TA/Prabhupada 0335 - யோகி ஆவதற்கான கல்வியை அளிக்கிறது

Revision as of 11:11, 26 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0335 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.24 -- Hyderabad, November 28, 1972

ஒரு பிராமணன் கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்வது என்னவென்றால்: "என் அன்பு நாதரே, நான் என் புலன்களுக்கு அடிமை ஆகிவிட்டேன்." இங்கே எல்லோரும் தனது புலன்களின் அடிமை தான். அவர்கள் புலன்களால் இன்பம் பெற விரும்புகிறார்கள். இன்பம் பெறுவதல்ல - அவர்கள் புலன்களுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள். என் நாக்கு சொல்லும், "தயவுசெய்து என்னை இந்த உணவகத்துக்கு எடுத்து சென்று இந்த கோழி குழம்பை தா." நானும் உடனேயே செல்வேன். இன்பம் பெற அல்ல, என் நாக்கு இட்ட ஆணைக்கு பணியாற்ற. ஆகையால் பெயரளவில் இருக்கும் இன்பத்தின் பெயரில் நாம் எல்லோரும் புலன்களுக்கு சேவை செய்கிறோம். சமஸ்கிருதத்தில் இதற்கு கோ-தாஸ எனப்பெயர். கோ என்றால் புலன்கள். ஆக நீ கோஸ்வாமி ஆனால் ஒழிய, உன் வாழ்க்கை கெட்டுக் குட்டிசுவர் ஆகிவிடும். கோஸ்வாமி. நீ உன் புலன்களின் அதிகாரத்தில் இருக்கமுடியாது. நீ தான் புலன்களை அதிகாரம் செய்யவேண்டும். "இப்போ என்னை அந்த உணவகத்துக்கு எடுத்து செல், அல்லது ஒரு சிகரெட் தா" என்று நாக்கு சொன்னவுடன், "கிடையாது. சிகரெட்டும் கிடையாது, உணவகமும் கிடையாது, வெறும் கிருஷ்ண பிரசாதம் தான்," என நீ பதிலளித்தால், நீ கோஸ்வாமி ஆவாய். அப்போது தான் நீ கோஸ்வாமி. இது தான் விசேஷம், ஸனாதன. ஏனென்றால் நான் கிருஷ்ணரின் நித்திய சேவகன். ஆக இதற்கு ஸனாதன-தர்மம் எனப் பெயர். அதை நாம் அஜாமிள-உபாக்யானத்தில் விவரித்திருக்கிறோம். இந்த நிலையை அடைய முடியும்.


தபஸா ப்ரம்மச்சர்யேன ஸமேன தமேன ஷௌசேன த்யாகேன யமேன நியமேன (SB 6.1.13)


ஆக வேத இலக்கியம் முழுவதும், புலன்களை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை போதிக்க தான் இருக்கிறது. யோக. யோக இந்த்ரிய-ஸம்யம்ய. அது தான் யோக. யோக என்றால் ஏதோ மாயவித்தை காட்டுவது இல்லை. இது மிகச்சிறந்த அதிசயம். நீ யோக பயிற்சி செய்திருந்தால்... நான் யோகி என்றழைக்கப்படும் பல நபர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் அவர்களால் தன் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. புரிகிறதா. புகைப்பிடித்தல் மற்றும் பல விஷயங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. அப்படி இருந்தும் அவர்கள் யோகிகளாக சுற்றி திரிகிறார்கள். எப்படிப்பட்ட யோகி இவர்கள்? யோகி என்றால் தன் புலன்களை கட்டுப்படுத்திருப்பவன். ஸமேன தமேன ப்ரம்மச்சர்யேன. பகவத்-கீதையில் யோக முறைகளை பற்றி இதுவெல்லாம் விவரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு, அர்ஜுனர் இந்த யோக, அதாவது புலன்களை கட்டுப்படுத்துவதைப் பற்றி கேட்டறிந்தார். அவர் ஒரு குடும்பஸ்தர். ராஜ குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் அரசியல்வாதியாகவும் இருந்தார். அவர் ராஜ்யத்தை கைப்பற்றுவதற்காக சண்டையில் ஈடுபட்டிருந்தார். ஆக அர்ஜுனர் நேரடியாக கேட்டார், "என் அன்பு கிருஷ்ணா, எனக்கு யோகி ஆவது சாத்தியம் அல்ல. இது மிகவும் கடினமான காரியம். நீ என்னை தனிமையான, புனிதமான ஒரு இடத்தில் உட்கார்ந்து, முதுகை செங்குத்தாக வைத்து, வெறும் மூக்கு நுனியை பார்த்திருக்க கேட்கிறாய், மற்றும் பல விஷயங்கள்... ஆனால் இது எனக்கு சாத்தியம் அல்ல." அவர் வெளிப்படையாக மறுத்தார். ஆகையால் கிருஷ்ணர், தன்‌ நண்பனும் பக்தனுமான அர்ஜுனருக்கு ஊக்கமூட்டுவதற்காக... அர்ஜுனர் மனமுடைந்து போவதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அர்ஜுனர் தனக்கு இது சாத்தியம் அல்ல என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். வாஸ்தவத்தில் அவர் ஒரு அரசியல்வாதி. அவருக்கு யோகி ஆவது எப்படி சாத்தியம் ஆகும்? ஆனால் நம் அரசியல்வாதிகள் யோகம் செய்வதாக விளம்பரம் செய்கிறார்கள். எப்படிப்பட்ட யோகம்? அவன் அர்ஜுனரைவிட சிறந்தவனாகிவிட்டானா? அதுவும் இந்த தாழ்ந்த காலத்தில்? ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு சாதகமான சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது, இவ்வளவு சாதகமற்ற, மோசமான சூழ்நிலையில் உனக்கு ஒரு போலியான யோகி ஆக விருப்பமா? அது சாத்தியம் அல்ல.


கிருதே யத் த்யாயதோ விஷ்ணும் (SB 12.3.52)


யோக என்றால் விஷ்ணுவை பற்றி சிந்தனை செய்வது. அது ஸத்ய-யுகத்தில் சாத்தியமாக இருந்தது. வால்மீகியைப் போல் தான். அவர் அறுபது ஆயிரம் ஆண்டுகளுக்கு தியானம் செய்தப் பிறகு பக்குவ நிலையை அடைந்தார். இங்கே யார் அறுபது வருடங்கள் வரை வாழப் போகிறீர்கள்? ஆகையால் இது சாத்தியம் அல்ல. ஆகையால் அவருக்கு ஊக்கமூட்டுவதற்காக, கிருஷ்ணர்... யோகத்தின் உண்மையான நோக்கத்தை அர்ஜுனரிடம் அவர் விவரித்தார்,


யோகினாம் அபி ஸர்வேஷாம் மத்-கதேனாந்தர்-ஆத்மனா ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத (BG 6.47)


மேம்பட்ட யோகி யார்? யோகினாம் அபி ஸர்வேஷாம் மத்-கதேனாந்தர்-ஆத்மனா. என்னை அதாவது கிருஷ்ணரை எப்பொழுதும் நினைத்திருப்பவன்." ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மக்களுக்கு மிகச்சிறந்த யோகி ஆவதற்கான கல்வியை அளிக்கிறது. கிருஷ்ணரை நினைத்திருங்கள். ஹரே க்ருஷ்ண, ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண க்ருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. இது‌ போலியான விஷயம் அல்ல. இது உண்மையானது. நீ யோகி ஆகலாம். நீ ப்ரம்மன் ஆகலாம்.


ப்ரம்ம-பூயாய-கல்பதே. மாம் ச யோ (அ)வ்யபிசாரேண பக்தி-யோகேன ஸேவதே ஸ குணான் ஸமதீத்யைதான் ப்ரஹ்ம-பூயாய கல்பதே (BG 14.26)


ஆக தன்னுணர்வை அடைந்த ஒருவனுக்கு, ப்ரம்ம-பூத (SB 4.30.20)


ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா (BG 18.54)


பின்னர் அடைவதற்கு என்ன மிச்சம் இருக்கிறது? அது தான் வாழ்க்கையின் உன்னதமான குறிக்கோள், அஹம் ப்ரம்மாஸ்மி ஆவது. வேத இலக்கியங்கள் நமக்கு இதை தான் போதிக்கின்றன "நீ இந்த ஐட இயற்கையுடையவன் அல்ல. நீ ப்ரம்மன்." கிருஷ்ணர் பர-ப்ரம்மன் மற்றும் நாம் கீழ்த்தர ப்ரம்மன். நித்ய-கிருஷ்ண-தாஸ. நாம் சேவகனான ப்ரம்மன். அவர் யஜமானான ப்ரம்மன். நான் ஒரு சேவகனான ப்ரம்மன் என்று புரிந்துக் கொள்ளவதற்கு எதிராக நான் தான் எஜமானான ப்ரம்மன் என்று நினைக்கிறேன். அதுவும் ஒரு மாயை தான். அது தவறான தோற்றம்.