TA/Prabhupada 0485 - கிருஷ்ணர் என்த லீலையை நிகழ்த்தினாலும் அது பக்தர்களால் உற்சவமாக கொண்டாடப்படுகிறது
Lecture -- Seattle, October 18, 1968
விருந்தினர்: உங்களால் எனக்கு இது எப்படி துவங்கியது மற்றும் இதன் மகிமையைப் பற்றி விளக்க முடியுமா, இந்த ஜகன்னாத ரத உற்சவம் என்பார்களே.
பிரபுபாதர்: ஜகன்னாத உற்சவத்தின் மகிமை என்னவென்றால், கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்ட பிறகு. கிருஷ்ணர் தன் வளர்ப்புத் தந்தை நந்த மஹாராஜரால் வளர்க்கப் பட்டார். பிறகு அவருக்கு பதினாறு வயது ஆனவுடன், அவர் உண்மையான தந்தை வஸுதேவர் அவரை கூட்டிச் சென்றார். அவர்கள்ர விருந்தாவனத்தை விட்டு சென்றார், கிருஷ்ணரும் பலராமரும், இரண்டு சகோதரர்கள் மற்றும்... அவர்கள் குடியிருப்பிடம்... அவர்கள் ராஜ்யம் த்வாரகாவில் இருந்தது. குருக்ஷேத்ரத்தில் - குருக்ஷேத்திரம் எந்த காலத்திலும் தர்ம-க்ஷேத்திரம், தீர்த்த யாத்திரை செல்லுமிடம் - அப்போது சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ இருந்தது, மேலும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து நிறைய மக்கள் குளிக்க வந்திருந்தார்கள். அதுபோலவே கிருஷ்ணர், பலராமர் மற்றும் அவர்களின் தங்கை சுபத்ரா, அவர்களும் ராஜ பரம்பரைக்குத் தகுந்த வகையில் வந்தார்கள். ஒரு அரசனைப் போலவே, பல படை வீரர்களுடன், பல... ஆக விருந்தாவன வாசிகள் கிருஷ்ணரை சந்தித்தார்கள், குறிப்பாக கோபியர்கள் கிருஷ்ணரை சந்தித்தார்கள், பிறகு அவர்கள் புலம்பினார்கள் "கிருஷ்ணா, நீ இங்கே இருக்கிறாய், நாங்களும் இங்கே இருக்கிறோம், ஆனால் இது வேறு இடம். நாம் விருந்தாவனத்தில் இல்லை." அவர்கள் எவ்வாறு புலம்பினார் மற்றும் கிருஷ்ணர் எப்படி அவர்களை சமாதானப்படுத்தினார் என்பது ஒரு நீண்ட கதை. இது பிரிவின் உணர்வு. இவ்வாறு விருந்தாவன வாசிகள் கிருஷ்ணரிடமிருந்து பிரிவை அனுபவித்தார். அதுனால் தான் இது... கிருஷ்ணர் ரதத்தின் மீது வருவதை, ரத யாத்திரை என்பார்கள். இது தான் ரத-யாத்திரையின் சரித்திரம். ஆக கிருஷ்ணர் என்த லீலையை நிகழ்த்தினாலும் அது பக்தர்களால் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. ஆக அது தான் ரத-யாத்திரை.