TA/Prabhupada 0231 - பகவான் என்பவர் முழு பிரபஞ்சத்திற்கும் உரிமையாளர்

Revision as of 11:43, 13 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0231 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 2.1-5 -- Germany, June 16, 1974


கிருஷ்ணர், அங்கீகரிக்கப்பட்ட சாதுக்களால் பகவானாக அல்லது முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். பகவான் என்பவர் யார். பகவான் என்பவர், ஆறு வகையான ஐஸ்வர்யங்களை உள்ளடக்கியவர். அனைத்து ஐஸ்வர்யங்களை கொண்டுள்ளவர் என்றால் அவர் தான் மிகப் பெரிய செல்வந்தர். கடவுள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்று நம்மால் புரிந்து கொள்ளமுடியும். சிறிது நிலங்களை வைத்திருக்கும் நாமே இத்தனைபெருமை கொள்ளும்போது.. கடவுள் இந்த பிரபஞ்சத்தையே ஆள்பவர். எனவே, பகவானே மிகப் பெரிய செல்வந்தர். மிக அதிக வலிமையானவர். அவரே மிகுந்த விவேகமுள்ளவர். மற்றும் அவரே மிகவும் அழகானவர். இந்த வகையில் , ஒருவர் மிகப் பெரிய செல்வந்தராகவும், மிகவும் அழகாகவும், மிகுந்த விவேகம் உள்ளவராகவும் மற்றும் மிகுந்த பலமானவராகவும் ஒருவரைக் கண்டுபிடித்தால்.. அவரே கடவுள் ஆவார். கிருஷ்ணர் இந்த பூவுலகில் அவதரித்திருந்தபொழுது அவரிடம் இந்த ஆறு ஐஸ்வர்யங்களும் நிரம்பி இருந்தன. உதாரணத்திற்கு, அனைவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் 16,108 பெண்களை திருமணம் செய்துகொண்டார். அவர் ஒரு ஆளாக 16,108 பெண்களுக்கும் கணவனாக இருந்தார் என்று பொருள் அல்ல. அவர் 16,108 மனைவிகளுக்கும் தனி தனியாக மாளிகைகள் அமைத்துக்கொடுத்தார். ஒவ்வொரு மாளிகையும், முதல் ரக பளிங்கு கற்களாலும், வீட்டு உபயோக பொருட்கள் யானை தந்தங்களாலும் செய்யப்பட்டது. அரியணைகள் மென்மையான பஞ்சு கொண்டு செய்யப்பட்டது. இவ்வாறாக விவரிக்கப்படுகிறது. மற்றும் வெளிப்புற இடங்கள், பூமரங்களால் நிரம்பி இருந்தது. அதுமட்டுமல்லாமல் அவர் 16108 கிருஷ்ணர்களாக தன்னை விரித்துக்கொண்டார். இவ்வாறு அவர் ஒவ்வொரு மனைவியுடனும் வாழ்ந்தார். இது கடவுளுக்கு கஷ்டமான காரியம் அல்ல. கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கின்றார். நம் பார்வைக்கு அவர் 16000 இடங்களில் இருக்கிறார் என்றால்.. அவருக்கு அதில் என்ன கடினமாக இருக்கபோகிறது? எனவே இதில் சொல்லப்பட்டது śrī-bhagavān uvāca. முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். எனவே அவர் என்ன சொன்னாலும் அதை சத்தியம் என்றே ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த நிர்பந்தமான வாழ்வில், நம்மிடம் நான்கு வகையான குறைபாடுகள் இருக்கின்றன. நாம் தவறுகள் செய்கிறோம், நாம் மாயையால் பாதிக்கப்பட்டுள்ளோம், நாம் ஏமாற்றுகிறோம், நம் புலன்கள் குறையுள்ளவை. இதை போல் குறைபாடுகள் உள்ள ஒருவரிடமிருந்து பெறப்படும் அறிவு நிறைவான அறிவு அல்ல. இந்த நான்கு வகையான குறைபாடுகளை கடந்த நிலையில் உள்ளவரிடம் பெறப்படும் அறிவு சிறந்தது. நவீன அறிவியல் வல்லுநர்கள் சொல்வது போல " இது அப்படி இருக்கலாம், இது இப்படி இருக்கலாம் " என்று சொல்வதெல்லாம் சரியான அறிவு அல்ல. குறையுள்ள புலன்களால் ஆராயப்படும் அறிவு எவ்வாறு முழுமையான அறிவாக இருக்க முடியும்? இந்த அறிவு ஒரு சிறு பகுதியாக தான் இருக்குமே ஒழிய, முழு அறிவாக இருக்காது. எனவே நாம் சரியான நபரிடமிருந்து அறிவைப் பெறுவதே சிறந்தது. எனவே நாம் கிருஷ்ணரிடமிருந்து அறிவை பெறுகிறோம். அந்த அறிவு முழுமையானது. ஒரு குழந்தையை போல. குழந்தைக்கு முழுமையான அறிவு இருக்காது. ஆனால் அதன் தந்தை இது தான் கண்ணாடி என்று கூறினால்.. பிறகு அந்த குழந்தை "இது கண்ணாடி" என்று கூறுகிறது. இந்த அறிவு சிறந்தது. ஏனெனில் அந்த குழந்தை ஆராய்ந்து பார்ப்பதில்லை. அது தாயிடமோ அல்லது தந்தையிடமோ அது என்ன இது என்ன என்று கேட்டு தெரிந்து கொள்கிறது. மற்றும் தாயானவள் குழந்தையிடம் , இது என்ன என்று சொல்லி தருகிறார். இன்னோரு உதாரணமும் சொல்லலாம். குழந்தைக்கு, குழந்தை பருவத்தில் இருக்கும்போது... அதனின் தந்தை யார் என்று தெரியாமல் இருந்தால் அதனால் எந்த ஆராய்ச்சியிலும் ஈடுபட முடியாது. அது தன் தந்தை யார் என்பதை ஆராய்ந்து கண்டுபிடிக்க இயலாது. ஆனால் அது தாயிடம், தன் தந்தை யார் என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறது. இது உண்மையான அறிவாக இருக்கும். எனவே, கடவுளை பற்றிய அறிவு என்பது நம்முடைய புலன்களின் அறிவிற்கு எட்டாதது என்பதால், நம்மால் எவ்வாறு அறிய முடியும். எனவே, நாம் கடவுளிடமிருந்து நேரடியாக அந்த அறிவை பெறவேண்டும். அல்லது அவருடைய பிரதிநிதியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். எனவே இங்கு கிருஷ்ணர் கூறுவதையே அதிகாரப்பூர்வமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் அர்ஜுனனிடம் பின்வருமாறு கூறுகிறார். அவர் சொல்கிறார் aśocyān anvaśocas tvaṁ prajñā-vādāṁś ca bhāṣase: (BG 2.11). "அன்பு அர்ஜுனா! அறிவாளியைப் போல பேசும் அதே சமயத்தில்... கவலைப்பட வேண்டாதவற்றிற்காக நீ கவலைப்படுகிறாய்." Gatāsūn agatāsūṁś ca nānuśocanti paṇḍitāḥ. Gatāsūn என்றால் இந்த உடல். இருக்கும்போதும் சரி, இறக்கும்போதும் சரி. ஜட எண்ணத்துடன் இருப்பது முட்டாள்தனமாகும். அறிஞர் வாழ்பவர்களுக்காகவோ, மாண்டவர்களுக்காகவோ வருந்துவதில்லை. வேதத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால் "எவன் ஒருவன் புலனின்ப வாழ்க்கையில் மூழ்கி உள்ளானோ, அவன் மிருகத்திற்கு ஒப்பாவான்." தற்போது , ஆத்ம ஞானம் இல்லாமல் இந்த உலகமே புலனின்ப வாழ்க்கையில் மூழ்கி உள்ளது. புலனின்ப வாழ்க்கை என்பது, மிருகங்களிடத்தும் உள்ளது. நாய்களும் பூனைகளும் , பெரியனவாக வளர்வதில் மிகுந்த பெருமை கொள்கின்றன. இதைப் போலவே மனிதனும் தான் ஒரு பெரிய அமெரிக்கன் என்றோ அல்லது பெரிய ஜெர்மானியன் என்றோ பெருமை கொண்டால், அவற்றிற்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் நாம் நாய்களைப் போலவும், பூனைகளைப் போலவும் சண்டை போடுகிறோம்.

இதை நாம் நாளை விவாதிப்போம் ..