TA/Prabhupada 0169 - கிருஷ்ணரை பார்ப்பதில் எங்கு சிரமம் உள்ளது
Lecture on BG 4.24 -- August 4, 1976, New Mayapur (French farm)
யோகேஷ்வரா: இவர் இப்பொழுது சொல்கிறார், நாம் இன்னும் கிருஷ்ணனை பார்க்கும் அளவு முன்னேறவில்லை, அதனால் அவரை எவ்வாறு தியானிக்க வேண்டும்?
பிரபுபாதா: கிருஷ்ணன் கோவிலில் இருப்பதை பார்க்கவில்லையா?(சிரிப்பு) நாம் தெளிவற்ற ஏதோ ஒன்றை வழிபடுகிறோமா? கிருஷ்ணனை கிருஷ்ணர் சொல்வதை போலவே காணவேண்டும். இந்த நிலையில்....கிருஷ்ணர் சொல்வதை ப்போல் 'குந்திபுத்திரனே,நான் பொருளாக-ரஸமாக இருக்கிறேன்(BG 7.8). கிருஷ்ணர் சொல்கிறார் " தண்ணீரில் நான் சுவையாக இருக்கிறேன். கிருஷ்ணனை நீ தண்ணீரின் சுவையாகப்பார். அது உன்னை மேம்படுத்தும். பலநிலைகளுக்கேற்ப.... கிருஷ்ணர் கூறுகிறார் "தண்ணீரின் சுவை நானே" ஆக, நீ தண்ணீர் அருந்தும்போது கிருஷ்ணரை ஏன் பார்க்க முடியாது. " ஓ, இந்த சுவை தான் கிருஷ்ணா என்று." குந்தி மைந்தனே, நானே பொருளாக இருக்கிறேன். சூர்ய-சந்திரனின் ஒளியாக இருக்கிறேன். சூர்ய-சந்திரனை பார்க்கும்போது அவற்றின் ஒளியாக இருப்பது நானே. ஆகவே, சூரிய ஒளியை காலையில் பார்க்கும் போது, நீ கிருஷ்ணனையே பார்க்கிறாய். இரவில் சந்திர ஒளியை பார்த்த உடனே நீ கிருஷ்ணனையே காண்கிறாய்.
ப்ரணவத்திலும் அனைத்து வேத மந்திரத்திலும்.எந்த வேத மந்திரம் ஓதப்பட்டாலும், ஓம் தத் விஷ்ணு பரஹ், அந்த ஓங்காரமே கிருஷ்ணர். "திறமையே விஷ்ணு " மற்றும் ஏதாவது அசாதாரண செயல்கள் யாராவது செய்து முடித்தால் , அதுவே கிருஷ்ணர். ஆகையால் நீங்கள் இந்த வழிகளில் கிருஷ்ணரை காணலாம். பிறகு , படிப்படியாக கிருஷ்ணர் தன்னை வெளிப்படுத்துவார் , நீங்கள் காண்பீர்கள். ஆனால் , நீரின் சுவையைப் போல் அவரை உணர்வதும் மற்றும் தனிப்பட்ட முறையில் அவரைக் காண்பதற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. ஆகையால் , நீங்கள் தற்போது உள்ள நிலையில் கிருஷ்ணரை, இவ்வாறாக காணலாம் அதன்பின் நீங்கள் படிப்படியாக அவரை காணலாம் நீங்கள் உடனடியாக கிருஷ்ண ரஸ லீலை காண வேண்டும் என்றால், அது இயலாத ஒன்று . நீங்கள் காணவேண்டும் , எங்கு வெப்பம் உள்ளதோ, அங்கு நெருப்பு உள்ளதை நீங்கள் அறிய வேண்டும் எங்கு புகை உள்ளதோ, அங்கு நெருப்பு உள்ளதை நீங்கள் அறிய வேண்டும் நெருப்பை நீங்கள் நேரடியாக காணாவிட்டாலும் ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டும், எங்கு புகை உள்ளதோ அங்கு நிச்சயம் நெருப்பு இருக்கும். ஆகையால் , இந்த வழியில், ஆரம்பத்தில் , கிருஷ்ணரை உணருங்கள். இது ஏழாம் அத்தியாயத்தில் உள்ளது. கண்டுபிடித்து படி:
- raso 'ham apsu kaunteya
- prabhāsmi śaśi-sūryayoḥ
- praṇavaḥ sarva-vedeṣu
- (śabdaḥ khe pauruṣaṁ nṛṣu)
- (BG 7.8).
ஜெயதிர்தா : 7.8 : ஓ குந்தி மகனே , அர்ஜுனா , நானே நீரின் சுவை, நானே சூரிய மற்றும் சந்திர ஒளிகள். ஓம் என்னும் சொல்லில் இருக்கும் ஒலியும் நானே. மனிதனின் திறனும் நானே.
பிரபுபாதா: எனவே, இந்த வழிகளில் நாம் கிருஷ்ணனை காண்கிறோம். இதில் என்ன சிரமம் இருக்கிறது? யார் இந்த கேள்வியை கேட்டது? கிருஷ்ணனை பார்ப்பதில் என்ன சிரமம் இருக்கின்றது? சிரமம் ஏதேனும் இருக்கிறதா? கிருஷ்ணனை பார். மன் மன பவ மத் பக்தோ, கிருஷ்ணர் சொல்கிறார், ' எப்பொழுதும் என்னை பற்றி நினை' அதனால் , தண்ணீரை குடித்துக்கொண்டிருக்கும் போதே, அதை ருசித்துவிட்டு ' ஆஹா இதில் கிருஷ்ணன் இருக்கின்றான், மன் மனோ பவ மத் பக்தோ' என்று கூறு. எங்கே சிரமம் உள்ளது? எங்கும் சிரமம் இல்லை. எல்லாமே இருக்கிறது. என்ன சிரமம்?
அபினந்தா: கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை நாம் நினைவு கொள்ள முயற்சிக்க வேண்டுமா?
பிரபுபாதா: அவரை பற்றி என்ன நினைத்தாய்? (எல்லோரும் சிரிக்கிறார்கள்) (bengali) ஒருவன் விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சிற்றப்பன் என்று சொன்னானாம். (சிரிக்கிறார்) நீங்கள் கேட்பதும் அவ்வாறு தான் உள்ளது.(சிரிக்கிறார்)
அபினந்தா : ஸ்ரீல பிரபுபாதா அவர்களே, ஏனெனில் சென்ற வருடம் மாயாபுரியில் நீங்கள் பேசும்போது கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை மறக்காதீர்கள் என்று பல முறை கூறினீர்கள்.
பிரபுபாதா: ஆம் ஏன் மறக்கிறீர்கள்?( பக்தர்களின் சிரிப்பொலி) என்ன இது ?
பக்தர்: ஒரு பக்தர் பக்தி பாதையை விட்டு தவறினால் ..
பக்தர்: அவர் பாகவதம் விவரித்துள்ள நரகத்திற்கு செல்லவேண்டுமா?
பிரபுபாதா : ஒரு பக்தர் எப்பொழுதுமே வழி தவறுவதில்லை.
பக்தர்கள் : ஜெய ஜெய ஸ்ரீ ல பிரபுபாதா!!