TA/Prabhupada 0169 - கிருஷ்ணரை பார்ப்பதில் எங்கு சிரமம் உள்ளது
Lecture on BG 4.24 -- August 4, 1976, New Mayapur (French farm)
யோகேஷ்வரன்: அவன் சொல்கிறான், நாம் இன்னும் கிருஷ்ணரை பரம புருஷராக நேரடியாக பார்க்க முடியுமளவுக்கு பக்குவம் அடையாததால், அவரை நாம் எப்படி தியானம் செய்வது? பிரபுபாதர்: உங்களுக்கு கோயிலில் இருக்கிறாரே இந்த கிருஷ்ணர் தெரியவில்லையா? (சிரிப்பு) நாம் உருவமில்லாத ஒன்றை வழிபடுகிறோமா என்ன ? கிருஷ்ணரை கிருஷ்ணர் கூறியது போலவே காணவேண்டும். இந்த நிலையில்... கிருஷ்ணர் சொல்வதைப் போல், ரஸோ (அ)'ஹம் அப்ஸு கௌந்தேய (பகவத் கீதை 7.8). கிருஷ்ணர் கூறுகிறார், "நீரின் சுவையும் நானே." கிருஷ்ணரை நீரின் சுவையில் பார். அது உன்னை பக்குவப்படுத்தும். வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்றபடி... கிருஷ்ணர் கூறுகிறார் "நீரின் சுவையும் நானே." ஆக, நீ தண்ணீர் அருந்தும்போது கிருஷ்ணரை பார்க்க வேண்டியது தானே. " ஓ, இதிலுள்ள சுவை அந்த கிருஷ்ணரே தான்." ரஸோ (அ)'ஹம் அப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷி-சூர்யயோஹோ. சூர்ய-சந்திரனை பார்க்கும்போதும் அப்படித் தான். கிருஷ்ணர் கூறுகிறார், "சூரிய ஒளியும் நானே, நிலவின் ஒளியும் நானே." ஆக, சூரிய ஒளியை காலையில் பார்க்கும் போது, நீ கிருஷ்ணரை பார்க்கிறாய். இரவில் சந்திர ஒளியை பார்த்த உடனே நீ கிருஷ்ணரையே தான் பார்க்கிறாய். ப்ரணவஹ சர்வ-வேதேஷு. எந்த வேத மந்திரத்தை உச்சரிக்கும் முன்பு: ஓம் தத் விஷ்ணு பர, இந்த ஓம்காரம் என்பது கிருஷ்ணரே. "பௌருஷம் விஷ்ணு". மற்றும் ஒருவர் ஏதாவது அசாதாரணமான செயலை செய்தால் அதுவும் கிருஷ்ணரே. ஆக நீங்கள் கிருஷ்ணரை இப்படி பார்க்கவேண்டும். பிறகு , படிப்படியாக, நீங்கள் காண்பீர்கள்; கிருஷ்ணர் தன்னை வெளிப்படுத்துவார், அப்போது நீங்கள் பார்பீர்கள். ஆனால் , நீரின் சுவையில் அவரை உணர்வதிலும், கிருஷ்ணரை நேரடியாக காண்பதிலும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. ஆக, நீங்கள் தற்போது உள்ள நிலைக்கு தகுந்தபடி கிருஷ்ணரை பார்க்கலாம். பிறகு நீங்கள் சமயம் வரும்போது அவரை காணலாம் நீங்கள் உடனடியாக கிருஷ்ணரின் ராஸ லீலையை காண விரும்பினால், அது சாத்தியமில்லை. நீங்கள் பார்க்கவேண்டும்... எங்கு வெப்பம் உள்ளதோ, அங்கு நெருப்பு இருப்பதை நீங்கள் அறிய வேண்டும். எங்கு புகை உள்ளதோ, அங்கு நெருப்பு இருப்பதை நீங்கள் அறிய வேண்டும். நெருப்பை நீங்கள் நேரடியாக காணாவிட்டாலும், புகை அங்கு இருப்பதால் நெருப்பும் அங்கு இருக்கவேண்டும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆக, இப்படி, ஆரம்பத்தில் , கிருஷ்ணரை உணருங்கள். இது ஏழாம் அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கிறது. தேடிப்பார். ரஸோ (அ)'ஹம் அப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷி-சூர்யயோஹோ ப்ரணவஹ ஸர்வ-வேதேஷு (பகவத் கீதை 7.8). ஜெயதீர்தன் : பதம் 7.8 : குந்தியின் மைந்தனே, அர்ஜுனா , நீரின் சுவையும் நானே, சூரிய சந்திரனின் ஒளியும் நானே, வேத மந்திரங்களிலுள்ள ஓம் என்ற சொல்லும் நானே; மனிதனுக்குள்ள திறனும் நானே. பிரபுபாதர்: ஆக இப்படி கிருஷ்ணரை பாருங்கள். இதில் என்ன கஷ்டம்? யார் இந்த கேள்வியை கேட்டது? கிருஷ்ணரை பார்ப்பதில் என்ன சிரமம் இருக்கின்றது? சிரமம் ஏதேனும் இருக்கிறதா? கிருஷ்ணரை பார். மன் மனா பவ மத்-பக்தோ, கிருஷ்ணர் சொல்கிறார்: ' எப்பொழுதும் என்னையே நினைப்பாயாக'. ஆக தண்ணீரை குடித்தவுடன், அதை சுவைத்து, 'ஆஹா, இதோ இருக்கிறார் கிருஷ்ணர்' என நினைத்துப்பார்; மன் மனா பவ மத்-பக்தோ. இதில் என்ன கஷ்டம்? எந்த கஷ்டமும் இல்லை. எல்லாமே இதில் இருக்கிறது. என்ன சிரமம்? அபினந்தனன்: கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்திருக்க முயற்சிக்க வேண்டுமா? பிரபுபாதர்: அவர் யார் என்று நீ நினைக்கிறாய்? (எல்லோரும் சிரிக்கிறார்கள்) (வங்காள பழமொழி) ஒருவன் விடிய விடிய ராமாயணத்தை படித்த பிறகு அவன் கேட்டானாம்: 'ஸீதா தேவி யாருக்கு தந்தை?' (சிரிப்பு) நீங்கள் கேட்பதும் அப்படித் தான் இருக்கிறது.(சிரிப்பு) அபினந்தனன்: ஸ்ரீல பிரபுபாதரே, சென்ற வருடம் மாயாபுரியில் நீங்கள் பேசும்போது கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை மறக்காதீர்கள் என்று பல முறை கூறினீர்கள். பிரபுபாதர்: ஆம், அப்போது ஏன் மறக்கிறீர்கள்?( பக்தர்கள் சிரிக்கிறார்கள்) என்ன இது ? பக்தர்: ஒரு பக்தர், பக்தி பாதையிலிருந்து தாழ்வாடைந்தால், (சரணாம்புஜன் ஜயந்தக்ருத்திடம்: நீ இதையெல்லாம் மொழிபெயர்த்தவேண்டும்.) பக்தர்: அவர் பாகவதம் விவரித்துள்ள நரகங்களுக்கு செல்ல நேருமா? பிரபுபாதர் : ஒரு பக்தர் ஒருபோதும் தாழ்வாடைவதில்லை. (மேலும் சிரிப்பு) பத்தர்கள் : ஜெய! ஜெய ஸ்ரீல பிரபுபாத !