TA/Prabhupada 0170 - நாம் கோஸ்வாமிகளின் உபதேசங்களை பின்பற்ற வேண்டும்.

Revision as of 10:23, 4 July 2016 by SenthilKumar (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0170 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.7.8 -- Vrndavana, September 7, 1976

சம்ஹிதா என்பது வேத இலக்கியம் சிலர் கூறுகிறார்கள் பகவத்கீதையை எழுதியது வியாசதேவர் இல்லை, போபா தேவா என்று மாயாவாதிகளும் நிரிஸ்வரவாதிகளும் இவ்வாறு தான் கூறுகிறார்கள். மாயவாதிகளின் தலைவரான சங்கராச்சாரியார் பகவத் கீதைக்கு உரை எழுதி இருந்தாலும், அவர் ஸ்ரீமத் பாகவதத்தைப் பற்றி எழுதவில்லை.. ஸ்ரீமத் பாகவதம் மிகவும் ரகசியமான விஷயங்கள் கொண்டது.. மாயாவாதிகளால் கடவுள் உருவமுள்ள ஒரு நபராக நிரூபிக்க முடியாது. இந்தக்காலத்தில் மாயாவாதிகள் சிலர் பாகவதம் படித்துவிட்டு முட்டாள் தனமாக அவர்களாகவே சில அர்த்தம் கற்பிக்கின்றனர். ஒரு சமயம் ஒரு பெரிய மாயாவாதிகளின் தலைவர் ஒருவர் பாகவதத்தின் ஒரு பதத்தை மேற்கோள் காட்டி இவ்வாறு கூறினார்... " நீங்களே கடவுள் என்பதால், நீங்கள் திருப்தி அடைந்தால் கடவுளும் திருப்தி அடைவார்". இதுவே அவர்களின் தத்துவம். "கடவுளை தனியாகமகிழ்விக்க தேவையில்லை" "நீங்கள் மது அருந்துவதால் மகிழ்ந்தால், கடவுளும் மகிழ்வார்." இவ்வாறு தான் அவர்கள் விளக்குகிறார்கள்.

எனவே தான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவர்கள், மாயவாதிகளின் தத்துவங்களை கண்டிக்கிறார். சைதன்ய மகாபிரபு கூறுகிறார்,māyāvādi-bhāṣya śunile haya sarva-nāśa (CC Madhya 6.169)மாயாவாதிகள் பகவானுக்கு அபச்சாரம் செய்கிறார்கள் என்பதை உறுதியாக கூறினார். மாயாவாதிகள் கிருஷ்ணரை அவமதிப்பவர்கள். Tān ahaṁ dviṣataḥ krūrān(BG 16.19), என கிருஷ்ணரும் சொல்கிறார். அவர்கள் கிருஷ்ணன் மீது பொறாமை கொண்டவர்கள். கிருஷ்ணர் தவி-புஜ-முரளீதரன், சியாமசுந்தரர். ஆனால் மாயாவாதிகள் அவரை உருவமில்லாதவர் எனவும், கற்பனையான மனிதர் எனவும் கூறுகின்றனர். இது எவ்வளவு பெரிய குற்றம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. எனவே சைதன்ய மகாபிரபு அவர்கள், நம்மை மாயாவாதிகளின் பின்னால் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறார். மாயாவாதிகளுடன் சேர்ந்தால் நாம் அழிந்துவிடுவோம். அது மிகப்பெரிய கிருஷ்ண அபச்சாரம். இதுவே ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவர்களின் கருத்து.

எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மாயாவாதிகளின் தத்துவங்களை கேட்க வேண்டாம். நிறைய மாயாவாதிகள் வைஷ்ணவ வேடம் பூண்டுள்ளனர். ஸ்ரீ பக்திவினோத தாகூர் கூறுகிறார்,'ta eka kali-celā nāke tilaka gale mālā, கலியின் புதல்வர்கள் இவர்கள் . அவர்கள் மூக்கின்மேல் திலகமும், கழுத்தில் மாலை அணிந்திருந்த போதிலும் அவர்கள் kali-celā என கூறுகிறார். அவன் மாயாவதியாக இருந்தால், sahaja-bhajana kache mama saṅge laya pare bala. ஆகையால் நீங்கள் பிருந்தாவனத்துக்கு வாருங்கள். Māyāvādi-bhāṣya śunilCC Madhya 6.169)..இங்கே பல மயவாதிகள் உள்ளனர் திலகம், மாலையும் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் உள்நோக்கம் உங்களுக்கு தெரியாது ஆனால் சிறந்த ஆச்சாரியர்கள் அவர்களைக் கண்டுகொள்வர். இவர்கள் தொல்லை மட்டுமே தருபவர்கள்.

śruti-smṛti-purāṇādi
pañcarātra-vidhiṁ vinā
aikāntikī harer bhaktir
utpātāyaiva kalpate
(Brs. 1.2.101)

நாம் கோஸ்வாமிகளையும் அவர்கள் அருளிய பக்தி ரசாம்ருத சிந்து வையையும் பின்பற்ற வேண்டும். இதன் மொழிபெயர்ப்பு தமிழில் 'பக்தி ரசாம்ருத சிந்து' என்னும் நூலில் உள்ளது. அனைவரும் அதை கவனமுடன் படித்து முன்னேற வேண்டும் தன்னை ஒரு வைஷ்ணவன் என்று சொல்லும் மாயாவாதிக்கு இறையாகாதீர்கள். அது அபாயகரமானது.

ஆகையால் , sa saṁhitāṁ bhāgavatīṁ kṛtvānukramya cātma-jam. இது மிகவும் ரகசியமானது அவர் சுகதேவ கோஸ்வாமிக்கு உபதேசித்தார்..