TA/Prabhupada 0170 - நாம் கோஸ்வாமிகளின் உபதேசங்களை பின்பற்ற வேண்டும்.Lecture on SB 1.7.8 -- Vrndavana, September 7, 1976

ஸம்ஹிதா என்பது வேத இலக்கியம் "பாகவதத்தை எழுதியது வியாசதேவர் அல்ல, அது யாரோ போபதேவரால் எழுதப்பட்டது." இப்படி கூறும் பல அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி கூறுவார்கள். இவர்கள் மாயாவாதிகள், நிரீஷ்வரவாதிகள். மாயவாதிகளின் தலைவரான சங்கராச்சாரியார் பகவத் கீதைக்கு பொருள் விளக்கம் எழுதி இருந்தாலும், அவரால் ஸ்ரீமத் பாகவதத்தை தொடக் கூட முடியவில்லை, ஏனென்றால் ஸ்ரீமத்-பாகவதத்தில் விஷயங்கள் அவ்வளவு தெளிவாக வழங்கப்பட்டிருக்கின்றன, 'க்ருத்வானுக்ரம்ய', அதாவது இதிலிருந்து மாயாவாதிகளால் கடவுளை அருவமாக நிரூபிக்கவே இயலாது. அவர்களால் அப்படி செய்யவே முடியாது. இப்போதெல்லாம் அவர்கள் அப்படி செய்துவருகிறார்கள். பாகவதத்தை படித்து தனக்கு தோன்றியது போல் பொருள்விளக்கம் கூருகிறார்கள், ஆனால் அது புத்தியுள்ள எந்த மனிதனுக்கும் சரிபட்டு வராது. ஒரு சமயம் ஒரு பெரிய மாயாவாதியை பாகவதத்தின் ஒரு பதத்தை விளக்கும்போது பார்த்திருக்கிறேன், அதாவது "நீங்களே கடவுள் என்பதால், நீங்கள் திருப்தி அடைந்தால் கடவுளே திருப்தி அடைந்த மாதிரி தான். " இதுதான் அவர்களின் தத்துவம். "கடவுளை தனியாக மகிழ்விக்க தேவையில்லை. நீங்கள் மது அருந்தி மகிழ்ந்தால், கடவுளும் மகிழ்வார்." இதுதான் அவர்கள் வழங்கும் பொருள்விளக்கம். எனவே தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இந்த மாயாவாத விளக்கவுரையை கண்டித்திருக்கிறார். சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார், மாயாவாதி-பாஷ்ய ஷூனிலே ஹய ஸர்வ-நாஷ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 6.169) மாயாவாதி க்ருஷ்ணே அபராதி. அவர் அப்பட்டமாக கூறியிருக்கிறார். எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. மாயாவாதிகள் கிருஷ்ணரின் பெரும் குற்றவாளிகள். தான் அஹம் த்விஷதஹ க்ரூறான் (பகவத் கீதை 16.19), என கிருஷ்ணரும் கூறுகிறார். அவர்கள் கிருஷ்ணர் மீது மிக மிக பொறாமை கொண்டவர்கள். கிருஷ்ணர் த்வி-புஜ-முரளீதரர், சியாமசுந்தரர், ஆனால் மாயாவாதிகள், "கிருஷ்ணருக்கு கைகள் கால்கள் எல்லாம் கிடையாது. இதுவெல்லாம் வெறும் கற்பனை" என விளக்கம் கூறுகிறார்கள். இது எவ்வளவு பெரிய குற்றம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் நம்மைப் போன்றவர்களை எச்சரிப்பதற்காக, சைதன்ய மஹாபிரபு நேரடியாகவே கூறுகிறார், "மாயாவாதிகளிடம் செல்லாதீர்கள்." மாயாவாதி-பாஷ்ய ஷூனிலே ஹய ஸர்வ-நாஷ. மாயாவாதி ஹய க்ருஷ்ணே அபராதி. இவையே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சொற்கள். எனவே நீங்கள் மிகவும் ஜாக்கிருதையாக இருக்கவேண்டும். எந்த மாயாவாதியையும் கேட்க போகாதீர்கள். வைஷ்ணவர்களைப் போல் மாறுவேடம் போட்டு நிறைய மாயாவாதிகள் திரிகிறார்கள். ஸ்ரீ பக்திவினோத தாகூர் அவர்களைப் பற்றி விவரித்திருக்கிறார், 'எய் டா ஏக காலி-சேலா நாகே திலக கலே மாலா', அதாவது, "இதோ இவன் காளியை சேவிப்பவன். அவன் மூக்கின்மேல் திலகமும், கழுத்தில் மாலை அணிந்திருப்பான், ஆனால் அவன் காலி-சேலா (காளியை வழிபடுபவன்)." அவன் மாயாவதியாக இருந்தால், ஸஹ-பஜன காசே மம சங்கே லய பரே பல. ஆக இந்த விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. நீங்கள் விருந்தாவனத்திற்கு வந்திருக்கிறீர்கள். மிக மிக ஜாக்கிருதையாக இருங்கள். மாயாவாதி-பாஷ்ய ஷூனிலே (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 6.169) . இங்கே பல மயவாதிகள் இருக்கிறார்கள், வெளித்தோற்றத்திற்கு திலகமும் மாலையும் அணிந்திருப்பார்கள், ஆனால் அவர்களின் உள்நோக்கம் என்னவென்று உங்களுக்கு புரியாது. ஆனால் சிறந்த ஆச்சாரியர்களால் அவர்களை சட்டென்று அடையாளம் காட்ட முடியும். ஷ்ருதி-ஸ்ம்ருதி-புராணாதி பஞ்சராத்ர-விதிம் வினா ஐகாந்திகி ஹரேர் பக்திர் உத்பாதயைவ கல்பதே (பக்தி ரசாம்ருத சிந்து 1.2.101) பேரழிவுக்கு மட்டுமே வழிவகுக்கிறார்கள். எனவே நாம் கோஸ்வாமிகளை, கோஸ்வாமீகள் வழங்கிய இலக்கியத்தை, குறிப்பாக பக்தி-ரஸாம்ருத-சிந்துவை பின்பற்ற வேண்டும். இதை தமிழில் மொழிபெயர்த்து, 'பக்தி ரஸாம்ருத சிந்து' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். உங்களில் ஒவ்வொருவரும் அதை மிகவும் கவனமாக படித்து முன்னேற வேண்டும். வைஷ்ணவன் வேடத்தில் இருக்கும் மாயாவாதிக்கு மோசம் போகாதீர்கள். அது மிகவும் ஆபத்தானது. எனவே தான் , 'ஸ ஸம்ஹிதாம் பாகவதீம் க்ருத்வானுக்ரம்ய சாத்ம-ஜம்' என கூறப்பட்டிருக்கிறது. இது(பாகவதம்) மிகவும் அந்தரங்கமான விஷயம். அவர் சுகதேவ கோஸ்வாமிக்கு இதை உபதேசித்தார்..