TA/Prabhupada 0308 - கிருஷ்ண உணர்வில் செயல்படுவதே ஆன்மாவின் செயல்பாடு
Lecture -- Seattle, October 2, 1968
இளைஞ்ன் (2): மனதிற்கு எப்படி பயிற்சி அளிப்பது ?
பிரபுபாதர்: இது தான் பயிற்சி. தன்னை கிருஷ்ண பக்திச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியதுதான். இது சாத்தியமானது. ஜபிப்பதைப் போல் தான். இந்த பத்து வயதான பையனும் ஈடுபட்டிருக்கிறான். அவன் மனம் ஹரே கிருஷ்ண உச்சரிப்பினால் ஒருமுகப் பட்டிருக்கிறது. அவன் மற்ற புலன்கள், கை ஆகட்டும் கால ஆகட்டும், அவை செயல் புரிகின்றன, ஆடுகின்றன. இவ்வகையில் நம் மனதையும், புலன்களையும் எப்பொழுதும் கிருஷ்ண பக்தியில் ஈடுபடுத்தி பயிற்சி அளிக்க வேண்டும். அதனால் நீ வாழ்வில் பூரணம் அடைவாய். மற்றும் அது எல்லோருக்கும் சாத்தியம். ஒரிடத்தில் உட்கார்ந்து போலியான தியானம் செய்ய அவசியமில்லை. ஹரே கிருஷ்ண ஜபித்த உடனேயே உன் மனம் திசைதிருப்பப் படுகிறது, உடனே கிருஷ்ணர், கிருஷ்ணரின் கற்பித்தல், கிருஷ்ணரின் செயல்கள், அனைத்தும் உன் ஞாபகத்துக்கு வரும். அதற்கு பயிற்சி தேவை.
இளைஞன் (2): நாம் சூரிய ஒளியின் ஒரு கதிரைப் போல் இருப்பதால்...
பிரபுபாதர்: ஆம்.
இளைஞன் (2): நாம் நம்மைப் பற்றியே நினைக்கலாமா?
பிரபுபாதர்: என் கூடாது? நான் தனிப்பட்ட ஒரு நபர்.
இளைஞன் (2): அப்படி நினைக்கும் பொழுது, நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி நினைக்கிறீர்களா?
பிரபுபாதர்: நான் சிறிதாக இருந்தாலும் எனக்கு ஒரு தனித்தன்மை இருக்கிறது. என்னிடம் நினைக்க, உணர, விரும்ப எல்லா சக்தியும் இருக்கிறது. நாம் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம். நாம் தனிப்பட்ட நபர்கள். நீ இங்கே உன் சுய விருப்பத்தினால் வந்திருக்கிறாய். உன்னை யாரும் வற்புறுத்தவில்லை. உனக்கு பிடித்திருந்தால் நீ போகலாம். சிலர் வருவார்கள், சிலர் வரவே மாட்டார்கள், சிலர் தினமும் வருவார்கள். ஏன்? சிறிதாக இருந்தாலும் உனக்கு ஒரு தனித்தன்மை இருக்கிறது. இந்தக் கட்டுண்ட நிலையிலும், நீ இவ்வளவு சுதந்திரமாக இருக்கிறாய். அப்பொழுது ஆன்மாவாக தூய்மையான கட்டற்ற நிலையில் உன்னிடம் எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது என்று உனக்கே புரியாது. நீ எவ்வளவு சிறிதாக இருக்கிறாய் என்பது கணக்கல்ல, ஆனால் நீ ஒரு தெய்வீகப் பொரி. அந்த சிறிய ஆன்மீகப் பொரியை உன்னால் உணரமுடிகிறது அல்லவா.
எந்த மருத்துவராலையும், எந்த மருத்துவ விஞ்ஞானத்தாலையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆன்மா எங்கே என்கிறார்கள், ஆனால் ஆன்மா அங்கே இருக்கிறது. அது ஒரு உண்மை. உடலிலிருந்து ஆன்மா சென்ற உடனேயே, உடல் பயனற்றதாகி விடுகிறது. அந்த முக்கியமான துகளைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம். அது சாத்தியம் இல்லை ஏனெனில் அது மிகவும் சிறிதானது. அதை ஜட கண்களாலையோ, எந்த அணுதரிசனியாலையோ கண்டுபிடிக்க முடியாது. ஆகையால் ஆன்மா இல்லை என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால் என்ன சென்றுவிட்டது என்பதை அவர்களால் விளக்க முடியவில்லை. அந்த சிறிய துகள் கூட இவ்வளவு சக்தி வாய்ந்தது. அது உடலில் இருக்கும்வரை, அதை புத்தம் புதிதாக, அழகாக வைத்திருக்கிறது. மற்றும் அது சென்ற உடனேயே, உடல் அழுக ஆரம்பிக்கிறது. பார்த்தீர்களா. ஒரு ஊசி மருந்தைப் போல் தான். ஒரு சிறிய தானியம் அளவு தான். அது தெம்பாக வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட அது போல தான். அது அவ்வளவு சக்தி வாய்ந்தது. ஆன்மாவின் சக்தி என்னவென்று உனக்கு தெரியவில்லை. அதை நீ கற்கவேண்டும். அது தான் தன்னுணர்வு. இந்த அமைதியான இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்யும் முறை, ஜட உணர்வு கொண்ட வாழ்வின் அடிமட்ட நிலையில் பரிந்துரைக்கப்படுகிறது. "நான் இந்த உடல் தானா?", இதை பற்றி தியானம் செய்து ஆராய்ச்சி செய்வது. "இல்லை. நான் இந்த உடல் அல்ல. நான் இந்த உடலிலிருந்து வேருபட்டவன்." , என்கிற முடிவுக்கு வருவீர்கள்.
பிறகு மேலும் தியானம்: "நான் இந்த உடல் இல்லாவிட்டால், இந்த உடலின் செயல்கள் எப்படி நிகழ்கின்றன?" அந்த சிறிய துகள் இருப்பதால் தான் நிகழ்கின்றன, அது தான் நான். உடல் எப்படி வளர்ச்சி அடைகிறது? அது (ஆன்மா) இருப்பதால் தான். இந்த சிறுவனைப் போல் தான். இப்பொழுது அவனிடம் ஒரு சிறிய உடல் இருக்கிறது. இந்த பையன், இருபத்தி நான்கு வயது வரை ஒரு தடித்த பலமான இளைஞனாக வளர்ந்து விடுவான். இந்த உடல் சென்று வேறு உடல் வந்துவிடும். அது எப்படி சாத்தியம்? ஆன்மா என்கிற அந்த சிறிய துகள் இருப்பதால் தான். ஆனால் அந்த ஆன்மா துகள் அதை எடுத்து விட்டால் அல்லது விலகிப் போனால், பின்னர் இந்த உடலில் வளர்ச்சியோ மாறுதலோ ஏற்படாது. இவை தான் தியானத்தின் பொருளாகும். "நான் இந்த உடல் அல்ல. நான் ஆன்மா." என்கிற புரிதலுக்கு வந்தப்பின், அடுத்தக் கட்டமாக "ஆன்மாவின் செயல்பாடு என்ன?" கிருஷ்ண உணர்வில் செயல்படுவதே ஆன்மாவின் செயல்பாடு. ஆக தற்போதைய யுகத்தில் ஒருவரால் நேரடியாக ஆன்மாவின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றது தானாகவே வரும். இப்போதைய நேரங்களில், தனிமையான இடத்திற்கு சென்று அமைதியாக அமர்ந்து தியானம் செய்வது... இந்த காலத்தில் சாத்தியம் இல்லை. நடக்காத காரியம். செயற்கை முறையில் முயற்சித்தால், அது தோல்வியில் முடியும். ஆகையால் நீ இந்த முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாம ஏவ கேவலம் கலௌ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ கதிர் அன்யதா (CC Adi 17.21)
இந்த கலியுகத்தில், ஹரே கிருஷ்ண ஜபத்தை தவிர தன்னுணர்வு அடைய வேறு எந்த வழியும் இல்லை. அது தான் சாத்தியமானது, வாஸ்தவத்தில் உண்மையானது.