TA/Prabhupada 0408 - உக்ர கர்மா என்றால் மூர்க்கத்தனமான காரியங்கள்

Revision as of 12:23, 6 November 2019 by MaliniKaruna (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0408 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Cor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Cornerstone Laying -- Bombay, January 23, 1975 தொழிற்சாலைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் தொழிற்சாலைகள் பகவத் கீதையில் உக்கிர கர்மா என்று குறிப்பிடப்பட்டுள்ளன உக்ர கர்மா என்றால் மூர்க்கத்தனமாக செய்யப்படும் காரியங்கள் வாழ்வாதாரத்திற்காக நாம் நம்மை பேணிக் காத்தல் வேண்டும் ஆஹார-நித்ரா-பய-மைதுனம் இவையே இந்த உடலின் பௌதீக உடலின் முக்கிய தேவைகள் இதற்குத்தான் கிருஷ்ணர் சொல்கிறார் அன்நாத் பவந்தி பூதானி (BG 3.14) அன்னம் என்பது நமக்குத் தேவைப்படும் உணவு தானியங்களை குறிக்கும். அன்னாத் பவந்தி பூதானி அந்த உணவு தானியங்களை விவசாயத்தின் மூலம் நாம் எளிதாக உற்பத்தி செய்யலாம் மற்றுமொரு இடத்தில் கிருஷ்ணர் சொல்கிறார், க்ருஷி-கோ-ரக்ஷ்ய-வாணிஜ்யம் வைஷ்ய-கர்ம ஸ்வபாவ-ஜம் (BG 18.44) நாம் நம்மைப் பேணுவதற்குப் போதுமான உணவு தானியங்களை உற்பத்தி செய்ய முடியும் உலகம் முழுவதற்குமே அதற்கு போதுமான நிலம் உள்ளது நான் குறைந்தது 14 முறை உலகை சுற்றி வந்திருக்கிறேன் கடந்த 8 ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளேன் அவற்றில் சில உட்பகுதிகள் கூட அடங்கும் போதுமான நிலம் இருப்பதை நான் கண்டிருக்கிறேன் முக்கியமாக ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு பத்து மடங்கு அதிக மக்கள் கூட உண்டு வாழும் அளவுக்கு போதுமான உணவு தானியங்களை நம்மால் உற்பத்தி செய்ய முடியும் பத்து மடங்கு. அதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது ஆனால் இதில் சிரமம் என்னவென்றால் "இது என் நிலம்" என்று நாம் வரையறை செய்து வைத்துள்ளோம் சிலர், "இது அமெரிக்கா என்னுடைய நாடு" , "ஆஸ்திரேலியா என்னுடைய நாடு" "இது ஆபிரிக்கா என்னுடைய நாடு," "இந்தியா என்னுடைய நாடு" என்கின்றனர். இந்த நான் எனது ஜனஸ்ய மோஹோ ’யம் அஹம் மமேதி (SB 5.5.8).நான் எனது என்ற எண்ணமே மாயை எனப்படும் "நான் இந்த உடல், இது என்னுடைய சொத்து" இதுவே மாயை இந்த மாயை, இந்த மாயை எனும் தட்டில் நாம் நிற்கும்வரை விலங்குகளுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம இஜ்ய-தீ: யத்-தீர்த-புத்தி: ஸலிலே ந கர்ஹிசிஜ் ஜனேஷ்வபிஜ்ஞேஷு ஸ ஏவ கோ-கர: (SB 10.84.13)கோ என்றால் பசு கரக என்றால் கழுதை வாழ்வை பௌதீக உடல் என்னும் நிலையிலேயே பார்ப்பவர் அகம் மமேதி (SB 5.5.8) அவர்கள் இந்தப் பசுக்களையும் கழுதைகளையும் விட அதாவது விலங்குகளை விட சிறந்தவர்கள் அல்லர். இதுவே தொடர்கிறது உங்களது நேரத்தை அதிகமாக இது எடுக்காது நான் உங்களை சமாதானம் செய்ய முயற்சிக்கிறேன் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் குறிக்கோள் என்ன கிருஷ்ண பக்தி இயக்கத்தின் குறிக்கோள் ஆனது மனித சமுதாயத்தை விலங்குகள், பசுக்கள் மற்றும் கழுதைகள் ஆவதிலிருந்து காப்பாற்றுவது இதுவே இந்த இயக்கம். தங்களுக்கென்று ஒரு நாகரீகத்தை அவர்கள் ஏற்படுத்தி உள்ளனர் பகவத்கீதையில் குறிப்பிட்டுள்ளது போல விலங்குகளோ அல்லது அசுர நாகரீகமுமோ அசுர நாகரிகம் அதன் தொடக்கம் அசுரக் கலாச்சாரத்தில் தங்களை எவ்வண்ணம் வழிநடத்திச் செல்வது என்பது அவர்களுக்கே தெரியாது பிரவ்ருத்தி நிவ்ருத்தி எனப்படும் வாழ்க்கையின் முழுமை பெற்ற நிலையை அடைவதற்கு எதை விடுப்பது என்றும் தெரியாது சாதகமானது சாதகமல்லாதது எது என்றும் தெரியாது மனித வாழ்க்கையில் அனைவருக்கும் தெரியும், "இது எனக்கு சாதகமானது, இது எனக்கு சாதகம் இல்லாதது" அசுர ஜனா அசுர ஜனங்கள் ஆகப்பட்டவர்களுக்கு இது தெரியாது தனக்கு சாதகமானது எது சாதகம் இல்லாதது யாது என்று ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜனா ந விதுர் ஆஸுரா: ந ஷௌசம் நாபி சாசாரோ தூய்மையும் இல்லை நன்னடத்தையும் இல்லை ந ஸத்யம் தேஷு வித்யதே அவர்கள் வாழ்வில் உண்மையும் இல்லை இதுவே அசுரத் தன்மை நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம் அசுரர்கள் அசுர கலாச்சாரம் அசுர நாகரிகம் இதுவே அதன் தொடக்கம் ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜனா ந விதுர் ஆஸுரா: ந ஷௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே (BG 16.7)

சத்தியம் என்பதில் உண்மை இருக்கிறது முதல் தரமான வாழ்க்கை என்பது பிராமண வாழ்க்கை சத்யம் சௌசம் தபோ ..அதன் தொடக்கம் சத்தியம் அசுர வாழ்க்கை என்பது சத்தியமும் இல்லை உண்மையும் இல்லை முதல் தரமான வாழ்க்கை என்பது மனித சமுதாய வாழ்க்கை ப்ராமணர்கள் என்றாலே சத்யம் சௌசம் தபோ திதிக்ஸ ஆர்ஜவம் ஆஸ்திக்யம் ஜ்ஞானம் விஜ்ஞானம் இதுவே முதல் தரமான வாழ்க்கை உன்னத தரத்திலான மனிதர்களை உருவாக்குவதே நமது கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கமாகும் ஸத்யம் ஷௌசம் தபோ ஷம: தம: திதிக் இவற்றுடன் கூடிய முதல் தரமான மனிதர்கள் இதுவே தெய்வீகமான கலாச்சாரம் இந்த தெய்வீக நாகரிகத்தை உலகம் முழுவதற்கும் இந்தியாவால் தரமுடியும் இதுவே இந்தியாவின் தனித்தன்மை ஏனெனில் இந்தியாவை தாண்டிய பிற நாடுகளில் அவர்கள் வெறும் அசுர ஜனா மற்றும் உக்ர கர்மா தொழிற்சாலைகள் மற்றும் பிற உக்ர கர்மா மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்திருக்கிறது இந்த வழக்கத்தில் மக்கள் நிச்சயமாக சந்தோஷமாக இருக்க மாட்டார்கள் இது மிக விவரமாக பகவத்கீதையின் 16ஆம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது துஷ்பூர அகங்க் அவர்கள் ஆசைகள் பௌதிக வளர்ச்சியினால் திருத்தி அடையாது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் இதை மறந்து விடுகின்றனர் அதனால்தான் நாம் இந்த பாம்பே நகரத்தை தேர்வு செய்தோம் பாம்பை நகரம் மிகச்சிறந்த நகரம் மிகவும் முன்னேற்றம் அடைந்தது இந்தியாவிலேயே தலைசிறந்தது இங்கு மக்களும் மிக இனிமையானவர்கள். கடவுள் சிந்தனை கொண்டவர்கள் மேலும் செல்வந்தர்கள் சிறந்தவைகளை விரைவில் பற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் அதனால் தான் பாம்பே சென்டரை தொடங்கிட நான் எண்ணினேன் கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்புவதற்கு என்னுடைய முயற்சியில் பல இடையூறுகள் ஏற்பட்டாலும் இது கிருஷ்ணனின் அலுவல் இது வெற்றி பெற்றே தீரும்.. எனவே இன்று அஸ்திவாரம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இரண்டு வருடங்கள் முன்பு நடந்தேறி உள்ளது ஆனால் இதற்கு பல இடையூறுகள் அசுர ஜனங்களிடம் இருந்துவந்தது தற்போது எப்படியோ இந்த இடையூறு களிலிருந்து நமக்கு சிறு விமோசனம் கிடைத்துள்ளது எனவே நாம் இந்த அடிக்கல்லை இந்த சிறப்பான நாளில் நடத்துகின்றோம். நீங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி