TA/Prabhupada 1061 - இந்த பகவத்-கீதையில் புரிந்துக் கொள்ள வேண்டிய கருப்பொருள் ஐந்து வேறுபட்ட உண்மைகள்

Revision as of 08:16, 4 April 2015 by Rishab (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 1061 - in all Languages Category:TA-Quotes - 1966 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

660219-20 - Lecture BG Introduction - New York

ஆகையால் பகவான் கிருஷ்ணர், அவர் அவதரித்தார், யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி (ப.கீ.4.7), இப்பொழுது வாழ்க்கையின் உண்மையான குறிக்கோளை நிறுவ. மனிதன் வாழ்க்கையின் உண்மையான குறிக்கோளை மறந்துவிடும் பொழுது, மனித. உரிமை சமயத்துறை வாழ்க்கை, அப்போது அது தர்மஸ்ய க்லானிர், மனிதர்களின் தொழிலில் ஏற்படும் தொந்திரவு என்று அழைக்கப்படும். ஆகையால் அந்த சூழ்நிலையில், பல எண்ணிக்கையில் இருக்கும் மனிதர்களுள், விழிப்பூட்டியாவர், தன்னுடைய நிலையை புரிந்துக் கொள்ளும் ஆன்மாவை விழிப்புறச் செய்யும் ஒருவர், அவருக்கு இந்த பகவத்-கீதை பேசப்பட்டது. நாம் எவ்வாறு என்றால் அறியாமை என்னும் பெண் புலியால் விழுங்கப்பட்டது போல், மேலும் பகவான், காரணமற்ற கருணையை உயிர்வாழிகளிடம் காட்டுகிறார், தனி சிறப்பாக மனிதர்களுக்கு, அவர் பகவத்-கீதை கூறினார், அவர் நண்பர் அர்ஜுனரை ஒரு மாணவனாக்கினார். அர்ஜுனர் கண்டிப்பாக, பகவான் கிருஷ்ணருடன் இணைந்தவர், அவர் அறியாமைக்கெல்லாம் அப்பாற்பட்டவர். இருப்பினும், குருக்ஷெத்திர போர்க்களத்தில் அர்ஜுனர் அறிவின்மைக்கு தள்ளப்பட்டார் முழுமுதற் கடவுளிடம் சும்மா வாழ்க்கையின் பிரச்சனைகளைப் பற்றி கேள்வி கேட்க, அப்பொழுதுதான் பகவான் அதற்கு, எதிர்காலத்து மனித பரம்பரையின் நலனுக்கு விளக்கம் அளிக்க முடியும். தன் வாழ்க்கையின் திட்டங்களை விவரித்து மேலும் அதன் வழியில் நடப்பது, அப்பொழுதுதான் அவர் வாழ்க்கை, சமயத்தை பரப்பும் துறையில் மனித வாழ்க்கை, குறைவற்றதாக இருக்கும். ஆகையால் இந்த பகவத்-கீதையில் புரிந்துக் கொள்ள வேண்டிய கருப்பொருள் ஐந்து வேறுபட்ட உண்மைகள். முதல் உண்மை இறைவன் என்பவர் யார். இது இறை விஞ்ஞானத்தின் தொடக்க நிலை ஆய்வு. ஆகையால் அந்த இறை விஞ்ஞானம் இங்கு விளக்கப்படுகிறது. அடுத்தது, உயிர்வாழிகளின் வாழ்க்கை அமைப்பு, ஜீவா. ஈஸ்வராவும் ஜீவாவும். பகவான், முழுமுதற் கடவுள், அவர் ஈஸ்வரா என்று அழைக்கப்படுகிறார். ஈஸ்வரா என்றால் ஆளுநர், அத்துடன் ஜீவா, உயிர்வாழிகள், ஜீவாஸ், உயிர்வாழிகள், அவர்கள் ஈஸ்வராவோ, அல்லது ஆளுநரோ அல்ல. அவர்கள் ஆளப்படுபவர்கள். இயற்கைக்கு மாறாக, நான் அவ்வாறு சொன்னால், அதாவது "நான் ஆளப்படவில்லை, நான் சுதந்திரமானவன்," இது தெளிவான மனமுடைய ஒருவரின் அறிகுறி அல்ல. ஒரு உயிரினம் எல்லா விதத்திலும் ஆளப்படுகிறது. குறைந்தது, அவருடைய நிபந்தனையான வாழ்க்கையில் அவர் ஆளப்படுகிறார். ஆகையால் இந்த பகவத்-கீதையில் எடுத்துக் கொண்ட கருப்பொருள் ஈஸ்வராவை அறிந்துக்கொள்வது, நித்தியமான ஆளுநர், மேலும் ஆளப்படும் உயிர்வாழிகளைப் பற்றி, மேலும் ப்ரக்ருதி, இந்த இயற்கை, இந்த ஜட இயற்கை.♫ அடுத்தது, நேரம், அல்லது இந்த பேரண்டத்தின் நிலைக்கும் காலம், அல்லது இந்த ஜட இயற்கையின் ஜடத் தோற்றம், மேலும் இந்த நீடிக்கும் காலத்தின் நேரம் அல்லது இந்த நித்தியமான நேரம். மேலும் கர்ம. கர்ம என்றால் நடவடிக்கை. அனைத்தும், முழு பேரண்டமும், முழு பிரபஞ்ச தோற்றமும் பலவிதமான நடவடிக்கைகளால் நிறைந்துள்ளது. முக்கியமாக உயிரினங்கள், அவர்கள் அனைவரும் பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆகையால் நாம் பகவத்-கீதையிலிருந்து, ஈஸ்வர, இறைவன் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும், ஜீவா, இந்த உயிர்வாழிகள் என்றால் என்ன, மேலும் ப்ரக்ருதி, பிரபஞ்ச தோற்றம் என்றால் என்ன, மேலும் இது காலத்தால் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது, இவற்றின் நடவடிக்கை என்ன? இப்பொழுது இந்த ஐந்து கருப்பொருளில் இருந்து, பகவத்-கீதையால் நிலைநாட்டப்படுவது, அதாவது முழுமுதற் கடவுள், அல்லது கிருஷ்ணர், அல்லது ப்ரமன் அல்லது பரமா.த்மா, நீங்கள் விரும்பியபடி அழைக்கலாம். ஆனால் நித்தியமான ஆளுநர். அங்கே நித்தியமான ஆளுநர் இருக்கிறார். ஆகையால் அந்த நித்தியமான ஆளுநர்தான் அனைவரையும்விட மிக உயர்ந்தவர். இந்த உயிரினங்கள், தரத்தில் நித்தியமான ஆளுநரைப் போல் இருப்பார்கள். எவ்வாறு என்றால், நித்தியமான ஆளுநர், பகவான், அவர் பிரபஞ்ச சம்பந்தமான காரியங்களை கட்டுப்படுத்துகிறார், ஜட இயற்கையும், எவ்வாறு அது, இது பகவத்-கீதையின் அடுத்து வரும் அத்தியாயங்களில் விளக்கப்படும் அதாவது இந்த ஜட இயற்கை சுதந்திரமானதல்ல. அவள் முழுமுதற் கடவுளின் வழிகாட்டுதலால் இயங்குகிறாள். மயாத்யக்ஷெண ப்ரக்ருதி: ஸுயதே ஸ-சராசரம் (ப.கீ.9.10). "இந்த ஜட இயற்கை என் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது," மயாத்யக்ஷெண "என் கண்காணிப்பின் கீழ்."