TA/Prabhupada 0307 -கிருஷ்ணரை நினைப்பதால் மற்றும் அல்ல, அவருக்காக கைங்கர்யம், உணர்ச்சி படுவதாலையும் கூட
Lecture -- Seattle, October 2, 1968
பிரபுபாதர்: உன் மனம் சொன்னது, "அந்த புதிதாக தொடங்கிய இஸ்கான் கழகத்திற்கு செல்வோம் வா," ஆகையால் உன் கால்கள் உன்னை இங்கே கொண்டு வந்தன. ஆக மனம்... யோசிப்பது, உணர்வது, விரும்புவது, இவை எல்லாம் மனதின் செயல்கள். ஆக மனம் யோசித்து, உணர்ந்து பின்னர் செயல் புரிகிறது. ஆகையால் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும், கிருஷ்ணரை நினைப்பதால் மற்றும் அல்ல, கிருஷ்ணரின் கைங்கர்யம் செய்வதாலையும், கிருஷ்ணருக்காக உணர்ச்சி படுவதாலையும் கூட. அது தான் முழுதான தியானம். அதைத்தான் சமாதி என்பார்கள். உன் மனதால் எங்கேயும் செல்ல முடியாது. மனம் கிருஷ்ணரின் சிந்தனை செய்யும் வகையில், கிருஷ்ணரைப் பற்றி உணர்ச்சி படும் வகையில், கிருஷ்ணரின் கைங்கர்யம் செய்யும் வகையில் ஈடுபடுத்த வேண்டும். அதுதான் முழுதான தியானம்.
இளைஞன் (2): கண்களால் என்ன செய்வது? கண்களை மூடி வைத்திருப்பதா?
பிரபுபாதர்: ஆம், கண்கள் புலன்களில் ஒன்று தான். மனம் புலன்களில் ஆளுனரைப் போல்,. ஆளுனரின் கீழே செயல்புரியும் குறிப்பிட்ட அலுவலர்கள் உள்ளன. ஆகையால் கண்கள், கை, கால், நாக்கு, பத்து புலன்கள், அவை மனதின் கட்டுப்பாட்டில் செயல் படுகின்றன. ஆக புலன்களின் மூலம் மனம் வெளிபடுத்த படுகிறது. ஆகையால் மனதைப் போலவே புலன்களையும் நினைப்பதில், உணர்வதில் ஈடுபடுத்தாவிட்டால், முயற்சி பூரணமடையாது. சஞ்சலம் ஏற்படும். உன் மனம் கிருஷ்ணரின் சிந்தனையில் இருக்கும்பொழுது உன் கண்கள் வேறு ஏதாவது கண்டு கொண்டிருந்தால், சஞ்சலம் அல்லது மாறுபாடு ஏற்படும். ஆகையால்... முதலில் மனதை முழுவதாக கிருஷ்ணரில் ஈடுபடுத்த வேண்டும். அதன் பிறகு எல்லா புலன்களும் கிருஷ்ணரின் தோண்டில் ஈடுபடுத்தப்படும். இது தான் பக்தி.
ஸர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன நிர்மலம் ஹ்ருஷீகேன ஹ்ருஷீகேஷ-ஸேவனம் பக்திர் உச்யதே (CC Madhya 19.170)
ஹ்ருஷீக, ஹ்ருஷீக என்றால் புலன்கள். புலன்களை எப்பொழுது, புலன்களின் முதலாளியின் தொண்டில் ஈடுபடுத்துவீரோ... கிருஷ்ணர், ஹ்ருஷீகேஷ என்று அழைக்கப் படுகிறார், அதாவது புலன்களின் ஈசுவரன் எனப் பொருள். புலன்களின் ஈசுவரன் என்றால், புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த கையைப் போல் தான். இந்த கை சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஆனால் கையில் பக்கவாதம் வந்துவிட்டால் அல்லது கிருஷ்ணர் கையை வலிமையற்றதாக்கினால், உன் கை பயனற்றதாகிவிடும். அதை உன்னால் மீட்டெடுக்க முடியாது.. ஆகையால் நீ உன் கையின் முதலாளி அல்ல. "நான் இந்த கையின் முதலாளி", என்று நீ தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறாய். ஆனால் வாஸ்தவத்தில் நீ முதலாளி அல்ல. கிருஷ்ணரே முதலாளி ஆவார். ஆகையால் எப்பொழுது உன் புலன்கள், அவற்றின் முதலாளியின் தொண்டில் ஈடுபடுகின்றதோ, அப்போது அதை பக்தி தொண்டு என்பார்கள். இப்பொழுது புலன்கள், என் அடையாளங்களில் ஈடுபட்டுள்ளன. "இந்த உடலின் நோக்கம், என் மனைவி அல்லது என் இது அல்லது என் அது, இவற்றின் திருப்தியாகும்.", என்று நான் நினைக்கிறேன். பல விஷயங்கள், "என் நாடு என் இயக்கம்." இதுதான் அடையாளம். ஆனால் ஆன்மீக தளத்துக்கு வந்தபிறகு, "நான் பரமனின் அம்சம்; ஆகையால் எனது செயல்கள் பரமனை திருப்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும்", என்று புரிகிறது. அதுதான் பக்தி.
ஸர்வோபாதி-வினிர்முக்தம் (CC Madhya 19.170)
எல்லா அடையாளங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு. புலன்களை தூய்மைப்படுத்தி அவற்றின் ஈசுவரனின் தொண்டில் ஈடுபடுத்தும் பொழுது, அது, கிருஷ்ண உணர்வில் செயல்படுவது என்ப்படுகிறது. உன் கேள்வி என்ன? ஆக தியானம், அதாவது மனதின் ஈடுபாடு, அவ்வகையில் இருக்க வேண்டும். அப்பொழுது அது பூரணம் அடையும். மற்றபடி, மனம் மிக சஞ்சலமானது. அதை ஓரிடத்தில் நிலைப்படுத்தாவிட்டால்... நிலைப்படுத்துவது என்றால்... யோசிப்பது, உணர்வது மற்றும் ஆசைப்படுவது மனதின் சுபாவம். ஆகையால் மனம் ஏதாவது செய்ய ஆவலாக இருக்கிறது. ஆக மனதிற்கு பயிற்சியளிக்க வேண்டும். அத்தகுப் பயிற்சியினால் உனக்கு கிருஷ்ணரை நினைக்கத் தோன்றும், உனக்கு க்ருஷ்ணருக்காக உணர்ச்சிகள் ஏற்படும் மற்றும் நீ கிருஷ்ணருக்காகவே உழைப்பாய். அப்பொழுதுதான் அது ஸமாதி. அது தான் பூரணமான தியானம்.