TA/Prabhupada 0017 - ஆன்மீக சக்தியும் பௌதிக சக்தியும்
Lecture on Sri Isopanisad, Mantra 1 -- Los Angeles, May 2, 1970
ஆக இரண்டு சக்திகள் இந்த பெளதிக உலகில் செயல்பட்டு வருகின்றன: ஆன்மீக சக்தி மற்றும் ஜட சக்தி. ஜட சக்தி என்றால் இந்த எட்டு விதமான ஜட மூலகங்கள். பூமிர் ஆபோ (அ)'நலோ வாயு: (பகவத்-கீதை 7.4) நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, மற்றும் அகங்காரம். இவை அனைத்தும் ஜடமானவை. அதுபோலவே, மேலும், மேலும், மேலும், மேலும், நுட்பமானவை, மற்றும் மேலும், மேலும், மேலும் ஸ்தூலமானவை. உதாரணத்திற்கு, தண்ணீர் நிலத்தைவிட நுட்பமானது, மேலும் நெருப்பு தண்ணீரைவிட நுட்பமானது, அதன்பின் காற்று நெருப்பைவிட நுட்பமானது, வானம் அல்லது ஆகாயம் காற்றைவிட நுட்பமானது. அதேபோலவே, அறிவுத்திறன் ஆகாயத்தைவிட நுட்பமானது, அல்லது மனம் ஆகாயத்தைவிட நுட்பமானது. மனம்... உங்களுக்கு தெரியும், நான் பல முறை உதாரணம் கொடுத்திருக்கிறேன்: மனதின் வேகம். ஒரு விநாடிக்குள் பல ஆயிரம் மைல்கள் தூரம் நீங்கள் செல்லலாம். ஆக மேன்மேலும் நுட்பமானதாகும் பொழுது, அது அதிகச் சக்திவாய்ந்ததாகிவிடுகிறது. அதுபோலவே, இறுதியில், நீங்கள் ஆன்மீகப் பகுதிக்கு வரும்பொழுது, மேன்மேலும் நுட்பமான, அனைத்திற்கும் மூலமானது, ஓ, அது மிகவும் சக்திவாய்ந்தது. அதுதான் ஆன்மீக சக்தி. அது பகவத் கீதையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆன்மீக சக்தி என்பது என்ன? அந்த ஆன்மீக சக்திதான் இந்த உயிர்வாழி. அபரேயம் இதஸ் து வித்தி மே ப்ரக்ருதிம் பரா (பகவத்-கீதை 7.5). கிருஷ்ணர் கூறுகிறார், "இவைகள் ஜட சக்திகள். இதற்கு அப்பால் வேறொரு, ஆன்மீக சக்தி உள்ளது." அபரேயம். அபரா என்றால் தாழ்வான. அபரேயம். "விவரிக்கப்பட்ட இந்த பெளதிக மூலகங்கள் எல்லாம் தாழ்ந்த சக்தியைச் சேர்ந்தது. மற்றும், என் அன்பிற்குரிய அர்ஜுனா, இதற்கு அப்பால் உயர் சக்தி ஒன்று இருக்கிறது." அது என்ன? ஜீவ-பூத மஹா-பாஹொ: "இந்த உயிர்வாழிகள் (ஜீவாத்மாக்கள்)." அவைகளும் சக்தியே. நாம் உயிர்வாழிகள், நாமும் சக்திதான், ஆனால் உயர்வான சக்தி. எப்படி உயர்வானது? ஏனென்றால் யயேதம் தார்யதே ஜகத் (பகவத்-கீதை 7.5). அந்த உயர் சக்தி தாழ்ந்த சக்தியைக் கட்டுப்படுத்துகிறது. ஜடப் பொருட்களுக்கு சக்தி கிடையாது. பெரிய விமானம், ஒரு நல்ல இயந்திரம், அது வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது, ஜடப் பொருட்களால் செய்யப்பட்டது. ஆனால் ஆன்மீக சக்தி, அந்த பைலட், அங்கு இல்லாமல், அது பயனற்றது. ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அந்த ஜெட் விமானம், விமான நிலையத்திலேயே நிற்கும். அந்த மிகச்சிறிய துகளைப்போன்ற ஆன்மீக சக்தி, அந்த கப்பலோட்டி, வந்து அதை தோடும்வரை அந்த விமானம் பறக்காது. ஆக இறைவனைப் புரிந்து கொள்வதில் என்ன கஷ்டம்? இவ்வளவு தெளிவான விஷயம், அதாவது இந்த பெரிய இயந்திரமே... பல பெரிய இயந்திரங்கள் இருக்கின்றன, அவைகளால் ஆன்மீக சக்தியின் தொடர்பு இல்லாமல் நகரமுடியாது. ஒரு மனிதன் அதாவது ஓர் உயிர்வாழி தேவை. இந்த முழு ஜட சக்தியும், எந்த கட்டுப்பாடும் இல்லாமல், தானே செயல்படுகிறது என்று எப்படி நீங்கள் எதிர்ப்பார்க்கலாம்? அப்படிப்பட்ட விவாதத்தை எப்படி முன் வைப்பீர்கள்? அது சாத்தியமே இல்லை. ஆக குறைந்த அறிவுத்திறன் உடையவர்களால் முழுமுதற் கடவுளால் எப்படி இந்த ஜட சக்தி கட்டுப்படுத்தப் படுகின்றது என்பதை புரிந்துகொள்ள முடியாது.