TA/Prabhupada 0264 - மாயாவும் கிருஷ்ணருக்கு சேவை செய்கிறாள்.. அந்த சேவைக்கு நன்றி எதிர்பார்பதில்லை

Revision as of 13:29, 23 March 2018 by Karunapati (talk | contribs) (Created page with " <!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0264 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes -...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, September 27, 1968

தமல கிருஷ்ணா : மாயா ஒரு தூய பக்தையா? மாயா.

பிரபுபாதா: தூய பக்தர்கள்.. அல்ல.. அவர்கள் மாயையில் இருக்கமாட்டார்கள்

தமல கிருஷ்ணா : மாயா தேவி ஒரு தூய பக்தையா ?

பிரபுபாதா : ஆம் . நிச்சயமாக காவலர்கள், அரசாங்கத்தின் உண்மையான பணியாளர்கள் இல்லையா ? காவலர்கள், உங்களை துன்புறுத்தினால் அவர்கள் அரசுக்கு நேர்மையாக இல்லை என்று பொருளா ? அவர்களின் பணி நன்றி எதிர் பாராத பணி.. அதே போல், மாயாவும் கிருஷ்ணருக்கு சேவை செய்கிறாள்.. அந்த சேவைக்கு நன்றி எதிர் பார்த்துசெய்வது இல்லை, அதுவே வித்தியாசம். கடவுளை நம்பாதவர்களை தண்டிப்பது அவளின் செவை,. நன்றி எதிர் பார்த்து செய்வது கிடையாது எனவே, மாயா கிருஷ்ணரின் அன்பு இல்லாதவள் என்று ஆகாது.. மாயா என்ற புத்தகத்தில், மாயா, சண்டி, வைஷ்ணவி என்று எழுதப்பட்டுள்ளது. மாயா , வைஷ்ணவி என்று அழைக்கப்படுகிறாள் தூய்மையான பக்தன் வைஷ்ணவன் என்று அழைக்கப்படுவதை போல, அவள் வைஷ்ணவி என்று அழைக்கப்படுகிறாள் விஸ்ணுஜனா : எப்படி நீங்கள் அனைத்தையும் சுலபமாக புரிந்து கொள்ளும்படி சொல்கிறீர்கள் ? பிரபுபாதா : ஏன் என்றால் தத்துவம் முழுமையுமே மிகவும் சுலபமானது கடவுள் மிகவும் உயர்ந்தவர்... ஆனால் நீ அப்படி இல்லை.. கடவுள் நான் தான் என்று சொல்லாதே.. கடவுள் இல்லை என்றும் சொல்லாதே ... கடவுள் இருக்கிறார்.. அவர் உயர்ந்தவர்.. நீ மிகவும் சிறியவன்... அப்பொழுது உன்னுடைய நிலை என்பது என்ன ? நீ கிருஷ்ணருக்கு சேவை செய்யவேண்டும்.. இது மிகவும் எளிய உண்மை.. எனவே அந்த கிளர்ச்சியுடைய தன்மை தான் மாயா. எவன் ஒருவன் கடவுள் இல்லை என்றோ, அல்லது நான் தான் கடவுள், நீ தான் கடவுள் என்று கூறுகிறானோ.. அவர்கள் மாயத்தின் பிடியில் உள்ளனர் .. Piśācī pāile yena mati-cchanna haya. ஒருவருக்கு பேய் பிடித்திருக்கும் பொழுது எப்படி உளறுகிறார்களோ.. அதே போல் மாயத்தினால் பிடிபட்டவர்கள் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள்.. நீ ஏன் கடவுளை தேடவேண்டும்? தெருவில் பல இடங்களில் கடவுள் சுற்றித்திரிகிறார் அவர்கள் அனைவருமே பேய் பிடித்தவர்கள்.. சீரழிந்தவர்கள் எனவே, இவர்களை நாம், ஹரே கிருஷ்ணா என்னும் ஆழ்நிலை மந்திர ஜபத்தின் மூலம் குணமடைய செய்யவேண்டும்.. இது குணமடைய செய்வதற்கான வழி மட்டுமே அவர்கள் இதை கேட்டாலே குணமடைந்து விடுவார்கள் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கிறவன் பக்கத்தில் சென்று கத்தினால் அவன் எப்படி விழித்துகொள்வானோ அப்படி இந்த மந்திரம் , தூங்கிக்கொண்டிருக்கும் மனித குலத்தை விழித்தெழ வைக்கும். Uttiṣṭha uttiṣṭhata jāgrata prāpya varān nibodhata. வேதம் கூறுகிறது " மனித இனமே , எழுந்திரு" இதற்கு மேலும் தூங்காதே மனிதன் உடல் எனும் வாய்ப்பை நீ பெற்றிருக்கிராய் .. அதை சரியாக உபயோகித்துக்கொள் மாயையின் பிடியிலிருந்து உன்னை விடுவித்துக்கொள் இது தான் வேதத்தின் உறுதி ஆகும் எனவே, நீ அந்த வேலையே செய்கிறாய் ஹரே கிருஷ்ணா , எல்லோரும் கூறுங்கள், ஹரே கிருஷ்ணா..

பக்தர்கள் : ஹரே கிருஷ்ணா

பிரபுபாதா : ஆம் ?

ஜெய கோபால : இறந்தகாலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் என்பது , பௌதிக உணர்வின் படி, ஒரு குருட்டுத்தனமான பிரதிபலிப்பா ? பிரபுபாதா : ஆம் , இறந்த காலம், வருங்காலம், நிகழ்காலம் அனைத்துமே ஒப்புமை கொள்கையின் அடிப்படையில் இணைந்தது பேராசிரியர் ஐன்ஸ்டீன் அதை நிரூபித்துள்ளார் உன்னுடைய இறந்த காலமும், ப்ரம்ஹமாவின் இறந்த காலமும் ஒன்று அல்ல உன்னுடைய நிகழ்காலமும் , ஒரு எறும்பினுடைய நிகழ்காலமும் ஒன்றல்ல எனவே.. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்.. - காலம் முடிவில்லாதது உடலின் பலவகை பட்ட சார்பியல் கோட்பாடு என்பதை பொறுத்தது இது.. காலம் நித்தியமானது .. ஒரு சிறு எறும்பை போல.. 24 மணி நேரத்தில், ஒருவனுக்கு 24 வகையான இறந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்காலம் இருக்கின்றது ரஷ்யாவின் ஸ்புட்னிக் எனும் விண்கலம், பூமியை ஒரு மணி நேரத்தில் சுற்றியதோ அல்லது 25 நிமிடங்களில் சுற்றியதோ.. நான் சொல்ல நினைப்பது , அவர்கள் பூமியை 25 நிமிடங்களில் சுற்றியுள்ளனர்.. அப்படி என்றால், அந்த ஸ்புட்னிக் மனிதன், ஒரு மணி நேரத்தில், 25 முறை இரவையும் , பகலையும் பார்த்திருக்கிறான்.. மேலே உள்ள வளிமண்டலத்தில் நிகழ்காலம் இறந்தகாலம் என்பதெல்லாம் வேறு எனவே, இந்த இறந்தகாலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்பது உன்னுடைய உடலையும் சுற்றத்தையும் பொறுத்தது உண்மையிலேயே நிகழ், எதிர் மற்றும் இறந்த காலம் என்பது இல்லை,. அனைத்துமே முடிவற்றவை நீ முடிவில்லாதவன் . nityo śāśvato 'yaṁ na hanyate hanyamāne śarīre (BG 2.20). நீ இறந்துபோவதில்லை. எனவே மனிதர்களுக்கு தெரியாது நான் முடிவில்லாதவனா என்று என்னுடைய சாசுவதமான ஈடுபாடு என்ன?என்னுடைய சாசுவதமான வாழ்வு என்பது என்ன இது ஒரு இயல்பான, வாழ்வின் மீதுள்ள மயக்கமே ஆகும் . நான் அமெரிக்கன், நான் இந்தியன் , நான் இவன்,, நான் அது . என்பது.. இது அறியாமை எனவே ஒருவன் கிருஷ்ணருடனான முடிவில்லாத ஈடுபாட்டை தேடிக்கொள்ளவேண்டும் பிறகு அவன் சந்தோஷமாக இருப்பான். நன்றி!!!