TA/Prabhupada 0165 - பக்தி என்பது தூய்மைப்படுத்தப்பட்ட செயல்களே



Lecture on BG Introduction — New York, February 19-20, 1966

பரம உணர்வு என்னவென்பது பகவத்-கீதையில், ஜீவ மற்றும் ஈஷ்வர, இந்த இருவருக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை விரித்துறைக்கும் அத்தியாயத்தில் விளக்கப்பட்டும். க்ஷேத்ர-க்ஷேத்ர-க்ஞ. இந்த க்ஷேத்ர-க்ஞ என்பது விளக்கப்பட்டிருக்கிறது, அதாவது பகவானும் க்ஷேத்ர-க்ஞ, அதாவது உணர்வுள்ளவர், மேலும் ஜீவ, அதாவது உயிர்வாழிகளும் உணர்வுள்ளவர்கள் தான். ஆனால் வித்தியாசம் என்னவென்றால், ஒரு உயிர்வாழியின் உணர்வு அவனது உடலால் கட்டுப்பட்டது, ஆனால் பகவான், அனைத்தையும் உணருகிறார். ஈஷ்வரஹ ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே (அ)'ர்ஜுன திஷ்டதி (பகவத் கீதை 18.61). பகவான், ஒவ்வொரு உயிர்வாழியின் உள்ளத்திலும் வசிக்கிறார். ஆகவே ஒரு ஜீவவின், அதாவது உயிர்வாழியின் மன அசைவுகளையும், செயல்களையும் அவர் தெளிவாக உணருகிறார். அதை நாம் மறக்கக் கூடாது. மேலும் விளக்கப்பட்டிருப்பது என்னவென்றால், பரமாத்மா, அதாவது முழுமுதற் கடவுள், ஒவ்வொருவரின் இதயத்திலும் அவர், ஈஷ்வரராக, அதாவது ஒரு ஆள்பவராக வசிக்கிறார், மற்றும் நமக்கு வழிகாட்டுகிறார். அவர் நமக்கு வழிகாட்டுகிறார். ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டஹ (பகவத் கீதை 15.15). அவர் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருந்து, அவரவர்களின் விருப்பப்படி செயல்பட வழிகாட்டுகிறார். உயிர்வாழி தாம் என்ன செய்யவேண்டும் என்பதை மறந்து விடுகிறான். முதலில் அவன் தனக்கு தோன்றியபடி செயல்புரிய தீர்மானம் செய்கிறான், பிறகு தன்னுடைய கர்ம, அதாவது செயல்கள், மற்றும் அதன் விளைவுகளின் சுழற்சியில் சிக்குகிறான். ஆனால் ஒரு உடலை கைவிட்டு, வேறு உடலில் அவன் நுழையும் போது... ஒரு விதமான ஆடையை கழட்டி மற்றொரு விதமான ஆடையை அணிவதைப்போல் தான். இது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது, வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய (பகவத் கீதை 2.22). ஒருவர் ஆடைகளை மாற்றுவதைப்போல், உயிர்வாழிகளும் வெவ்வேறு உடல்களில் மாறி மாறி இடம் பெறுகிறார்கள், ஆன்மாவின் இடம்பெயர்தல், மேலும் முற்பிறவியில் செய்த செயல்களின் விளைவுகளையும் செயல்புரியும் மனப்பான்மையையும் சுமைந்து வருகிறார்கள். ஆனால் ஒரு உயிர்வாழி நற்குணத்தை ஏற்று, தெளிவான அறிவுடன், எப்படிப்பட்ட செயல்களை அவன் ஏற்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு, மேலும் அப்படியே செயல்பட்டால், பிறகு அவனது கடந்தகால செயல்களின் அனைத்து கர்மபலன்களும் மாற்றப்படலாம். ஆக கர்மம் என்பது நித்தியமானதல்ல. ஈஷ்வர, ஜீவ, பிரக்ருதி, கால மற்றும் கர்ம - இந்த ஐந்தில் கர்மம் என்பதைத் தவிர மற்ற நான்கும், நித்தியமானவை. ஆனால் கர்மம் என்பது நித்தியமானதல்ல. இப்போது பரம உணர்வுள்ள ஈஷ்வரர், அதாவது பகவான், மற்றும் உயிர்வாழிக்கும் இடயே உள்ள வித்தியாசத்தை, தற்போதய நிலையில், பின்வருமாறு விளக்கலாம். கடவுளின் உணர்வும், உயிர்வாழியின் உணர்வும், இரண்டுமே திவ்யமானது தான். நம் உணர்வு, ஜட இயற்க்கையால் ஏற்பட்டதல்ல. அது தவறான கருத்து. ஜட இயற்க்கையின் குறிப்பிட்ட சில இரசாயன கலவையால் நம் உணர்வு வளர்கிறது என்ற கருத்து பகவத்-கீதையில் அங்கீகரிக்கபடவில்லை. அது சாத்தியமில்லை. நம்முடைய உணர்வு, பௌதீக சூழ்நிலைகளால் தாழ்வாடைந்த ஒன்றின் பிரதிபலிப்பு, உதாரணத்திற்கு, வண்ணக் கண்ணாடியின்மேல் விழும் ஒளியின் பிரதிபலிப்பு அந்த கண்ணாடியின் வண்ணத்திற்கு ஏற்றபடி தான் தென்படும். அதுபோலவே, கடவுளுடைய உணர்வும், பௌதீகத்தால் பாதிக்கப்படுவதில்லை. முழுமுதற்கடவுள், ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், மயாத்யக்ஷேண ப்ரக்ருதிஹி (பகவத் கீதை 9.10). அவர் இந்த பௌதீக உலகில் அவதரிக்கும் போது, பௌதீகத்தால் அவருடைய உணர்வு பாதிக்கப்படுவதில்லை. அப்படி அவருடைய உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால், பகவத்-கீதையிலுள்ள திவ்யமான விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு அவர் தகுதியற்றவராக இருந்திருப்பார். பௌதீகத்தால் களங்கம் அடைந்த உணர்விலிருந்து விடுபட்டு இல்லாமல் ஒருவரால் தைவீக உலகைப் பற்றி எதையும் பேச முடியாது. ஆகவே கடவுள் ஒருபோதும் பௌதீகத்தால் களங்கப்படவில்லை. ஆனால் தற்போதைய நம் உணர்வு, பௌதீகத்தால் களங்கப்பட்டது. ஆகமொத்தத்தில், பகவத்-கீதை கற்பிக்கும்படி, பௌதீகத்தால் களங்கப்பட்ட நமது உணர்வினை நாம் சுத்தப்படுத்த வேண்டும் மேலும் அந்த தூய்மையான உணர்வுடன் நாம் செயல்பட வேண்டும். அதுதான் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். நம்மால் நம்முடைய செயல்களை நிறுத்த முடியாது. நாம் செய்யும் செயல்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். மேலும் இந்த தூய்மைப்படுத்தப்பட்ட செயல்களே பக்தி என்று அழைக்கப்படுகின்றன. பக்தி என்றால், வெளித்தோற்றத்தில் அவை சாதாரண செயல்களைப் போல் இருந்தாலும், அவை எந்த களங்கமும் இல்லாத தூய்மையான செயல்கள். அவை தூய்மைப்படுத்தப்பட்ட செயல்கள். ஆக அறியாமையில் இருப்பவன், ஒரு பக்தனை ஒரு சராசரி மனிதனைப் போல் உழைப்பதாகவே எண்ணலாம், ஆனால் குறுகிய அறிவுள்ளவனுக்கு, ஒரு பக்தனது செயல்களோ, பகவானின் செயல்களோ, ஜட இயற்க்கையால் கலங்கமடைந்த உணர்வால், அதாவது முக்குணங்களால் பாதிக்கப்படாதவை, மற்றும் பரிசுத்தமான நிலையுள்ள உணர்வில் செய்யப்பட்டவை என்பது தெரியாது. ஆக நமது உணர்வு, பௌதீகத்தால் களங்கப்பட்டது என்பதை நாம் அறிய வேண்டும்.