TA/Prabhupada 0165 - பக்தி என்பது தூய்மைப்படுத்தப்பட்ட செயல்களே

Revision as of 09:18, 4 July 2016 by SenthilKumar (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0165 - in all Languages Category:TA-Quotes - 1966 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG Introduction — New York, February 19-20, 1966

மிக உயர்ந்த உணர்வு என்ன என்பது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது. ஜீவனுக்கும் கடவுளாலும் உள்ள வேறுபாடு என்ன என்று சொல்லும் பதத்தில் .. Kṣetra-kṣetra-jña. அதாவது, kṣetra-jña என்பது கடவுளுக்கும் உணர்வுள்ளது என விளக்குகிறது. மேலும் வாழும் ஜீவன்களுக்கும் உணர்வுள்ளது. ஆனால் இந்த இரண்டிற்குள்ளும் உள்ள வேறுபாடு என்னவென்றால், ஜீவனில் உணர்வு தன்னுடைய உடலுடன் நின்றுவிடுகிறது. ஆனால் பகவானின் உணர்வு, அனைத்து ஜீவன்களிடத்தும் பரவி உள்ளது. Īśvaraḥ sarva-bhūtānāṁ hṛd-deśe 'rjuna tiṣṭhati (BG 18.61). பகவான் அனைத்து ஜீவன்களின் இதயத்தினுள்ளும் வசிக்கிறார். எனவே நாம் மனதில் நினைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் அறிவார். இதை நாம் மறக்க கூடாது. மேலும் பரமாத்மா, அதாவது முழுமுதற்கடவுளானவர் ஒவ்வொருவரின் இதயத்தினுள்ளும் குடியிருந்து , நம்மை கட்டுப்படுத்தி வழிநடத்துகிறார். அவரே நம்மை வழிநடத்துகிறார். Sarvasya cāhaṁ hṛdi sanniviṣṭhaḥ (BG 15.15). அவர் ஒவ்வொருவரின் இதயத்தினுள்ளும் இருந்து, அவரவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு வழிநடத்துகிறார். ஜீவன்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

ஜீவன்கள் முதலில் தனக்கு தோன்றியவாறு வாழ முயற்சி செய்கின்றனர். பிறகு தன்னுடைய கர்மவினையில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். ஆனால் ஒரு உடலை விட்டு வேறு உடலுக்கு நாம் செல்லும் போது... அதாவது கிட்டத்தட்ட ஒரு ஆடையை கழட்டி மற்றொரு ஆடையை அணிவதைப்போல்.. vāsāṁsi jīrṇāni yathā vihāya (BG 2.22)...என்று பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது ... ஒருவர் ஆடைகளை மாற்றுவதைப்போல் நாம் உடலையும் மாற்ற வேண்டும். இவ்வாறு ஓருடலிலிருந்து மற்றொரு உடலுக்கு மாறும் ஆத்மாவானது, முற்பிறவியின் கர்மத்தால் உண்டான பாவ புண்ணியங்களையும் கொண்டு செல்கிறது. ஆனால் இந்த கர்ம வினைகளை தடுக்க ஒருவர் நன்மை தரக்கூடிய எண்ணத்துடன்.. நல்லறிவுடன்..விதிக்கப்பட்ட செயல்களை அறிந்து செயல்பட்டால்... நம்முடைய கர்ம வினைகளால் உண்டான பாவ புண்ணியங்கள் நம்மை தொடர்வதில்லை... எனவே கர்மா என்பது நித்தியமானதல்ல.... īśvara, jīva, prakṛti, kāla, and karma -இந்த ஐந்தில் கர்மாவைத் தவிர மற்ற நான்கும் .. மற்ற நான்கும் நித்தியமானவை. ஆனால் கர்மா நித்தியமானதல்ல..

இப்போது நாம் கடவுளின் உணர்வை எடுத்துக்கொண்டால்... கடவுளின் உணர்வுக்கும் ஜீவாத்மாவின் உணர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் இவ்வாறு கூறலாம். கடவுளின் உணர்வும் ஜீவாத்மாவின் உணர்வும் .. அடிப்படையில் இந்த உணர்வுகள் உன்னதமானது... இந்த உணர்வு பௌதீக தொடர்பால் ஏற்படுவதல்ல.. இது தவறான கூற்றாகும்... பௌதீக உலகின் தொடர்பால் தான் நமக்கு உன்னத உணர்வு கிடைக்கிறது என்னும் கூற்றானது... பகவத் கீதையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை..எனவே அவ்வாறிருக்க முடியாது.. பௌதீக சக்தியின் ஆதிக்கத்தால், நம்முடைய உண்மையான உணர்வானது மூடப்பட்டு தவறாக பிரதிபலிக்கப்படுகிறது.. இதை வண்ணக் கண்ணாடியால் மூடப்பட்ட ஒளியானது அந்த வண்ணத்திற்கேற்றாற்போல் பிரதிபலிக்கும் செயலுக்கு ஒப்பிடலாம்... அதே போல் கடவுளுடைய உன்னத உணர்வும், பௌதீகத் தொடர்பால் அசுத்தம் அடைவதில்லை... முழுமுதற்கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் ..mayādhyakṣeṇa prakṛtiḥ (BG 9.10). அவர் இந்த பௌதீக உலகில் அவதரிக்கும் போது, பௌதீக தொடர்பால் அவருடைய உணர்வானது பாதிக்கப்படுவதில்லை.... பௌதீகத் தொடர்பால் அவர் பாதிக்கப்பட்டிருந்தால்.... அவர் பகவத் கீதையில் உள்ள உன்னத ஆனந்தத்தைப் பற்றி பேசும் தகுதி அற்றவராக இருந்திருப்பார்.... ஒருவர் உன்னத ஆன்மீக ஆனந்தத்தைப் பற்றி பேசுவதற்கு, பௌதீகத் தொடர்பால் பாதிக்கப்படாதவராக இருக்க வேண்டும்... எனவே கடவுள் பௌதீகத் தொடர்பால் பாதிக்கப்படாதவர்.....

ஆனால் நம்முடைய உணர்வானது தற்போது பௌதீகத் தொடர்பால், அசுத்தம் அடைந்துள்ளது... பௌதீக சம்பந்தத்தால் மாசடைந்த நம்முடைய உணர்வை தூய்மைப்படுத்த வேண்டும்... இவ்வாறு தூய்மையான உணர்வுடன் நாம் செயலாற்ற வேண்டும்... இதுவே மகிழ்ச்சியைத் தரும். நாம் நம்முடைய செயல்களை நிறுத்தக்கூடாது... நாம் செய்யும் செயல்கள் தூய்மைப்படுத்தப்படவேண்டும்...இந்த தூய்மைப்படுத்தப்பட்ட செயல்களே பக்தி என்று அழைக்கப்படுகிறது... பக்தி என்பது..சாதாரண செயல்களை போல் தோன்றினாலும் அது மாசற்ற உன்னத உணர்வில் செய்யப்படுகிறது... அவை தூய்மைப்படுத்தப்பட்ட செயல்களே... ஒரு அறிவில்லாத மனிதன், ஒரு பக்தர் செய்யும் செயலை சாதாரண மனிதனின் செயலைப் போன்றே பார்க்கிறான்... குறைவான அறிவுடைய மனிதன் புரிந்து கொள்ளாதது என்னவென்றால்... பக்தனின் செயலோ அல்லது பகவானின் செயலோ... அந்த செயல்கள் பௌதீகத் தொடர்பால் மாசடைவதில்லை... பௌதீக இயற்கையில் உள்ள மூன்று குணகளாலோ பாதிக்கப்படுவதில்லை...ஆனால் தூய்மையான உன்னத உணர்வில் செய்யப்படுகிறது... எனவே நமது உணர்வு பௌதீகத் தொடர்பால் மாசடைந்துள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்...