TA/Prabhupada 0037 - கிருஷ்ணரை பற்றி அறிந்திருப்பவர் யாராயினும் அவர் குரு ஆவார்
Lecture on BG 7.1 -- Hong Kong, January 25, 1975
ஆகையால் நம்மால் பகவானின் சக்தியை எவ்வாறு புரிந்துக்கொள்ள முடியும், அவருடைய படைப்பின் சக்திகளை எவ்வாறு புரிந்துக்கொள்ள முடியும், அத்துடன் பகவானின் ஆற்றலின் வீரியம் என்ன, அதை அவர் எவ்வாறு செயல் படுத்துகிறார், இவை அனைத்தும் கூட விஞ்ஞானம். அதுவே கிருஷ்ணர் அறிவியல் என்று கூறப்படுகிறது. கிருஷ்ண-தத்வ-ஞானா. யே கிருஷ்ண-தத்வ-வெட்தா, செய் குரு ஹெய (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 8.128). குரு என்பவர் யார் என்று சைதன்ய மஹாபிரபு சொன்னார். குரு என்றால் யே கிருஷ்ண-தத்வ-வெட்தா, செய் குரு ஹெய: "கிருஷ்ணரைப் பற்றி அறிந்திருப்பவர் யாராயினும், அவர் குரு ஆவார்". குரு உற்பத்தி செய்யப்படுவதில்லை. கிருஷ்ணரை கூடுமானவரை அறிந்திருக்கும் யாராயினும் அவர் குரு ஆவார். நாம் அறிந்துக் கொள்ள முடியாது. நம்மால் கிருஷ்ணரை நூறு சதவிகிதம் தெரிந்துக் கொள்ள முடியாது. அது இயலாததாகும். கிருஷ்ணரின் சக்திகள் அளவிட முடியாதது. பராஸ்ய ஸக்திர் விவிதைவ ஸுருயதெ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 13.65 பொருளுரை). ஒரு சக்தி ஒரு விதமாகவும், மற்றொரு சக்தி வேறு விதமாகவும் செயல் புரியும். ஆனால் அவை அனைத்தும் கிருஷ்ணரின் சக்தியாகும். பராஸ்ய ஸக்திர் விவிதைவ ஸுருயதெ. மயாத்யக்ஷேண ப்ரக்ருதிஹ ஸுயதே ஸசராசரம் (பகவத் கீதை 9.10). ப்ரக்ருதிஹ என்றால் இந்த மலர் இயற்கையிலிருந்து வெளியே வருவதைப் பார்க்கிறோம், மலர்கள் மட்டும் அல்ல, பல பொருள்கள் வெளியே காட்சி அளிக்கின்றன - விதையின் மூலமாக. ரோஜா விதையிலிருந்து, ரோஜா செடி வளரும். பீலா விதையிலிருந்து, பீலா செடி வளரும். ஆகையால் இது எப்படி தோன்றுகிறது. அதே நிலம், அதே தண்ணீர், விதைகள் கூட ஒரே மாதிரியாக காட்சி அளிக்கிறது, ஆனால் வெளியே வருவது வெவ்வேறாக இருக்கிறது. அது எப்படி சாத்தியமாகும்? அதைத்தான் பராஸ்ய ஸக்திர் விவிதைவ ஸுருயதெ ஸ்வாபாவிகீ ஞானா என்று கூறுகிறோம். சாதாரண மனிதனோ அல்லது விஞ்ஞானி என்பவரோ, "இது இயற்கையின் உருவாக்கம்." என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இயற்கை என்றால் என்னவென்று தெரியாது, இந்த இயற்கையின் நடவடிக்கைகளை யார் மேற்பார்வை செய்கிறார்கள், இந்த பௌதிக இயற்கை, எவ்வாறு இயங்குகிறத. அது பகவத் கீதையில் சொல்லப்படுகிறது, மயாத்யக்ஷேண (பகவத் கீதை 9.10). கிருஷ்ணர் சொல்கிறார் "என் கண்காணிப்பின் கீழ் இயற்கை இயங்குகிறது." அதுதான் உண்மை, இயற்கை, கருப்பொருள்கள் தன்னியக்கமாக இணைய முடியாது. இந்த வானளாவிய கட்டிடங்கள், இவை கருப்பொருள்களால் படைக்கப்பட்டவை, ஆனால் கருப்பொருள் தானாக வானளாவிய கட்டிடமாக வரவில்லை. அது இயலாதது. அங்கே ஒரு சிறிய ஆன்மா உள்ளது, பொறியியலாளர், அல்லது கட்டிடக் கலைஞர், அந்த கருப்பொருளைக் கொண்டு அதை அலங்கரித்து வானளாவிய கட்டிடத்தை உருவாக்கினார்கள். அதுதான் நம்முடைய அனுபவம். ஆகையால் கருப்பொருள் தன்னிச்சையாக இயங்குகிறது என்று நாம் எவ்வாறு கூற முடியும்? கருப்பொருள் தன்னிச்சையாக இயங்கவில்லை, அதற்கு சிறந்த அறிவு தேவைப்படுகிறது, உயர்ந்த திறமையான கையாளர் தேவை, ஆகையினால் உயர்ந்த் அதிகாரம். இந்த பௌதிக உலகில் நமக்கு கணக்காக இருக்கும் உயர்ந்த ஆணை, சூரியன், அதன் இயக்கம், வெப்பச் சக்தி, சூரியனின் ஒளிச் சக்தி, ஆகையால், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? அது சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. யஸ்யாஞயா ப்ராமதி ஸ்ம்பர்தா-கால-சக்ரொ கோவிந்தம் ஆதி-புருஷ்ம் தமஹம் பஜாமி. சூரியக் கோளும் இந்த கோளைப் போல் ஒரு கோள்கிரகம்தான். இந்த கோளில் இருப்பது போல் அங்கேயும் பல ஜனாதிபதிகள் இருக்கலாம், ஆனால் முற்காலத்தில் அங்கே ஒரு ஜனாதிபதி மட்டுமே இருந்தார். ஆகையால் அதேபோல், ஒவ்வொரு கோளிலும் ஒரு ஜனாதிபதி இருப்பார். சூரியக் கோளில் இந்த அறிவை நாம் பகவத் கீதையிலிறுந்து பெறுகிறோம். கிருஷ்ணர் சொல்கிறார், இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான ஹமவ்யயம் (பகவத் கீதை 4.1) "நான் முதன் முதலில் பகவத் கீதையின் அறிவியலைப் பற்றி விவஸ்வானிடம் கூறினேன்." விவஸ்வான் என்றால் சூரிய கோளின் ஜனாதிபதி, அவர் மகன் மனு. இதுதான் அந்த நேரம். அந்த நேரம் போய்க்கொண்டே இருக்கும். இது வைவஸ்வதா மனு காலம் என்று கூறப்படுகிறது. வைவஸ்வதா என்றால் விவஸ்வானிடம் இருந்து, அவருடைய மகன். அவர் வைவஸ்வதா மனு என்று அழைக்கப்படுகிறார்.