TA/Prabhupada 0052 - பக்தாவிர்கும் கர்மிக்கும் இடையில் உள்ள வித்தியாசம்



Lecture on SB 1.2.9-10 -- Delhi, November 14, 1973

இதுதான் பக்திக்கும் கர்மாவிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம். கர்மா என்பது உணர்வுகளின் திருப்தி, அத்துடன் பக்தி என்றால் இறைவனை திருப்தி படுத்தல், ஒரே பொருள். ஆகையினால் மக்களால் பக்தருக்கும் கர்மிக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. கர்மி தன் சொந்த உணர்வுகளைத் திருப்தி படுத்துகிறார், மற்றும் பக்தர் கிருஷ்ணரின் உணர்வுகளுக்கு திருப்தி அளிக்கிறார்கள். அங்கே கொஞ்சம் புலன்நுகர்வு நோக்கம் இருக்கும். ஆனால் நீங்கள் கிருஷ்ணரை திருப்தி அடையச் செய்தால், அதை பக்தி என்கிறோம். ஹிர்ஷீகெணா ஹிர்ஷீகெஷா-செவநாம் பக்திர் உசையெத (ஸி. ஸி. மத்திய19.170) ஹிர்ஷீக என்றால் உணர்வு, தூய்மையான உணர்வு. அதை நான் அன்றொருநாள் விவரித்தேன், அதாவது ஸர்வொபாதி-விநிர்முக்தம் தத்-ப்ரத்வினா நிர்மளம் ஹிர்ஷீகெணா ஹிர்ஷீகெஷா-செவநாம் பக்திர் உசையெத ([[Vanisource:CC Madhya 19.170|ஸி. ஸி. மத்திய19.170) பக்தி என்றால் உங்கள் வேலையை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. பக்தி என்றால் உணர்ச்சிப்பூர்வமான மதவெறியர் என்று அர்த்தமல்ல. அது பக்தியல்ல. பக்தி என்றால் நம் அனைத்து உணர்வுகளையும் உணர்வுகளின் உரிமையாளரின் திருப்திக்காக செயல்படுத்துவதாகும். அதைத்தான் பக்தி என்கிறோம். ஆகையினால் கிருஷ்ணரின் பெயர் ஹ்ரிஷீகேசா. ஹ்ரிஷீக என்றால் உணர்வுகள். மேலும் ஹ்ரிஷீக ஈஸா, அவர் தான் புலன்களை கட்டுப்படுத்துபவர். உண்மையிலேயே, நம் புலன்கள் சுதந்திரமாக வேலை செய்யவில்லை. நம்மால் அதை புரிந்துக் கொள்ள முடியும். கிருஷ்ணர் வழி காட்டுகிறார். ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞானம் பபோஹனம் ச (ப.கீ.15.15). மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞானம் பபோஹனம் ச. ஒரு விஞ்ஞானி வேலை செய்கிறார் ஏனென்றால் கிருஷ்ணர் அவருக்கு துணை புரிகிறார், அவர் சுயேட்சியாக செய்கிறார் என்பதல்ல. அது சாத்தியமல்ல. ஆனால் அவர் அந்த வழியை விரும்புகிறார். ஆகையினால் கிருஷ்ணர் அவருக்கு வசதிகளைக் கொடுக்கிறார். ஆனால் உண்மையிலேயே, கிருஷ்ணர் வேலை செய்கிறார். இவைகள் உபநிஸத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் வேலை செய்யாமலும், பார்க்காமலும், கிருஷ்ணரின் பார்வை இல்லாமல், உங்களால் பார்க்க முடியாது. உதாரணத்திற்கு ப்ரம-ஸம்ஹீதாவில் சூரிய ஒளியைப் பற்றி விவரித்துள்ளார்கள். யச்-சக்ஸுர ஏஸா சவிதா சகல-க்ரஹாநாம் சூரியன் கிருஷ்ணரின் கண்களில் ஒன்று ஆகும். யச்-சக்ஸுர ஏஸா சவிதா சகல-க்ரஹாநாம் ராஜா சமஸ்த-சுர- மூர்திர் எஸேஸா-தெஜா: யஸ்யாஞாயா ப்ரமதி சம்பர்த-கால-சக்ரொ கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹாம் பஜாமி ஆகையினால், சூரியன் கிருஷ்ணரின் கண்களில் ஒன்றாக இருப்பதால், ஏனென்றால் சூரியன் அங்கே உதயமாகிறது, ஏனென்றால் சூரியன் பார்த்துக் கொண்டு இருக்கிறது, ஆகையினால் நீங்களும் பார்க்கிறீர்கள். நீங்கள் சுயேட்சியாக பார்க்க முடியாது. உங்கள் கண்களைப் பற்றி அதிகமாக பெருமை கொள்கிறீர்கள். சூரிய ஒளி இல்லையெனில் உங்கள் பார்வையின் மதிப்பு என்ன? உங்களால் பார்க்க முடியாது. இந்த மின்சாரம் கூட, சூரியனிலிருந்து உற்பத்தியாகிறது. ஆகையால், உண்மையிலேயே கிருஷ்ணர் பார்க்கும் பொழுது, நீங்கள் பார்க்க முடியும், அதுதான் தோற்ற நிலை. ஆகையால் நம் புலன்கள், பகவத் கிதையில் கூறப்பட்டுள்ளது, ஸர்வத: பாணி பாதம் தத். ஸர்வத: பாணி பாதம் தத். அனைத்து இடங்களிலும் கிருஷ்ணரின் கைகளும் கால்களும் இருக்கிறது. அது என்ன? என் கைகள், உங்கள் கை, உங்கள் கால் - அது கிருஷ்ணருடையது. உதாரணத்திற்கு ஒருவர் எனக்கு உலகமெங்கும் கிளைகள் இருக்கிறது என்று சொன்னால். ஆகையால் அந்த கிளைகள் நித்தியமான அதிகாரியின் நிர்வாகத்தில் இயங்குகிறது. அதேபோல், கிருஷ்ணரும் அவ்வாறே. ஆகையினால் கிருஷ்ணர் ஹ்ரிஷிகேஸா என்று அழைக்கப்படுகிறார், ஹ்ரிஷிகேஸா. ஆகையால் வியாபாரம் என்பது, பக்தி என்றால் நாம் ஹ்ரிஷிகாவில் ஈடுபடும்பொழுது, நம் இந்திரயங்கள், நம் புலன்கள், புலன்களின் உரிமையாளருக்கு பணி புரிதல். அதுதான் நம்முடைய பூரணமான வாழ்க்கை அதுதான் நம்முடைய பூரணமான வாழ்க்கை. ஆனால் நாம் உடனடியாக நம் புலன்களை திருப்தி படுத்த விருப்பம் கொண்டு புலன்களை பயன்படுத்தினால், அது கர்மா என்று கூறப்படுகிறது. அது பௌதிக வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது. ஆகையினால், ஒரு பக்தருக்கு எதுவும் பௌதீகமல்ல. அதுதான் ஈஸாவாஸ்யம் இதாம் சர்வம் (ஐசோ 1). பக்தர் பார்வைக்கு அனைத்தும் கிருஷ்ணருக்கே சொந்தமாகும். ஈஸாவாஸ்யம் இதாம் சர்வம் யத் கின்ச ஜகதியாம் ஜகத், தெனா தியாக்தெனா புண்ஜீதா. அனைத்தும் கிருஷ்ணருக்குச் சொந்தமானது. ஆகையினால் கிருஷ்ணர் நமக்கு கொடுப்பது ஏதாயினும் உதாரணத்திற்கு ஒரு எஜமானர் போல. எஜமானர் வேலைக்காரருக்கு ஏதோ ஓர் அளவுக்கு ஒதிக்கிவைக்கிறார், "நீங்கள் இதை அனுபவிக்கலாம்." அந்த ப்ரசாதம். ப்ரசாதெ சர்வ-துக்ஹாநாம் ஹாநிர் அஸ்யொபஜா. இதுதான் வாழ்க்கை. நீங்கள் கிருஷ்ணர் உணர்வானால், நீங்கள் புரிந்துக்கொண்டால் அதாவது "அனைத்தும் கிருஷ்ணருக்குச் சொந்தமானது, என் கைகளும் கால்களும் கூட, அவைகளும் கிருஷ்ணருக்குச் சொந்தமானது, என் உடலின் அனைத்து பாகங்களும், அவைகளும் கிருஷ்ணருக்குச் சொந்தமானது, அவ்வாறென்றால் இவை கிருஷ்ணருக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்," அதைத்தான் பக்தி என்று கூறுகிறோம். அன்யாபிலாஸிதா-ஸூன்யம் ஞான-கர்மாதி-அனாவ்ரதம் ஆநுகூல்யெந கிருஷ்ணானு-ஸீலனாம் பக்திர் உத்தமா (பரம.ச 1.1.11) அதை கிருஷ்ணர் செய்தார், அர்ஜுனர் செய்தார். அவர் தன் புலன்களை போர் புரியாமல் திருப்திபடுத்த விரும்பினார். ஆனால் அவர் பகவத் கீதையை கேட்ட பின்னர் சம்மதித்தார் அதாவது "ஆம், கிருஷ்ணர் முழுமுதற் கடவுள்." அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமன்விதா: (ப.கீ.10.8) இதன் பொருளுரை பகவத் கீதையில் மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. அதுதான் ஆன்மீக வாழ்க்கையின் தொடக்க நிலை கல்வி. அத்துடன் நாம் உண்மையிலேயே பகவத் கீதை கற்றதில் நிறைவு கண்டால், பிறகு நாம் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும். கிருஷ்ணர் அதை விரும்புகிறார். ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (ப.கீ.18.66). அதை அவர் விரும்புகிறார். நாம் உண்மையிலேயே இந்த முறையை பின்பற்றினால், இது ஸ்ரட்தா என்று கூறப்படுகிறது. ஸ்ரட்தா. ஸ்ரட்தாவின் பொருள் என்ன என்பதை கவிராஜ் கோஸ்வாமியால் விவரிக்கப்பட்டுள்ளது.