆர்வத்திற்காக அல்ல. பின்னர் நீங்கள் சிக்கிக்கொண்டு விடுவீர்கள்”. Yajñārthāt karmaṇaḥ anyatra loko 'yaṁ karma-bandhanaḥ (BG 3.9). நீங்கள் எதைச் செய்தாலும், அது ஒரு எதிர்வினையைத் தோற்றுவிக்கும். பின்னர் நீங்கள் அந்த எதிர்வினையை இன்புற்றோ, துன்புற்றோ, அனுபவித்தே தீர வேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும். ஆனால் எந்த ஒன்றையும். நீங்கள் கிருஷ்ணருக்காகச் செய்தால், எந்த எதிர்வினையும் நேராது. அது தான் உங்கள் சுதந்திரம். Yogaḥ karmasu kauśalam (BG 2.50). என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் கிருஷ்ணரின் சேர்க்கையில் இருந்தால், அது தான் வெற்றியின் ரகசியம். இந்தப் பௌதிக உலகின், வேலை … இல்லையெனில், நீங்கள் என்ன செய்தாலும், எந்த வேலையைப் புரிந்தாலும், அது ஏதாவது ஒரு எதிர்வினையைத் தோற்றுவிக்கும். பின்னர் நீங்கள் அதை இன்புற்றோ, துன்புற்றோ, அனுபவித்தே தீர வேண்டும். எனவே இங்கே மீண்டும், அதே விஷயம். அர்ஜுனன் na caitad vidmaḥ kataran no garīyo (BG 2.6), என்ற ரீதியில் எண்ணுகிறார். ஆக அவர், குழம்புகிறார் "எது, எந்தப் பக்கம் புகழ்பெறும்? நான் சண்டையிடுவதை நிறுத்துவேனா, சண்டையிடாமலேயே இருந்துவிடுவேனா?" அடுத்த பகுதியில் அது தெரியவரும் .... நீங்கள் “என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது” என்ற இது போன்ற குழப்பத்தில் இருக்கும்போது, சரியான திசையில் செல்ல, நீங்கள் ஆன்மீக குருவை அணுக வேண்டும். அது அடுத்த பகுதியில் செய்யப்படும். அர்ஜுன ன் சொல்வான், “ எனக்குத் தெரியவில்லை. நான் இப்போது குழம்பிப்போய் இருக்கிறேன். ஒரு சத்திரியனாக என்னுடைய கடமை போரிடுவது என்று தெரிந்திருந்தாலும், நான் தயங்குகிறேன். எனது கடமையில் நான் தயங்குகிறேன். ஆகவே நான் குழம்பிப்போய் இருக்கிறேன். எனவே கிருஷ்ணா, நான் உன்னிடம் அடிபணிகிறேன்" என்று. முன்னர் அவர் தான் நண்பர்போலப் பேசி கொண்டிருந்தார். இப்போது அவர் கிருஷ்ணரிடமிருந்து பாடம் படிக்கத் தயாராகிவிடுவார்.