TA/Prabhupada 0036 - நம் வாழ்க்கையின் குறிக்கோள்
Lecture on BG 2.1-11 -- Johannesburg, October 17, 1975
ஆக நாம் இந்த பௌதிக பிரச்சனையால் தடுமாற்றம் அடையும் பொழுது, என்ன செய்வது - செய்வதா, அல்லது செய்யாமல் இருப்பதா, இதுதான் அதற்கு எடுத்துக் காட்டு - அந்த நேரத்தில் நாம் குருவை அணுக வேண்டும். அந்த போதனைத்தான் இங்குள்ளது, நாம் பார்க்கிறோம். ப்ரக்சாமி தவாம் தர்ம-சம்மூடா-சீதாஹ நாம் குழப்பமான நிலையில் இருக்கும் பொழுது, எது மதச்சார்ந்தது எது இல்லாதது என்பதை நாம் வேறுபடுத்துவது இல்லை, நம் நிலைப்பாட்டை சரியான முறையில் பயன் படுத்துவதில்லை. அதுதான் கார்ப்பண்ய தோஷோபஹத-ஸ்வாபாவஹ (பகவத் கீதை 2.7). குருவின் தேவை அந்த நேரத்தில் ஏற்படுகிறது. அதுதான் வேத அறிவுரை. தத் விக்ஞாநார்த்தம் ஸ குரமேவா பிகச்சேத் க்ஷரோத்திரியம் பிரம்ம-நிஷ்டம் (பகவத் கீதை 1.2.12). இதுதான் கடமை. இதுதான் நாகரிகம், அதாவது நாம் வாழ்க்கையின் பல பிரச்சனைகளை சந்திக்கிறோம். அது இயற்கையே. இந்த பௌதிக உலகில் பௌதிக உலகமே வாழ்க்கையின் பிரச்சனையாகும். பதம் பதம் யத் விபதாம் (ஸ்ரீமத் பாகவதம் 10.14.58). பௌதிக உலகம் என்றால் ஒவ்வொரு அடியிலும் அங்கே ஆபத்து இருக்கும். அதுதான் பௌதிக உலகம். ஆகையினால் நாம் குருவின் வழிகாட்டை பெறவேண்டும், ஆசிரியர்களிடமிருந்து, ஆன்மிக குருவிடமிருந்து எவ்வாறு முன்னேற்றம் அடைவது, ஏனென்றால் இது..... அது பிறகு விவரிக்கப்படும், அதாவது நம் வாழ்க்கையின் குறிக்கோள், குறைந்தது இந்த மானிட வாழ்க்கையில், ஆரியன் நாகரிகத்தில், இந்த வாழ்க்கையின் குறிக்கோள் நம் அரசியலமைப்பின் நிலையை புரிந்துக் கொள்வதற்காக, "நான் யார். நான் யார்." "நான் யார்," என்பதை நாம் புரிந்துக் கொள்ளவில்லை என்றால் பிறகு நாம் பூனைகளுக்கும் நாய்களுக்கும் சமமானவர்கள். பூனைகளுக்கும், நாய்களுக்கும், தெரியாது. தாங்கள்தான் இந்த உடல் என்று நினைக்கின்றன. அது பின் விவரிக்கப்படும். ஆகையால் இது போன்ற வாழ்க்கை நிலையில், நாம் பதற்றம் அடைந்தால்..... உண்மையிலேயே நாம் ஒவ்வொரு கணமும் பதற்றத்துடன்தான் இருக்கிறோம். ஆகையினால் ஒருவர் தகுதியான குருவை அணுக வேண்டியது அவசியமாகும். தற்பொழுது அர்ஜுனன் கிருஷ்ணரை அணுகுகிறார், முதல்ரகமான குரு. முதல்ரகமான குரு. குரு என்றால் முழுமுதற் கடவுள். அவரே எல்லோருக்கும் குரு, பரம குரு. ஆகையால் கிருஷ்ணரின் பிரதிநிதியாக யார் இருந்தாலும், அவரும் குருவே. அது நான்காம் அத்தியாயத்தில் விவரிக்கப்படும். ஏவம் பரம்பரா-ப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விதுஹ (பகவத் கீதை 4.2). ஆகையால் கிருஷ்ணர் உதாரணம் காட்டுகிறார், நாம் எங்கு சரணடைந்து குருவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று. கிருஷ்ணர் இங்கு இருக்கிறார். ஆகையால் நீங்கள் கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அவரது பிரதிநிதியை குருவாக ஏற்றுக் கொள்ளவேண்டும். அதன் பின்னர் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றபடி அது சாத்தியமாகாது, ஏனென்றால் உங்களுக்கு எது நல்லது, எது தீயது என்று அவரால் சொல்ல முடியும். அவர் கேட்கிறார், யச்ரேயஹ ஸ்யான்நிஷ்சிதம் ப்ரூஹி தத் (பகவத் கீதை 2.7). நிஷ்சிதம். உங்களுக்கு அறிவுரை, போதனை, நிஷ்சிதம், இது சந்தேகமின்றி, எந்த மாயையும் இல்லாது, பிழைகள் ஏதுமின்றி, வஞ்சகமின்றி, இதைத்தான் நிஷ்சிதம் என்று கூறுகிறோம். இதை நீங்கள் கிருஷ்ணரிடம் இருந்தோ அல்லது அவருடைய பிரதிநிதிகளிடம் இருந்தோ அறிந்துக் கொள்ளலாம். சரியான தகவலை நிறைவடையாத-ஒருவரிடம் இருந்தோ அல்லது வஞ்சகமானவரிடம் இருந்தோ உங்களால் அறிந்துக் கொள்ள முடியாது. அது சரியான அறிவுரை ஆகாது. இன்றைய நாட்களில் இது ஒரு பாணியாக இருக்கிறது, எல்லோரும் குருவாகிறார்கள் அத்துடன் அவர் தன் சொந்த கருத்தைக் கொடுக்கிறார், "நான் நினைக்கிறேன்," "என் கருத்துப்படி." அவர் குருவல்ல. குரு என்றால் அவர் சாஸ்திரத்தில் இருந்து ஆதாரங்கள் கொடுக்க வேண்டும். யஹ சாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காம காரதஹ: (பகவத் கீதை 16.23) "யாராயினும், சாஸ்திரத்தில் இருந்து, ஆதாரம், சான்று, கொடுக்காவிட்டால், பிறகு" நா ஸித்திம் ஸ அவாப்னோதி, "அவருக்கு எந்த நேரத்திலும் வெற்றி கிடைக்காது," ந ஸுகம், "அது மட்டும் அல்ல இந்த பௌதிக உலகில் எந்த சந்தோஷமும் கிடைக்காது," ந பராம் கதிம், "அத்துடன் மறுபிறவிக்கு உயர்த்தப்படுவதைப் பற்றி என்ன சொல்வது." இவைகள்தான் விதிக்கப்பட்ட தடைகள்.