TA/Prabhupada 0051 - மந்தமான அறிவுள்ளவர்களால் இந்த உடலுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று புரிந்துக் கொள்
Interview with Newsweek -- July 14, 1976, New York
பேட்டியாளர்: சில நாட்களில் கிருஷ்ணர் பக்தி இயக்கம் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பரவும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பிரபுபாதர்: அது சாத்தியம் இல்லை. அது பெரும்பாலும் மிகுந்த அறிவுள்ள வகுப்பை சேர்ந்த மக்களுக்காக ஆனது. ஆகையால் இது, இந்த இயக்கம், மிகுந்த அறிவுள்ள வகுப்பை சேர்ந்த மக்களுக்காக ஆனது. பேட்டியாளர்: ஆனால், மிகுந்த அறிவுள்ள வகுப்பை சேர்ந்த மக்களுக்குள். பிரபுபாதர்: ஒருவர் அறிவாளிகளின் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லையெனில், அவரால் புரிந்துக் கொள்ள முடியாது. ஆகவே எல்லோரும் அறிவாளிகலாக இருப்பார்கள் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. கிருஷ்ண எ பஜ சே படா சத்துர. ஒருவர் மிகவும் புத்திசாலியாக இல்லாவிடால், அவரால் கிருஷ்ண பக்தி உணர்வு உடையவராக ஆக இயலாது, ஏனெனில் அது வேறுவகையான விஷயம் ஆகும். மக்களின் வாழ்க்கை உடல் என்ற கருத்தில் மூழ்கியுள்ளது. அது அதற்கு அப்பாற்ப்பட்டது. எனவே, எது இந்த உடலுக்கு அப்பாற்ப்பட்டதோ, அதை மந்தமான மூளையால் புரிந்து கொள்ள இயலாது. ஆகையால் எல்லோரும் கிருஷ்ணர் உணர்வை புரிந்துக் கொள்வார்கள் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கக் கூடாது. அது சாத்தியம் அல்ல. பேட்டியாளர்: மனித சமுதாயத்தின் மரபணு பூரணத்துவம் பற்றி அதிகமாக பேசப்படுகிறது, அல்லது மரபணு பூரணத்துவத்திற்கு முயற்சிக்கிறார்கள் என்று கூறலாம். பிரபுபாதர்: மரபணு என்றால் என்ன? பேட்டியாளர்: நன்று. மரபணு பூரணத்துவம் என்றால் என்ன? பாலி மர்தனா: மரபணு அறிவியலைப் பற்றி நேற்று நாம் விவாதித்துக் கொண்டிருந்தோம். அவர்கள் அதன் தனித்தன்மையை புரிந்துக் கொள்ள முயற்சித்து, உடலும் மனமும் எவ்வாறு உருவானது, பிறகு அதனை மாற்ற முயற்சிக்கின்றனர். பிரபுபாதர்: ஏற்கனவே அதை பற்றி, அந்த புத்தகம் எங்கே? ராமேஸ்வர: ஸ்வரூப தாமொதருடைய புத்தகம். பிரபுபாதர்: ஆம். கொண்டு வாருங்கள். ராமேஸ்வர: உங்கள் கேள்வி என்ன? பேட்டியாளர்: எனது கேள்வி, நீங்கள் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதைப் பற்றி முன்பு கூறினீர்கள், மேலும், ஏதோ சில சமூகத்தில், அங்கே சில, பிரபுபாதர்: அந்த புத்தகம் இங்கே இல்லையா? எங்குமில்லையா? பேட்டியாளர்: நான் உங்களைக் கேட்க வேண்டும். தொழில்நுட்ப மூலம் என்றால் மனித சமுதாயம் ஓரளவு முன்னேற்றம் அடைந்து விட்டது, வேறுவிதமாக கூறினால், சராசரி மனிதன் அதி புத்திசாலியாக இருக்கிறார், இப்பொழுது நீங்கள் யாரை புத்திசாலியாக கருதுகிறீர்கள். பிரபுபாதர்: புத்திசாலியான மனிதர், ஒருவர் தான் இந்த உடல் அல்ல என்பதை புரிந்துக் கொண்டால் - அவர் இந்த உடலுக்குள் இருப்பவர். எவ்வாறு என்றால் உங்களிடம் ஒரு சட்டை இருக்கிறது. நீங்கள் அந்த சட்டை அல்ல. யாராக இருந்தாலும் புரிந்து கொள்ளவார்கள். நீங்கள் சட்டையினுள் இருப்பவர் என்று. அதுபோலவே, ஒருவர் தான் இந்த உடல் அல்ல என்று புரிந்து கொண்டால் - அவர் இந்த உடலுக்குள் இருப்பவர், அதை யார் எவரும் புரிந்து கொள்ள முடியும், ஏனெனில், இந்த உடல் இறந்தவுடன், என்ன வேறுபாடு உள்ளது? ஏனெனில், உடலுக்குள் இருக்கும் வாழவைக்கும் சக்தி சென்றுவிட்டது, ஆகையினால் நாம் இந்த உடலை இறந்துவிட்டது என்று கூறுகிறோம். பேட்டியாளர்: ஆனால் அங்கே சில மிகுந்த திறமைசாலிகள் ஆன்மீக ஞானம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள், பெரும்பாலும், தாங்கள் இந்த உடல் அல்ல, உடலே அனைத்தும் அல்ல என்பதைப் புரிந்து கொள்பவர்கள் கூட, இந்த உடல் இறந்துவிட்டது, மேலும் வேறு ஏதோ இருக்கிறது. ஏன் இந்த ஆடவர்கள் ஆன்மீக விழிப்புணர்வு உள்ளவர்களாக இல்லை? பிரபுபாதர்: தான் இந்த உடல் இல்லை, என்ற எளிமையான பொருள் ஒருவருக்கு புரியவில்லை என்றால், அவர் மிருகத்தை விட எந்த விதத்திலும் சிறந்த்வர் அல்ல. அதுதான் ஆன்மீக தளத்தில் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டியது. அவர் தான் இந்த உடம்பு என்று நினைத்தால், பிறகு அவரும் மிருகங்களின் இனத்தைச் சேர்ந்தவரவர். ராமேஸ்வர: மாதின் கேள்வி என்னவென்றால், ஒருவேளை ஒருவருக்கு இறந்த பின்னும் மறுவாழ்வு உண்டு என்னும் சமய நம்பிக்கை இருந்தால், அத்துடன் பெளதீக தரத்தின்படி அவரும் ஒரு அறிவாளி ஆவார். ஏன் அவர் தன்னியக்கமாக இல்லை? பிரபுபாதர்: இல்லை, பௌதீக தரம் அறிவாளியாகாது. பௌதீக தரம் என்றால் "நான் இந்த உடல். நான் ஒரு அமெரிக்கன். நான் ஒரு இந்தியன். நான் ஒரு நரி. நான் ஒரு நாய். நான் ஒரு ஆடவன்." இதுதான் பௌதீக புரிந்துணர்தல். ஆன்மீக புரிந்துணர்தல்அதற்கு அப்பால்பட்டது, அதாவது "நான் இந்த உடல் அல்ல." அத்துடன் அவர் அந்த ஆன்மீக அடையாளத்தை புரிந்துக் கொள்ள முயற்சிக்கும் பொழுது, பிறகு அவர் அறிவாளியாவார். மற்றபடி அவர் அறிவாளியாகமாட்டார். பேட்டியாளர்: ஆகையால் இதன் அர்த்தம், பிரபுபாதர்: அவர்கள் மூடா: என்று வர்ணிக்கப்படுகிறார்கள், மூடா என்றால் முட்டாள்கள். ஆகையால் இதுதான் முதல் புரிந்துணர்தல், அதாவது ஒருவரை இந்த உடலால் அடையாளம் காட்டக் கூடாது. பேட்டியாளர்: எந்த புரிந்துணர்தல் அடுத்து வருகிறது? பிரபுபாதர்: சும்மா நாய் போல. நாய்க்கு புரியும் அதாவது அது உடம்பு என்று. ஒரு ஆடவரும் அவ்வாறு புரிந்துக் கொண்டால் - அவர் உடல் என்று - பிறகு அவர் நாயைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர் அல்ல. பேட்டியாளர்: வேறு எந்த புரிந்துணர்தல் இதற்கு பிறகு வருகிறது? பாலி மர்தனா: நாம் இந்த உடல் அல்ல என்பதை உணர்ந்த பின்னர், அடுத்து என்ன வருகிறது? பிரபுபாதர்: ஹா! அது புத்திசாலியான கேள்வி. பிறகு ஒருவர் கண்டுபிடிக்க வேண்டும் அதாவது "நான் வாழ்க்கையின் உடல் சார்ந்த கருத்தில் மட்டும் ஈடுபட்டிருக்கிறேன். பிறகு என் ஒப்பந்தம் என்ன?" இதுதான் ஸநாதன கோஸ்வாமியின் விசாரணை, அது "நீங்கள் என்னை இந்த பௌதீக ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்திர்கள். இப்பொழுது என் கடமை என்ன என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள்." அந்த காரணத்திற்கு ஒருவர் ஆன்மீக குருவிடம் செல்ல வேண்டும், அதை அறிந்துக்கொள்ள, அவருடைய கடமை இப்பொழுது என்ன என்பதை புரிந்துக் கொள்ள. "நான் இந்த உடல் இல்லையென்றால், பிறகு என் கடமை என்ன? ஏனென்றால் இந்த உடம்பிற்காக நாள் முழுவதும் இரவு பகலாக ஓய்வில்லாது இயங்குகிறேன். நான் சாப்பிடுகிறேன், நான் தூங்குகிறேன் நான் உடலுறவில் ஈடுபடுகிறேன், நான் தற்காப்பு அளிக்கிறேன் - இவை அனைத்தும் உடல் சம்மந்தப்பட்ட தேவைகள். நான் உடல் இல்லையென்றால், பிறகு என் கடமை என்ன"? அதுதான் அறிவாற்றல். ராமேஸ்வர: ஆகையால் நீங்கள் கூறினீர்கள், "நீங்கள் இந்த உடல் இல்லை என்பதை உணர்ந்த பின்னர் அடுத்த வேலை என்ன?" பிரபுபாதர் கூறுகிறார், அடுத்த வேலை நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டு பிடிப்பதாகும், அத்துடன் அதற்காக, நீங்கள் தன்னை உணர்ந்த ஆத்மா, அல்லது ஆன்மீக குருவிடமிருந்து விபரம் கேட்டுக் கொள்ள வேண்டும். பேட்டியாளர்: ஆன்மீக குரு. அவருடைய புத்தக வடிவில். பாலி மர்தனா: தனிப்பட்ட முறையிலா அல்லது, புஸ்த கிருஷ்ண: பிரபுபாதர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் அதாவது தற்பொழுது உடல் சார்ந்த கருத்தில் நமக்கு பல கடமைகள் உள்ளன. நாம் வேலை செய்கிறோம், நாம் உடலுறவு கொள்கிறோம், நாம் சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், நம்மை தற்காத்துக் கொள்கிறோம் - பல விதமான வேலைகள். இவை அனைத்தும் உடல் சம்மந்தப்பட்ட உறவுகள். ஆனால் நான் இந்த உடல் இல்லையென்றால், பிறகு என் கடமை என்ன? என் பொறுப்பு என்ன? ஆகையால் அடுத்தது இதனை ஒருவர் புரிந்துக் கொண்டால், பிறகு அவர் ஆன்மீக குருவிடமிருந்து அறிவுரை பெறவேண்டும், முன்னேற்றம் அடைந்து உண்மையான கடமை எதுவென்று புரிந்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. பிரபுபாதர்: சாப்பிடுவது, தூங்குவது, உடலுறவு கொள்வது தன்னை காத்துக் கொள்வது ஆயினும் கூட ஆசிரியரிடமிருந்து ஞானம் பெற வேண்டும். உண்பதை எடுத்துக்கொண்டால், நாம் வல்லுணரிடம் எம்மாதிரியான உணவு உட்கொள்ளலாம் என்று அறிவுரை பெற வேண்டும், எம்மாதிரியான ஊட்டச்சத்து, எந்த மாதிரி, ஆகையால் அதற்கு கூட கல்வி தேவைப்படுகிறது. அத்துடன் தூங்குவதற்கு கூட கல்வி தேவைப்படுகிறது. ஆகையால் வாழ்க்கையின் உடல் சார்ந்த கருத்துக்கு ஒருவர் ஞானத்தை மற்றவரிடமிருந்து பெற வேண்டும். ஆகையால் அவர் வாழ்க்கையின் உடல் சார்ந்த கருத்தை விட உயர்ந்தவறாக இருந்தால் - அவர் புரிந்துக்கொள்வார், அதாவது "நான் இந்த உடல் அல்ல, நான் ஆன்மா" - ஆகையால் அதேபோல் அவர் பாடமும் கல்வியும் ஒரு வல்லுணரிடமிருந்து கற்க வேண்டும்.