TA/Prabhupada 1078 - இருபத்து-நான்கு மணி நேரமும் மனத்தளவிலும் அறிவுப்பூர்வமாகவும் பகவானை நினைத்துக் கொண்
660219-20 - Lecture BG Introduction - New York
முழுமுதற் கடவுளிடம் உங்களுக்கு ஆழமான அன்பு இருக்குமேயானால், நமது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போதே அவரை பற்றி எண்ணிக் கொண்டிருக்கு முடியும். ஆகையால் அத்தகைய நேரத்தை நாம் விருத்தி செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக, அர்ஜுனர் எப்பொழுதும் பகவானை நினைத்துக் கொண்டிருந்தார். அவரால், கிருஷ்ணரை இருபத்தி-நான்கு மணி நேரத்தில் ஒரு வினாடி கூட மறக்க முடியவில்லை. கிருஷ்ணரின் நிரந்தரமான நண்பர். அதே நேரத்தில், ஒரு போர் வீரன். கிருஷ்ணர் அர்ஜுனரிடம், போரை விட்டுவிடும்படி அறிவுரையோ, காட்டிற்குச் சென்று, இமயமலைக்குச் சென்று தவம் புரியவோ கூறவில்லை. யோக பயிற்சி பற்றி அர்ஜுனருக்கு அறிவுரை கூறிய போது, அர்ஜுனர் மருத்துவிட்டார், அதாவது "இந்த முறை எனக்கு ஏற்றதல்ல." ஆனால் பகவான் கூறினார், யோகினாமபி சர்வேசாம் மத்கதேனாந்தராத்மனா (ப.கீ. 6.47). மத்கதேனாந்தராத்மனா ஸ்ரத்தவான் பஜதேயோமாம் ஸமேயுக்த தமோ மத: ஆகையால் முழுமுதற் கடவுளையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர், அவர் மிகச் சிறந்த யோகி ஆவார், அவர் மிக உயர்ந்த ஞானியும், அவரே உன்னதமான பக்தருமாக அதே சமயத்தில் ஆகிறார். பகவான் அறிவுரை கூறுகிறார் அதாவது தஸ்மாத்ஸர்வேஷூ காலேஷூ மாமனுஸ்மர யுத்ய ச (ப.கீ.8.7)). "ஒரு ஷத்திரியராக அவர் போர் தொழிலை விடக்கூடாது. அவர் போர் புரிந்தேயாக வேண்டும். அதே சமயத்தில் என்னை எப்போதும் நினைவில் கொள்ள முயற்சி செய்தால், பிறகு அது சாத்தியமாகும்." அந்த காலே மாமேவ ஸ்மரன் (ப.கீ.8.5)), பிறகு மரண நேரத்திலும் என்னை நினைவில் கொள்வது சாத்தியமாகும்." மய்யர்ப்பித மனோபுத்திர் மாமேவைஷ்யஸ்ய ஸம்சய:. சந்தேகமேயில்லை என்று அவர் மறுபடியும் கூறுகிறார். ஒருவர் பகவானின் சேவையில் முழுமையாக சரணடைந்திருந்தால், தெய்வீகமான அன்பு நிறைந்த சேவையில், மய்யர்ப்பித மனோபுத்திர் (ப.கீ.8.7)). ஏனென்றால் நாம் உண்மையிலேயே நமது உடலால் உழைப்பதில்லை. மனத்தாலும் அறிவாலேயுமே உழைக்கிறோம். ஆகவே நம் அறிவும் மனமும் எப்பொழுதும் முழுமுதற் கடவுளின் சிந்தினையில் இருந்தால், பிறகு தானாகவே நம் புலன்களும் பகவானின் சேவையில் ஈடுபடுகின்றன. இதுவே பகவத்-கீதையின் இரகசியம். எவ்வாறு கிருஷ்ணர் சிந்தனையில் ஆழ்ந்திருப்பது என்னும், இந்த கலையை ஒருவர் அறிந்திருக்க வேண்டும், மனத்தாலும் அறிவாலும் இருபத்து-நான்கு மணி நேரமும் பகவானை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். இது ஒருவரை தானே பகவானின் ராஜ்யத்திற்குச் செல்ல உதவி புரியும் அல்லது ஆன்மீக சூழ்நிலையில் இந்த ஜட உடலை விட்டு பிரியும் பொழுது. நவீன கால விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள், சந்திர கொளை சென்றடைய, ஆனால் இதுவரை அவர்களால் நெருங்க முடியவில்லை. ஆனால் இங்கு பகவத்-கீதையில், இங்கு ஒரு கருத்துரை உள்ளது. ஒருவேளை ஒரு மனிதர் மேலும் ஐம்பது வருடங்களுக்கு வாழ்ந்தால், ஒருவரும் தன்னை ஆன்மீக சிந்தனையில் மேன்மைப் பெற ஐம்பது வருடங்களாக முயற்சிக்கவில்லை. அது மிகவும் சிறந்த சிந்தனை. இருப்பினும் பத்து அல்லது ஐந்து வருடங்களாக ஒருவர் உளமார பயிற்சி செய்ய முயற்சித்தால், மய்யர்ப்பித மனோபுத்திர் (ப.கீ.8.7)), இது வெறுமனே முயற்சி தான். மேலும் அந்த பயிற்சி பக்தி மார்க்கத்தினால் மிக எளிதாக சாத்தியமாகும், ஸ்ரவணம். ஸ்ரவணம். மிகவும் எளிமையான முறை கேட்பது. ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத - ஸேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம - நிவேதனம் (ஸ்ரீ. பா 7.5.23). இந்த ஒன்பது செயல்முறை. ஆகையால் மிகவும் எளிமையான முறை வெறுமனே கேட்பது.