TA/Prabhupada 0318 - சூரிய வெளிச்சத்திற்கு வா

Revision as of 11:30, 25 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0318 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 4.22 -- Bombay, April 11, 1974


ஒரு வைணவன் ஒருபோதும் 'மத்ஸர:' கிடையாது. மத்ஸர: என்றால்... இது ஸ்ரீதர ஸ்வாமியால் விவரிக்கப்பட்டிருக்கிறது. மத்ஸரா பரா உத்கர்ஷணம் அஸஹனம். இந்த பௌதீக உலகம் எப்படி என்றால், உன் சோந்த‌ சகோதரனே வளமானவன் ஆகிவிட்டால், உனக்கு பொறாமையாக இருக்கும், "ஓ, என் சகோதரன் வளமானவன் ஆகிவிட்டானே. என்னால் முடியவில்லையே." இது இயல்பாகவே இருக்கிறது. பொறாமை. ஏனென்றால் அந்த பொறாமை கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது, "ஏன் கிருஷ்ணர் உன்னத அனுபவிப்பாளராக இருக்கவேண்டும்? நானும் சுகமனுபவிப்பேன்." பொறாமை ஆரம்பித்தது. ஆகையால் அனைத்து உலகத்திலும் பொறாமை நிரம்பி இருக்கிறது. எனக்கு உன் மேல் பொறாமை, உனக்கு என் மேல் பொறாமை. இது தான் இந்த பௌதீக உலகின் வேலை. ஆக இங்கு இதை விமத்ஸர: என்றழைக்கப்பட்டிருக்கிறது, அதாவது பொறாமை இல்லாத இருப்பது. கிருஷ்ண பக்தனாக இருந்தால் ஒழிய ஒருவரால் பொறாமை இல்லாமல் எப்படி இருக்கமுடியும்? அவன் பொராமையுள்ளவனாக தான் இருக்கவேண்டும். இது தான் இயல்பு. ஆகையால் ஸ்ரீ பாகவதம் கூறுகிறது,


தர்ம: ப்ரோஜிஹித-கைடவோ அத்ர பரமோ நிர்மத்ஸராணாம், வாஸ்தவம் வஸ்து வேத்யம் அத்ர (SB 1.1.2)


தர்ம... பல வகையான சமய சம்பிரதாயங்கள் இருக்கின்றன. பொறாமை இருக்கிறது. பெயரளவில் இருக்கும் மத சம்பிரதாயம், மிருகங்களின் கழுத்தை வெட்டுவது. எதற்காக? நீ எல்லாவற்றிலும் நாராயணரை பார்க்கும் அளவுக்கு பரந்த மனம் கொண்டவன் என்றால், எதற்காக ஆடு, மாடு அல்லது மற்ற மிருகங்களின் கழுத்தை வெட்டுகிறாய்? அவர்களிடமும் நீ கருணையுடன் இருக்கவேண்டியது தானே. ஆனால் அந்த இரக்க குணம் பக்தனாக இருந்தால் ஒழிய வெளிபடுத்த முடியாது, விமத்ஸர:. நிர்மத்ஸர:. ஆக மத்ஸரதா நிறைந்த, பொராமையுள்ள, அந்த பெயரளவில் இருக்கும் மத சம்பிரதாயம், கைடவ-தர்ம என்றழைக்கப்படுகிறது, மதத்தின் பெயரில் ஏமாற்றுவது. ஆக இந்த கடவுள் உணர்வு என்பது ஏமாற்றும் மதம் அல்ல. இது மிக பரந்த மனம் கொண்டது.


திதிக்ஷவ: காருணிகா: ஸுஹ்ருத: ஸர்வ-பூதானாம் (SB 3.25.21)


இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் எல்லோரும் அனைவருடன் நட்புடன் இருக்க விரும்புவது. அவ்வாறு ஒரு கிருஷ்ண உணர்வு கொண்ட நபர் உணராவிட்டால், எதற்காக அவன் இவ்வளவு கஷ்டப்பட்டு கிருஷ்ண உணர்வை உலகம் முழுவதும் பிரசாரம் செய்யவேண்டும்? விமத்ஸர:. ஒருவர் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கிருஷ்ண உணர்வு மிகச்சிறந்தது, ஆகையால் அதை அனைவரும் சுவைக்க வேண்டும், அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும். கிருஷ்ண உணர்வு என்றால் கடவுள் உணர்வு. கடவுள் உணர்வின் குறைவால் மக்கள் துன்பத்தில் இருக்கிறார்கள். அது தான் துன்பத்தின் காரணம். க்ருஷ்ண-பஹிர்முக ஹனா போக வாஞ்சா கரே நிகடஸ்த மாயா தாரெ ஜாபடியா தரே (ப்ரேம-விவர்த) இது தான் வழி.


கிருஷ்ணரை மறந்த உடனேயே அங்கு மாயை இருக்கிறது. வெயிலும் நிழலும் கூடவே இருக்கும் போல் தான். சூரிய வெளிச்சத்தை நீ விட்டு சென்றால், நீ‌ நிழலில் அதாவது இருளுக்குள் வருகிறாய். மற்றும் நீ இருளை‌ விட்டு சென்றால், நீ சூரிய வெளிச்சத்திற்கு வருகிறாய். அதுபோலவே, நாம் கிருஷ்ண உணர்வை ஏற்க மறுத்தால், நமக்கு மாயை உணர்வை ஏற்க வேண்டியிருக்கும். மற்றும் நாம் மாயை உணர்வை ஏற்க மறுத்தால் நாம் கிருஷ்ண உணர்வை ஏற்க வேண்டும். அடுத்தடுத்து. ஆக கிருஷ்ண உணர்வு என்றால் இருளான உணர்வில் இல்லாமல் இருப்பது. தமஸி மா ஜ்யோதிர் கம. இது தான் வேதத்தின் கற்பித்தல், "இருளில் இருக்காதே." மற்றும் என்ன அந்த இருள்? இருள் என்பது வாழ்வின் அடிப்படையாக உடலை கருதுவது.