TA/Prabhupada 0185 - ஐம்புலன்களின் தொடர்பினால் நாம் பாதிப்படையக் கூடாது

Revision as of 15:16, 7 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0185 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 3.26.35-36 -- Bombay, January 12, 1975

சடங்கு சம்பிரதாயங்களில் சிக்கிக் கொண்டுவிடாதீர்கள். சடங்கு சம்பிரதாயம் என்பது, கடவுளை அறியும் பாதையில் முன்னேற்றம் ஏற்படுத்தினால்தான் அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். ஆனால் நீங்கள் அந்த சடங்குகளைப் பின்பற்றியும், பரம்பொருளை அறியும் விஷயத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் காணவில்லை என்றால், ஸ்ரீமத் பாகவதத்தைப் பொருத்த வரையிலும், அல்லது வேதத்தைப் பொருத்த வரையிலும், அது அன்பிற்காக செய்யும் கூலிவேலை தான். அது…அதற்கு எந்த மதிப்பும் இல்லை. முதல் தர மதம் என்றால் என்ன என்று பாகவதம் கூறுகிறது. நீங்கள் அதை இந்து மதம், இஸ்லாம், கிறித்துதவம் அல்லது பௌத்தம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். “அதோக்ஷஜனை அறிவதில் உங்களை முன்னேறச் செய்ய உதவுவதே முதல் தர மதம்”. அதோக்ஷஜன் என்பது கிருஷ்ணரின் மற்றொரு பெயர். அதோக்ஷஜன் என்றால் மனதின் ஊகங்களைக் கொண்டு அறிய முடியாத விஷயம் என்று பொருள். அல்லது அனுபவ அறிவைக் கொண்டு, பயிற்சியினாலேயோ, செயலறிவைக் கொண்டோ அறிய முடியாதது. அது தான் அதோக்ஷஜன் என்று அழைக்கப்படுகிறது. Adhah-kṛtaṁ akṣajam jñānaṁ yatra. நாம் அந்த அதோக்ஷஜனை அணுகவேண்டும். ஞானத்தின் பல நிலைகள் உள்ளன : ப்ரத்யக்ஷா, பரோக்ஷா, அபரோஷா, அதோக்ஷஜா, அப்ராக்ருதா. எனவே நாம் தெய்வீகமான, இந்த பௌதிக உலகிற்கு மேலான அப்ராக்ருதாவை அணுக வேண்டும். ஞானத்தின் கீழ் நிலையில் உள்ள ப்ரத்யக்ஷா, பரோக்ஷ, அபரோக்ஷாவை விட அதோக்ஷஜா கிட்டத்தட்ட அருகிலேயே உள்ளது. அவை கனிஷ்ட-அதிகாரத்தில் உள்ளன.

arcāyām eva haraye
pūjāṁ yaḥ śraddhayehate
na tad-bhakteṣu cānyeṣu
sa bhaktaḥ prākṛtaḥ smṛtaḥ
(SB 11.2.47)

ஆகையால், ப்ராக்ருதா நிலை என்பது ப்ரத்யக்ஷ ஞானம், நேரடிக் காட்சி, பரம்பராவிடமிருந்து பெற்ற ஞானம். ப்ரத்யக்ஷா, பரோக்ஷா.. பிறகு அபரோக்ஷா, அதாவது தன்னை உணர்தல், பிறகு அதோக்ஷஜா, அப்ராக்ருதா. ஆகையால், கிருஷ்ண பக்தி என்பது அப்ராக்ருத ஞானம். அது தான் கிருஷ்ணரை அறிவதற்கான உச்ச கட்ட மேடை, அப்ராக்ருத ஞானம். ஆக, என்வே நாம் அதோக்ஷஜ ஞானத்தில் இருக்கும் வரை, அது கட்டுப்பாட்டுக் கொள்கைகளாகும். கட்டுப்பாட்டுக் கொள்கைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மேலும் அப்ராக்ருத ஞானம் என்பது பரமஹம்சருக்கே. அங்கே… அது தான் ராக-பக்தி. ப்ரத்யக்ஷா, பரோக்ஷா, இந்நிலைகளில், அவை வித்தி-பக்தி எனப்படுகிறது. ஆனால், வித்தி பக்தி இல்லாமல், ராக பக்தி என்னும் மேடையை, நம் நோக்கம் அதுவாக இருப்பினும், அடைய முடியாது. ராகானுகா, ராக பக்தியை, விருந்தாவனரிவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியே செயல்படுத்த முடியும். இது தான் ராக பக்தி. கிருஷ்ணரின் அந்தரங்க கூட்டாளிகள். கிருஷ்ணரின் அந்தரங்க கூட்டாளிகளாக ஆகிவிடாமல், அவரின் நிரந்தரக் கூட்டாளிகளின் அடிச் சுவடுகளை பின்தொடர்ந்து நாம் ராக-பக்தியின் நிலையை அடைய முடியும். இது பரா-பக்தி என்று வழங்கப்படுகிறது. பரா-பக்தி என்பது வேண்டும்.

brahma-bhūtaḥ prasannātmā
na śocati na kāṅkṣati
samaḥ sarveṣu bhūteṣu
mad-bhaktiṁ labhate parām
(BG 18.54)

ஆகையால், இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கம் ராக-பக்தி அல்லது பரா-பக்தியின் நிலைக்கு படிப்படியாக வளர்கிறது. பின்னர், வாழ்வே வெற்றியடைந்து விடுகிறது. அதே போல், நாம் இந்த ஐம்புலங்களின் தொடர்பினால் பாதிப்படையக் கூடாது. இங்கு சொல்லியுள்ளதைப் போல், mṛdutvaṁ kaṭhinatvaṁ ca śaityam uṣṇatvam eva ca. இந்த விஷயங்களால் நாம் பாதிப்படைகிறோம். நாம் தரையில் படுத்துக் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். இது கடினத்துவம்; மிகவும் கடினமானது. ஆனால் நமக்குத் தலையணையோ, நல்ல மெத்தையோ கொடுக்கப்பட்டிருந்தால், அது மிருதுத்துவம். அதே போல் சீதோஷ்ணா. நீர், சில சமயம் அது குளிர்ச்சியாக இருக்கிறது, சில சமயம் சூடாக இருக்கிறது. அதே நீர் தான்; ஐம்புலங்களின் அமைப்பின் மாற்றத்தைப் பொருத்து, வெவ்வேறு நிலையில் வெவ்வேறு தன்மையில் இருக்கிறது. இதே தான் வலி, மற்றும் இன்பத்தின் ஆதாரம், தொடுதலினால் அல்லது தோலினால். தோல் என்றால் தொடுதல். எனவே நாம், “நான் இந்த உடல் இல்லை” என்பதை முழுதும் புரிந்து கொண்டால், அதற்கு உணர்தல் தேவை, ஆத்மானுபூதி.

ஆன்மீக உணர்வில், நாம் முன்னேற்றம் அடைய அடைய , நாம் ஆத்ம-ஸ்தாவில் மென்மேலும் நிலைகொள்ள முடியும். இது தான் ஸ்தித-ப்ரஞா என்று அழைக்கப்படுகிறது. பிறகு நாம் பாதிக்கப்பட மாட்டோம். மேலும் நாம் இந்த நிபந்தனைக்குட்பட்ட, ஐம்புலன்கள் சார்ந்த பரிணாமங்களால் பாதிக்கப் படாமல் இருக்கப் பயிற்சி செய்ய வேண்டும். நாம் செய்யவேண்டும். ஏனென்றால், நாம் இவ்வுலகைச் சேர்ந்தவர்கள் அல்ல, ahaṁ brahmāsmi, நாம் இந்த ஜட வாழ்க்கைக்கு உரியவர்கள் இல்லை என்றாலும், நாம் இதற்கு பழக்கப்படுத்தப்படுகிறோம். ஆகையால் பயிற்சியினால் நான் ஆன்மீக நிலையை அடைய வேண்டும். மேலும் இந்தப் பயிற்சியின் போது சகிப்புத்தன்மை தேவை. இது தான், பஜனை, சாதனை அல்லது தபஸ்யா, விரதம், தவம், சகிப்புத்தன்மை. நாம் இதுவாக இல்லை, ஆனால் எப்படியோ, இந்த பொதிக விஷங்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுவிட்டோம், எனவே மீண்டும் பயிற்சி செய்வது, ஆன்மீக மேடையை வந்தடைவது, இந்த சகிப்புத்தன்மை தான் தபஸ்யா. தஸ்யாவின் அர்த்தம் இது தான். தபா என்றால் வலி, தன்னிச்சையாக ஒரு வலியை ஏற்றுக்கொள்வது.