TA/Prabhupada 0065 - எல்லோரும் ஆனந்தம் அடைவார்கள்
Arrival Lecture -- Gainesville, July 29, 1971
பெண் விருந்தினர்: இந்த இயக்கத்தில் மற்றவர்களுக்கு இடம் உண்டா யார் என்றால் நாள் முழுவதும் ஹரே கிருஷ்ணா ஜபித்தலைக் காட்டிலும் மறைமுகமாக கிருஷ்ணருக்கு சேவை செய்பவர்கள்? பிரபுபாதர்: இல்லை, இதன் செயல்முறை எவ்வாறு என்றால், நீங்கள் மரத்தின் வேரில் தண்ணீர் ஊற்றினால், அந்த தண்ணீர் இலைகளுக்கும், கிளைகளுக்கும், சுள்ளிகளுக்கும் வினியோகமாகி அவை செழுப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் இலையில்மட்டும் தண்ணீர் ஊற்றினால், அந்த இலையும் காய்ந்துவிடும், அத்துடன் மரமும் காய்ந்துவிடும். உங்கள் உணவு வகைகள் வயிற்றுக்குள் சென்றால், பிறகு அதன் சக்தி உங்கள் விரலுக்கு, உங்கள் தலைமுடிக்கு உங்கள் நகத்திற்கும் மற்றும் எல்லா உறுப்புகளுக்கும் வினியோகமாகும். மற்றும் நீங்கள் உணவை கையில் ஏந்திக் கொண்டு அதை வயிற்றுக்கு கொடுக்காவிட்டால், அது பயனற்று வினாகிவிடும். ஆகையால் அனைத்து மனிதாபிமான சேவையும் பலனற்று போய்விடும், ஏனென்றால் அங்கு கிருஷ்ணர் உணர்வு இல்லை. அவர்கள் மனித சமுதாயத்திற்கு சேவை செய்ய பல வழிகளில் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அனைவரும் பயனற்ற முயற்சியினால் வெறுத்து போகிறார்கள், ஏனென்றால் அங்கே கிருஷ்ணர் உணர்வு இல்லை. ஆனால் மக்கள் கிருஷ்ணர் உணர்வு பெற பயிற்சி அளிக்கப்பட்டால், பிறகு தன்னியக்கமாக அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். யாராவது சேர்ந்தால், ஒருவர், யாராவது கேட்டால், யாராவது ஒத்துழைத்தால் - அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆகையால் எங்கள் செயல்முறை ஒரு இயற்கையான செய்முறை. நீங்கள் இறைவனை நேசிக்கிறீர்கள், அத்துடன் நீங்கள் உண்மையிலேயே இறைவனை நேசிப்பதில் திறமைசாலியானால், இயல்பாகவே நீங்கள் அனைவரையும் நேசிப்பீர்கள். எவ்வாறு என்றால் கிருஷ்ணர் உணர்வு நபர், இறைவனை நேசிப்பதால், அவர் மிருகங்களையும் நேசிக்கிறார். அவர் பறவைகளை, மிருகங்களை, அனைவரையும் நேசிக்கிறார். ஆனால் பொதுவாக அழைக்கப்படும் மனித நேயம் என்றால் அவர்கள் சில மனித பிறவிகளை நேசிக்கிறார்கள், ஆனால் மிருகங்கள் கொல்லப்படுகின்றன. அவர்கள் ஏன் மிருகங்களை நேசிக்கவில்லை? ஏனென்றால் அவர்கள் பக்குவமற்றவர்கள். ஆனால் கிருஷ்ணர் உணர்வில் இருப்பவர்கள் மிருகங்களை கொல்லவே மாட்டார்கள், அல்லது மிருகங்களுக்கு தொல்லை கூட கொடுக்கமாட்டார்கள். ஆனால் அது எல்லாவற்றையும் சார்ந்த நேசம். நீங்கள் உங்கள் சகோதரனையோ அல்லது சகோதரியையோ மட்டும் நேசித்தால், அது .எல்லாவற்றையும் சார்ந்த நேசமாகாது. எல்லாவற்றையும் சார்ந்த நேசம் என்றால், நீங்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும். அந்த எல்லாவற்றையும் சார்ந்த நேசம் கிருஷ்ணர் உணர்வினால் மேம்படுத்தப்பட முடியும், யாதேனுமொன்றால் அல்ல. பெண் விருந்தினர்: எனக்கு தெரிந்த சில பக்தர்களுக்கு நெருக்கடியான உறவுகள் இருந்தன, ஆகையால் பேசுவதற்கு, அவர்கள் பெளதிக உலக பெற்றோர்களுடன் பேசுவதற்கு, அது அவர்களுக்கு ஓரளவுக்கு கவலையைக் கொடுக்கிறது. ஏனென்றால் அவர்களுடைய பெற்றோர்களுக்கு புரியவில்லை. இப்பொழுது அவர்களிடம் நீங்கள் எதைச் சொல்லி ஒருவிதமாக இதைச் சுலபமாக்குவது? பிரபுபாதர்: நன்று, கிருஷ்ணர் உணர்வில் இருக்கும் ஒரு ஆடவன், அவர் தன் பெற்றோர்களுக்கு, குடும்பத்தினருக்கு, நாட்டுமக்களுக்கு, சமூகத்திற்கு, தன் சிறந்த சேவையை கொடுக்கிறார். கிருஷ்ணர் உணர்வில்லாமல், அவர்களுடைய பெற்றோர்களுக்கு என்ன சேவை செய்கிறார்கள்? பெரும்பாலும் அவர்கள் பிரிந்திருக்கிறார்கள். ஆனால் பிரஹலாத் மஹாராஜா ஒரு அபாரமான பக்தர் மேலும் அவர் தந்தை அபாரமான பக்தியற்றவர், அத்தகையவராதலால் அவர் தந்தை நரசிம்மதெவால் கொல்லப்பட்டார், ஆனால் பிரஹலாத் மஹாராஜா, இறைவனால் ஆசிர்வாதம் பெற கட்டளையிடப்பட்ட பொழுது, அவர் கூறுகிறார் அதாவது "நான் ஒரு வியாபாரி அல்ல, ஐயா, அதாவது உங்களுக்கு கொஞ்சம் சேவையளித்து அதற்கு பிரதிபலனை எதிர்பார்க்க. தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்." நரசிம்மதெவ் மிகவும் திருப்திக் கொண்டார்: "இதோ ஒரு தூய்மையான பக்தர்." ஆனால் அதே தூய்மையான பக்தர் இறைவனிடம் வேண்டினர், "என் இறைவனே, என் தந்தை ஒரு நாத்திகன், மேலும் அவர் பல பாவங்களை புரிந்துள்ளார், ஆகையால் நான் என் தந்தைக்கு முக்தி அளிக்க வேண்டுகிறேன்." மற்றும் நரசிம்மதெவ் கூறினார், "உன் தந்தை ஏற்கனவே முக்தி பெற்றுவிட்டார் ஏனென்றால் நீ அவருடைய மகன். அவர் பல குற்றங்கள் செய்திருப்பினும், அவர் முக்தியடைந்தார், ஏனென்றால் நீ அவருடைய மகன் என்பதால். உன் தந்தை மட்டுமல்ல, உன் தந்தையின் தந்தை, அவர் தந்தை என ஏழு தலைமுறைக்கு, அவர்கள் அனைவரும் முக்தி பெற்றனர்." ஆகையால் ஒரு வைஷ்ணவ ஒரு குடும்பத்தில் தோன்றினால், அவர் தன் தந்தைக்கு மட்டுமின்றி, அவர் தந்தை, அவர் தந்தை என்று அந்த வழியாக முக்தி அளிக்கிறார். ஆனால் ஒரு குடும்பத்திற்கு அதுதான் சிறந்த சேவை, கிருஷ்ணர் உணர்வாக வருவது. உண்மையிலேயே, இது நடந்தது, என்னுடைய மாணவர் ஒருவர், கார்த்திகேய, அவருடைய தாயார் சங்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், வழக்கமாக அவர் தன் தாயாரை பார்க்கப் போனால், தாயார் கூறுவார் "உட்கார், நான் நடன கொண்டாட்டத்திற்குப் போகிறேன்." அதுதான் அவர்களுடைய உறவுமுறை. இருப்பினும், ஏனென்றால் அவர், இந்த ஆடவர், கிருஷ்ணர் உணர்வுள்ளவர், தன் தாயாரிடம் பல முறை கிருஷ்ணரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். சாகும் தறுவாயில் தாயார் தன் மகனிடம் கேட்டார், "உன் கிருஷ்ணர் எங்கே? அவர் இங்கே இருக்கின்றாரா?" மேலும் அந்த மாது உடனே, அவர் இறந்துவிட்டார். அப்படியென்றால் சாகும் தறுவாயில் அவர் கிருஷ்ணரை நினைத்தார், மேலும் அவர் உடனே முக்தி பெற்றார். அது பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது, யம் யம் வாபி ஸ்மரன் லோகெ த்யஜத்யந்தே கலேவரம் (ப.கீ.8.6). சாகும் தறுவாயில் ஒருவர் கிருஷ்ணரை நினைத்தால், பிறகு வாழ்க்கை வெற்றிகரமாகும். ஆகையால் இந்த தாய், மகனால், கிருஷ்ணர் உணர்வு கொண்ட மகனால், உண்மையிலேயே கிருஷ்ணர் உணர்வுக்கு வராமலேயே, அவர் முக்தி பெற்றார். ஆகையால் இதுதான் அதன் சலுகை.