TA/Prabhupada 0185 - ஐம்புலன்களின் தொடர்பினால் நாம் பாதிப்படையக் கூடாது



Lecture on SB 3.26.35-36 -- Bombay, January 12, 1975

விதி முறைகளில் சிக்கி விடாதீர்கள். விதி முறைகள் தேவை தான், ஆனால் பரமன் உணர்வில் முன்னேற அது உனக்கு உதவியாக இருக்கவேண்டும். ஆனால் வெறும் விதி முறைகளை பின்பற்றி, இறைவனை உணர்வதில் எந்த முன்னேற்றமும் நீ அடையாமல் இருந்தால், ஸ்ரீமத் பாகவதத்தைப் பொருத்த வரை, அதாவது வேத சிந்தனையின்படி அது அன்பை வெறும் ஒரு சுமையாக உணருவது போல் தான். அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. எனவே பாகவதம் கூறுகிறது, "அதுவே சிறந்த சமய முறை." நீங்கள் அதை இந்து, முஸ்லிம், கிறித்துதவம் அல்லது பௌத்தம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். “அதோக்ஷஜனை உணருவதில் உனக்கு முன்னேற எது உதவுகிறதோ அதுவே சிறந்த சமய முறை ஆகும்." அதோக்ஷஜ என்பது கிருஷ்ணரின் மற்றொரு பெயர். அதோக்ஷஜ என்றால் வெறும் ஊகித்தோ, அனுபவத்தாலோ, உடல் பயிற்சி முறைகளாலோ உணர முடியாத ஒரு விஷயம். அதற்கு தான் அதோக்ஷஜ எனப் பெயர். அதஹ-க்ருதம் அக்ஷஜம் ஞானம் யத்ர. ஆக நாம் அந்த அதோக்ஷஜரை அணுகவேண்டும். ஞானத்தின் பல நிலைகள் உள்ளன : ப்ரத்யக்ஷ, பரோக்ஷ, அபரோஷ, அதோக்ஷஜ, அப்ராக்ருத. எனவே நாம், அப்ராக்ருத, ஆதாவது இந்த பௌதிக உலகிற்கு அப்பாற்பட்ட, தெய்வீகமான நிலையை அடைய வேண்டும். ப்ரத்யக்ஷ, பரோக்ஷ, அபரோக்ஷ என்ற ஞானத்தின் தாழ்ந்த நிலைகளை விட அதோக்ஷஜ என்ற நிலை ஒரு படி உயர்ந்தது. அவை கனிஷ்ட-அதிகார நிலையைச் சார்ந்தவை. அர்சாயாம் ஏவ ஹரயே பூஜ்யம் யஹ ஷ்ரத்தாயேஹதே ந தத்-பக்தேஷு சாஞேஷு ஸ பக்தஹ ப்ராக்ருதஹ ஸ்மருதஹ (ஸ்ரீமத் பாகவதம் 11.2.47) ஆக, ப்ராக்ருத நிலை என்பது ப்ரத்யக்ஷ ஞானம், அதாவது நேரடியாக புலங்களால் உணர்ந்த அறிவு மற்றும் சீடப் பரம்பரையிடமிருந்து பெற்ற அறிவு. ப்ரத்யக்ஷ, பரோக்ஷ, பிறகு அபரோக்ஷ, அதாவது தன்னை உணர்தல், பிறகு அதோக்ஷஜ, அப்ராக்ருத. ஆக, கிருஷ்ண பக்தி என்பது அப்ராக்ருத ஞானம். அது தான் கிருஷ்ணரை அறிவதற்கான உச்ச கட்ட தளம், அப்ராக்ருத ஞானம். ஆக நாம் அதோக்ஷஜ நிலையில் பக்குவம் அடையாத வரை நாம் கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கு இணங்கித் தான் நடக்க வேண்டும். கட்டுப்பாட்டுக் கொள்கைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மேலும் அப்ராக்ருத ஞானம் என்பது பரமஹம்சர்களுக்கு உகந்தது. அங்கே… அது தான் ராக-பக்தி. ப்ரத்யக்ஷ, பரோக்ஷ, இந்த நிலைகள், வித்தி-பக்தி என்று அழைக்கப்படுகின்றன. ராக பக்தி என்ற நிலை நமது லட்சியமாக இருந்தாலும், வித்தி பக்தி இல்லாமல் அதை அடைய முடியாது. ராகானுக, அதாவது ராக-பக்தி என்பது, விருந்தாவனத்தில் வசிக்கும் பக்தர்கள் வகுத்த பாதையை பின்பற்றி செய்யப் படுகிறது. அது தான் ராக-பக்தி. கிருஷ்ணருக்கு பிரியமான நெருங்கியவர்கள். இதில் நேரடியாக கிருஷ்ணரின் நெருங்கியவன் ஆவது லட்சியம் அல்ல, ஆனால் நித்தியமான, அவருக்கு பிரியமான நெருங்கியவர்களின் அடிச் சுவடுகளை பின்தொடர்ந்து நம்மால் ராக-பக்தி எனும் நிலையை அடைய முடியும். அதற்குத் தான் பரா-பக்தி எனப் பெயர். அந்த பரா-பக்தி தான் தேவை. ப்ரஹ்ம-பூத ப்ரஸன்னாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி ஸமஹ ஸர்வேஷு பூதேஷு மத்-பக்திம் லபதே பராம் (பகவத்-கீதை 18.54) ஆக, ராக-பக்தி அல்லது பரா-பக்தியின் நிலைக்கு படிப்படியாக முன்னேறுவது தான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம். அப்பொழுதே இந்த வாழ்க்கையின் லட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைந்ததாக அர்த்தமாகும். அந்த வகையில், நாம் இந்த ஜட இயற்க்கையுடனான தொடர்புகளால் சஞ்சலம் அடையக் கூடாது. இங்கு குறிப்பிட்டப்படி, ம்ருதுத்வம் கடினத்வம் ச ஷைத்யம் உஷ்ணத்வம் ஏவ ச. இந்த விஷயங்களால் நாம் சஞ்சலம் அடைகிறோம். நாம் தரையில் படுத்துக் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த தரை கடினத்துவம்: மிகவும் கடினமானது. ஆனால் நமக்கு தலையணையோ, நல்ல மெத்தையோ கிடைத்தால், அது மிருதுத்துவம். அதுபோலவே ஷீதோஷ்ண. நீர் என்பது சில சமயம் மிகவும் குளிர்ந்து இருக்கும், சில சமயம் சூடாக இருக்கும். அதே நீர் தான்; ஜட இயற்க்கையின் சூழ்நிலையைப் பொருத்து, அது வெவ்வேறு நிலைகளை அடைகிறது. மேலும் ஸ்பரிசத்தால், அதாவது இந்த சருமத்தால், அது (நீர்) இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் ஆகிவிடுகிறது. ஸ்பரிசம் என்ற உணர்வு சருமத்தால் ஏற்படுகிறது. ஆக நாம், “நான் இந்த உடல் அல்ல,” என்பதை முழுதாக புரிந்துகொள்வதற்கு உணர்தல் தேவை, ஆத்மானுபூதி. ஆன்மீக உணர்வில், நாம் முன்னேற்றம் அடைய அடைய , நாம் ஆத்ம-ஸ்த நிலையில் மென்மேலும் நிலை பெறுகிறோம். இது தான் ஸ்தித-ப்ரஞ என்று அழைக்கப்படுகிறது. பிறகு நாம் சஞ்சலப் பட மாட்டோம். மேலும் நாம், சூழ்நிலைகளில், ஜட இயர்க்கையில் ஏற்படும் மாற்றங்களால் சஞ்சலப் படாமல் இருக்க பயிற்சி செய்ய வேண்டும். நாம் செய்யவேண்டும். ஏனென்றால், நாம் இந்த ஜட இயர்க்கையைச் சேர்ந்தவர்கள் அல்ல, அஹம் ப்ரஹ்மாஸ்மி, நான் இந்த ஜட இயற்க்கையைச் சேர்ந்தவன் அல்ல, ஆனால் நான் இதற்கு பழக்கப்பட்டிருக்கின்றேன், எனவே பயிற்சியினால் நான் ஆன்மீக நிலையை அடைய வேண்டும். மேலும் பயிற்சி பெறும் போது, சகிப்புத்தன்மை தேவை. அது தான் பஜன என்றழைக்கப்படுகிறது, அதாவது சாதனா, தபஸ்யா, விரதம், தவம், சகிப்புத்தன்மை. நாம் இந்த ஜட இயற்க்கையைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் எப்படியோ நாம் நம்மை அத்துடன் அடயாளப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். மேலும் தகுந்த பயிற்சியின் மூலம், மீண்டும் ஆன்மீக தளத்தை அடைவதற்கு தேவையான சகிப்புத்தன்மைக்கு பெயர் தான் தபஸ்யா. தபஸ்யாவின் அர்த்தம் இது தான். தபஹ என்றால் வலி, தானே விரும்பி ஒரு வலியை ஏற்றுக்கொள்வது.